செப்டம்பரில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும்.. உங்க ராசி என்ன?

September 2026 Forms Many Rare Rajyoga: ஜோதிடத்தின் படி, வருகிற செப்டம்பர் மாதமானது மிகவும் சிறப்பான மாதமாகும். ஏனென்றால் இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதோடு, அவற்றில் 2 கிரகங்கள் தங்களின் சொந்த ராசிக்கு செல்கின்றன. இதன் விளைவாக பல்வேறு ராஜயோகங்களும் உருவாகின்றன. இப்படி உருவாகும் ராஜயோகங்களின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் செப்டம்பர் மாதத்தில் சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் தங்களின் சொந்த ராசிக்குள் நுழைகின்றன. இதன் விளைவாக பத்ர, மாளவ்ய மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகங்களும் உருவாகவுள்ளன.

September 2026 Forms Many Rare Rajyoga These 4 Zodiac Signs Will Get Wealth And Prosperity

அதில் முதலாவதாக செப்டம்பர் 02 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தையும், செப்டம்பர் 07 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைந்து பத்ரா ராஜயோகத்தையும், கடைசியாக செப்டம்பர் 27 ஆம் தேதி புதன் துலாம் ராசிக்குள் நுழைந்து சுக்கிரனுடன் சேர்த்து லட்சுமி நாராயண ராஜயோகத்தையும் உருவாக்கவுள்ளனர்.

இப்படியான கிரக மாற்றங்கள் மற்றும் அவற்றால் உருவாகும் ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பான பலனைப் பெறவுள்ளனர். இப்போது செப்டம்பரில் உருவாகும் ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஏனெனில் இந்த மாதத்தில் ராசியின் அதிபதியான சுக்கிரன் துலாம் ராசியில் இருப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் நிலை உயரும் மற்றும் வலுவடையும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இதுவரை பணப்பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இம்மாதத்தில் அதிலிருந்து விடுபடுவீர்கள். நிதி ரீதியாக இம்மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் பல அற்புதங்கள் நிகழும். ஏனெனில் புதன் கன்னி ராசியில் பயணிப்பதால், நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறக்கூடும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் மற்றும் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் உருவாகும் அரிய ராஜயோகங்களால் தொழில் ரீதியாக இம்மாதம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு இம்மாதம் சிறந்ததாக இருக்கும். இம்மாதத்தில் புதிய முதலீடுகளை செய்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் உருவாகும் ராஜயோகங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் கொண்டு வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். மொத்தத்தில் இம்மாதத்தில் பண வரவு அதிகரிகும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, August 24, 2026, 10:36 [IST]
q
Desktop Bottom Promotion