Latest Updates
-
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
September 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதம் கிட்டதட்ட முடிவுக்கு வரப்போகிறது. செப்டம்பர் மாதம் ஜோதிடரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, ஏனெனில் இந்த மாதத்தில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடைபெறப்போகின்றன. இந்த கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையானதாகவும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையானதாகவும் இருக்கும்.

குறிப்பிட்ட ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதம் சிறப்பான அதிர்ஷ்டத்தையும், முன்னேற்றத்தையும் அனுபவிக்கும் அதே நேரத்தில் சில ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் அதிக சவால்களையும், பின்னடைவுகளையும் உருவாக்கும்.
செப்டம்பர் மாத கணிப்புகளின் படி செப்டம்பர் மாதம் சில ராசிக்காரர்கள் கடுமையான நிதி நெருக்கடிகளை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் தொழில் வாழ்க்கையில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சிக்கலை ஏற்படுத்தப்போகிறது. இந்த பதிவில் ஏப்ரல் மாதத்தில் தீராத துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறப்பான மாதமாக இருக்கப்போவதில்லை. இந்த மாதத்தில் செலவுகள் திடீரென அதிகரிக்கக்கூடும், இதனால் அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினமாகத் தோன்றலாம். இந்த மாதத்தில் கடன் சுமை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் துணையுடன் சிறிய விஷயங்களுக்காக வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது சிறந்தது.
அலுவலகத்தில் சூழல் உங்களுக்கு எதிரானதாக மாறலாம். வணிகத்தைப் பொறுத்தவரை, உங்களின் உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்காது, இது வருமானப் பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் பணத்தை இழக்க நேரிட்டாலும், விரைவில் நிலை சாதாரண நிலைக்குத் திரும்பலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் துரதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் அவர்கள் எடுக்கும் முடிவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அது நெருக்கடிகளை அதிகரிக்கும். பெரும்பாலும், நிதி இழப்புகள், தேவையற்ற செலவுகள், வருமானமின்மை மற்றும் பணத்தைச் சேமிப்பதில் போன்ற தடைகள் ஏற்படலாம்.
உங்களின் வார்த்தைகள் மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும். இதன் காரணமாக, சிம்ம ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முடிந்தவரை உங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலையில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடமிருந்து சில எதிர்மறையான கருத்துக்களை நீங்கள் கேட்க வேண்டியிருக்கும். நிதி நெருக்கடி மோசமடைவதைத் தடுக்க தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது.
தனுசு
செப்டம்பர் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு நஷ்டங்களும், ஆபத்துகளும் நிறைந்த மாதமாக இருக்கலாம். இந்த மாதத்தில் அவர்கள் சில உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். அவர்கள் நினைத்த விஷயங்கள் எதுவும் இப்போதும் சாதகமாக முடிவடையாது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளை மிகவும் கவனமாக செய்ய வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த மாதம் நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

