Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது!
Mars Transit Make Neech Bhang Rajyog 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் செவ்வாய் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் செப்டம்பர் 18 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் கடக ராசியில் குரு மற்றும் செவ்வாய்க்கு இடையே ஒரு சேர்க்கை உருவாகிறது.
ஜோதிடத்தின் படி குரு பகவான் தனது உச்ச ராசியில் இருக்கும் போது, செவ்வாயின் நீச்சத்தை உடைத்து, நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்குவார். இந்த யோகத்தின் தாக்கம் ஒருவரது தொழில், நிதி நிலை, வியாபாரம், சொத்து விஷயங்களில் சிறப்பான பலன்களைத் தருவதாக கூறப்படுகிறது.
முக்கியமாக இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும் சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது தொழில் முன்னேற்றத்தையும், நிதி நன்மைகளையும் தரும். இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்வதால், இந்த ராசிக்காரர்கள் சொத்து மற்றும் தொழில் விஷயங்களில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும், சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்வதோடு, நீச்சபங்க ராஜயோகமும் உருவாவதால் பண பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகள் உருவாகும். பணியிடத்தில் உங்களின் தகவல் தொடர்பு திறன் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். மாணவர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஆனால் பணம் தொடர்பான எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் சென்று நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்குவதால், தன்னம்பிக்கையும், ஆளுமையும் மேம்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணயிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது. தம்பதிகளிடையே அன்பும், நம்பிக்கையும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்குவதால், இந்த ராசிக்காரர்களின் கடன் தொல்லைகள் குறையும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கான புதிய வழிகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி விஷயங்களில் உங்கள் துணையுடனான புரிதல் மேம்படும். இருப்பினும், எந்தவொரு பெரிய முதலீட்டையும் செய்வதற்கு முன், அனைத்து ஆவணங்களையும் நிபந்தனைகளையும் முழுமையாக ஆராய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




