Latest Updates
-
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
தங்கத்தை விட 20 மடங்கு விலையுயர்ந்த உலோகம் எது தெரியுமா? இதை வைத்து என்னென்ன செய்றாங்க தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
18 மாதங்களுக்கு பின் கடக ராசிக்குள் நுழையும் கேது: இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம் -
ஓணம் ஸ்பெஷல் பழ நுருக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
தினமும் காலையில் 2 கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! -
சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் கோலாப்பூரி பச்சை பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
முகம் எப்பவும் எண்ணெய் வழிந்து அசிங்கமாக இருக்கா? அப்ப இந்த நேச்சுரல் கிளென்சரை யூஸ் பண்ணுங்க!
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலம் என்பதால் நிறைய பேர் சந்திக்கும் ஒரு முதன்மையான பிரச்சனை முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது. அதுமட்டுமின்றி தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் அதிகப்படியான வெப்பம் காரணமாக அதிகமாக வியர்ப்பதால், ஏராளமானோர் முகப்பரு பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்.
இப்படி சந்திக்கும் கோடைக்கால சரும பிரச்சனைகளை தவிர்க்க சிறந்த வழி தவறாமல் சரும பராமரிப்பைக் கொடுப்பது தான். அதில் முக்கியமாக செய்ய வேண்டியது கிளென்சிங். அதுவும் கெமிக்கல் கலந்த கிளென்சரைப் பயன்படுத்தாமல், வீட்டில் உள்ள இயற்கை பொருட்களைக் கொண்டே சூப்பராக கிளென்சிங் செய்யலாம்.

இப்படி கிளென்சிங் செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் மற்றும் மேக்கப் போன்றவை நீங்குவதோடு, முகப்பரு வருவதும் தடுக்கப்படும். அதுமட்டுமின்றி, சருமத்தின் pH அளவும் சீராக பராமரிக்கப்பட்டு, சருமமும் பளிச்சென்று பொலிவோடு காணப்படும். கீழே அனைத்து சருமத்தினருக்கும் ஏற்ற நேச்சுரல் கிளென்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. எலுமிச்சை மற்றும் தேன்
* அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
2. ஆப்பிள் சீடர் வினிகர்
* இந்த கிளென்சருக்கு ஒரு பௌலில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை பஞ்சுருண்டையின் நனைத்து, முகத்தில் மேல் நோக்கியவாறு தடவ வேண்டும்.
* பின் சில நிமிடங்கள் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் துடைத்து எடுக்க வேண்டும்.
* பிறகு சருமத்தை உலர்த்திய பின், மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.
3. கடலை மாவு மற்றும் மஞ்சள்
* இந்த கிளென்சருக்கு ஒரு பௌலில் 1/2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1/4 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு மாவு மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி தேய்த்து கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் இந்த கலவையைக் கொண்டு சருமத்தை சுத்தம் செய்தால், சருமம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
4. ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள அழுக்கை திறம்பட நீக்கும். எனவே தினமும் ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்குவதோடு, சருமம் பொலிவோடும், அழகாகவும் இருக்கும். முக்கியமாக ரோஸ் வாட்டரை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
5. வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி
* இந்த கிளென்சருக்கு வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி அரைத்து, அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* அதன் பின் டோனர், மாய்ஸ்சுரைசர் என்று பயன்படுத்தலாம். ஆனால் இந்த கிளென்சரை தினமும் பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

