For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுவரை பதிவான மிகவும் மோசமான இயற்கை பேரழிவுகள்!

By Maha
|

என்ன நடக்க வேண்டும் என்று உள்ளதோ அது கட்டாயம் நடக்கும். என்ன தான் அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்திருந்தாலும், இயற்கை பேரழிவுகளை நிறுத்துவது என்பது முடியாத காரியம். இதுவரை ஏராளமான இயற்கை பேரழிவுகள் நடந்துள்ளன. இந்த இயற்கை பேரழிவுகளால் ஏராளமான உயிர்களையும் இழந்தோம்.

இயற்கை சீற்றத்தினால் அழிந்த உலக நகரங்கள்!!!

இங்கு நம்மை அச்சத்திற்கும், ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கிய மிகவும் மோசமான சில இயற்கை பேரழிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த இயற்கை பேரழிவுகளால் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயுள்ளன.

நேபாள நிலநடுக்கத்திற்கு பின் ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள் - ஆச்சரியம்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுனாமி (2011)

சுனாமி (2011)

ஜப்பானின் கிழக்கு கடற்கரையில் மார்ச் 11, 2011 ஆம் ஆண்டு சுனாமி பேரலை எழுந்தது. இது தான் வரலாற்றிலேயே கடலுக்கு அடியில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம். இந்த சுனாமியால் சுமார் 15,894 மக்கள் இறந்ததோடு, சுமார் 2,814 பேர் காணாமல் போயினர்.

பாகிஸ்தான் நிலநடுக்கம் (2005)

பாகிஸ்தான் நிலநடுக்கம் (2005)

இந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டேர் அளவில் பதிவானது மற்றும் இது காஷ்மீரில் உள்ள முசாபர் நகரம் அருகே மையப்புள்ளியாக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் 75,000 பேர் இறந்ததோடு, 106,000 பேர் படுகாயமடைந்தனர்.

Image Courtesy

நியூசிலாந்து நிலநடுக்கம் (2011)

நியூசிலாந்து நிலநடுக்கம் (2011)

இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டேர் அளவில் பதிவானது. இது 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரம் மிகவும் சேதமடைந்தது.

Image Courtesy

இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் (2004)

இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் (2004)

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 9.15 ரிக்டேர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தை சுமத்ரா-அந்தமான் நிலநடுக்கம் என்றும் அழைப்பர். இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியா, இலங்கை, தென்னிந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற பகுதிகளில் வாழ்ந்து வந்த 200,000 முதல் 310,000 பேர் இறந்தனர்.

Image Courtesy

கத்ரீனா சூறாவளி (2005)

கத்ரீனா சூறாவளி (2005)

இது மிகவும் பயங்கரமான சூறாவளி. இந்த சூறாவளி 2005 ஆம் ஆண்டு வளைகுடா கடற்கரை பகுதிகளைத் தாக்கியது. இந்த சூறாவளி அமெரிக்காவை தாக்கிய 6 ஆவது மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளியாக கருதப்படுகிறது.

Image Courtesy

நர்கீஸ் சூறாவளி (2008)

நர்கீஸ் சூறாவளி (2008)

2008 ஆம் ஆண்டு வட இந்திய பெருங்கடலைத் தாக்கிய முதல் சூறாவளி என்றால் அது இந்த நர்கீஸ் சூறாவளி தான். இந்த சூறாவளியால் 84,500 பேர் இறந்ததோடு, 53,800 பேர் காணாமல் போயினர்.

Image Courtesy

ஹெய்டி நிலநடுக்கம் (2010)

ஹெய்டி நிலநடுக்கம் (2010)

ஹெய்டியில் ஜனவரி 12, 2010 ஆம் ஆண்டில் 7.0 ரிக்டேர் அளவில் பயங்கர நிலநடுக்கம் பதிவானது. 1770 ஆண்டு முதல் ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே மிகவும் பயங்கரமானது இது தான். இந்த நிலநடுக்கத்தால் 200,000 பேர் இறந்தனர் மற்றம் சுமார் 2 மில்லியன் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து நடுதெருவில் இருந்தனர்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Worst Natural Disasters Ever Recorded

Check the disasters that shocked the world. Find out about the worst disasters that shook the world.
Desktop Bottom Promotion