Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டிலேயே எந்த தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் தெரியுமா?
Tamil Nadu Election 2026: 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சியினரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள சூழலில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே 04 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு வியாழக்கிழமையுடன் (ஏப்ரல் 9, 2026) முடிவடைந்த நிலையில், தற்போது 4,600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுடன், நடிகர்-அரசியல்வாதியான சி. ஜோசப் விஜயின் புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகமும் (TVK) இந்த சட்டமன்றத் தேர்தலில் கடுமையான போட்டியை சந்திக்கின்றன. இதனால் இந்த தேர்தல் நான்குமுனைப் போட்டியாக இருக்கப்போகிறது.

எவ்வளவு பேர் போட்டி போடுகிறார்கள்?
கடந்த சில நாட்களாக தமிழ்நாடே ஆயிரக்கணக்கான வேட்பாளர்களின் வேட்புமனு தாக்குதல்களால் பரபரப்பாக இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் மொத்தம் 7,599 பேர் வேட்புமனு தாக்குதல் செய்துள்ளனர். வியாழக்கிழமை (ஏப்ரல் 9, 2026) இரவு 11.30 மணி நிலவரப்படி, பெறப்பட்ட 7,599 வேட்புமனுக்களில், 4,621 ஏற்றுக்கொள்ளப்பட்டன, 2,460 நிராகரிக்கப்பட்டன மற்றும் 518 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.
அதிகாரிகள் இந்த விவரங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே, இரவு 11.30 மணி நிலவரப்படி, 644 வேட்புமனுக்கள் 'போட்டியிடுபவை' என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டன. ஒரே தொகுதியில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 85 வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம், அத்தொகுதி அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்களைக் கொண்ட தொகுதியாகத் திகழ்கிறது. பெரம்பூர் தொகுதியில், திரு. விஜய் உட்பட மொத்தம் 47 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
எந்த தொகுதியில் அதிக வேட்பாளர்கள் உள்ளார்கள்?
ஒரே தொகுதியில் அதிகபட்சமாக போட்டியிடுபம் தொகுதியாக தமிழ்நாட்டின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான கரூர் தொகுதி முதலிடத்தில் உள்ளது. கரூர் தொகுதியில் 85 வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம், அத்தொகுதி அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்களைக் கொண்ட தொகுதியாகத் திகழ்கிறது. அதேசமயம் மிகவும் குறைவான போட்டியாளர்கள் போட்டியிடும் தொகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளரான விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் விஜய் உட்பட மொத்தம் 47 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
17-வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலானது, திமுக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவும் முயலும் களமாக அமையவுள்ளது. அதேசமயம் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் போன்றவை அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் முக்கிய தொகுதிகள் என்ன?
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேசமயாம், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, எடப்பாடி தொகுதியிலிலேயே மீண்டும் போட்டியிடுதுகிறார். மேலும், திமுக தலைவரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.
பாஜக தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல். முருகன் அவினாசி தொகுதியிலும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை மயிலாப்பூர் தொகுதியிலும் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.



Click it and Unblock the Notifications

