For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிக்கன் 65க்கு எப்படி சிக்கன் 65 என பெயர் வந்தது தெரியுமா?

|

சிக்கன் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்தமான உணவு சிக்கன் 65. ஆனால், இதற்கு எப்படி இந்த பெயர் வந்தது என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? சிலர் 65 நாளான கோழியை சமைத்து பரிமாறுவதால் சிக்கன் 65 என்பார்கள்.

தயவு செய்து கூகுளில் இதெல்லாம் தேடாதீங்க... அப்புறம் பயந்துடுவீங்க...

இதை விட என்ன ஆச்சரியம் என்னவெனில், ஒரு சமயத்தில் இந்த சிக்கன் 65-யை சமைக்க 65 நாட்கள் ஆகும் அதனால் தான் இந்த பெயர் என்ற புரளியும் இருந்து வந்தது.

உலகில் மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் சில முட்டாள்தனமான மூடநம்பிக்கைகள்!

ஆனால், உண்மையில் சிக்கன் 65 என்ற உங்களுக்கு பிடித்தமான உணவின் பெயர் எப்படி உருவானது, யாரால் வைக்கப்பட்டது என்பதை அறிந்தால், நீங்க அப்படியே ஆடி போய்டுவிங்க, அசந்து போயிடுவிங்க...!!!

சரி வாங்க இனி எப்படி இந்த பெயர் வந்தது என பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகாரி

புகாரி

சென்னனயில் வசிப்பவர்களுக்கு மிகவும் பரிச்சயமான அசைவ உணவகம் ஹோட்டல் புகாரி. 50 - 60களில் இருந்து இந்த ஹோட்டல் இயங்கி வருகிறது. சென்னையில் பிரியாணிக்கும், சிக்கன் வகை உணவுகளுக்கும் மிகவும் பெயர் போன உணவகம் ஹோட்டல் புகாரி.

 எ.எம் புகாரி

எ.எம் புகாரி

இந்த உணவகத்தின் நிறுவனர் எ.எம். புகாரி என்பவர். ஏறத்தாழ புகாரி ஸ்பெஷல் பிரியாணியை சமைக்க இவர் 200 முறைகளில் பிரியாணி முயற்சித்தார் எனவும் சில தகவல்கள் கூறப்படுகின்றன.

 பெயர் காரணம்

பெயர் காரணம்

சிக்கன் 65 எனும் இந்த உணவு 1965-ம் ஆண்டு சமைக்கப்பட்டதால் தான் இந்த பெயர் பெற்றது. புகாரியில் சிக்கன் 65 மட்டுமின்றி சிக்கன் 78, 82, 90 போன்ற சிக்கன் உணவுகளும் இருக்கின்றன.

 1965 புதுவருடம்

1965 புதுவருடம்

1965 புத்தாண்டின் போது, அன்று ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட சிக்கன், விருந்துண்ண வந்த நபருக்கு எ.எம். புகாரி பரிமாறினார். ருசித்த பிறகு விருந்தாளி இந்த உணவின் பெயர் என்னவென்று கேட்ட நொடியில், அவர் சிக்கன் 65 என்று கூறினார். அப்படியே அந்த சிக்கன் உணவிற்கு சிக்கன் 65 என்ற பெயர் நிலைத்து போனது.

 தனித்தன்மை

தனித்தன்மை

இதன் பிறகு சிக்கன் 65 பல ஹோட்டல்கள் சமைக்க ஆரம்பித்தன. ஆனால், இப்போது வெறுமென எண்ணெயில் வாட்டுவதை எல்லாம் சிக்கன் 65 என கூறி விற்று வருகிறார்கள். ஏனோ, சிக்கன் 65க்கு கிடைத்த வரவேற்ப்பு மற்றும் தனிதன்மை சிக்கன் 78, 82, 90-க்கு கிடைக்கவில்லை.

சிறப்பு

சிறப்பு

அமிதாப் நடத்திய குரோர்பதி நிகழ்ச்சி சீசன் 1-ல் இந்த கேள்வி கேட்கப்பட்டது. இதுக் குறித்து இந்து நாளிதழில் கூட செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், சிக்கன் 65க்கு என தனி விக்கிபீடியா பக்கமும் கூட இருக்கிறது.

 கர்நாடகா

கர்நாடகா

சிக்கன் 65 என்பது கர்நாடக ஸ்டைலில் சமைக்கப்பட்ட உணவு. தேங்காய் அரைத்து, பாரம்பரிய முறையில் சமைக்கப்பட்டது சிக்கன் 65.

 அடடே!

அடடே!

இப்போ சொல்லுங்க அசந்து போயிட்டிங்களா! ஜஸ்ட் லைக் தட் என வைக்கப்பட்ட இந்த பெயருக்கு பின்னணி, காரணம் என நம்ம ஊர் மக்கள் எதை எதையோ சொல்லி வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why is the Chicken 65 called the Chicken 65?

Why is the Chicken 65 called the Chicken 65? read here in tamil.
Desktop Bottom Promotion