Latest Updates
-
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க..
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க..
Immunity Boosting Foods In Tamil: மழைக்காலம் தொடங்கிவிட்டது. என்ன தான் மழைக்காலம் தொடங்கினாலும், வெயிலின் தாக்கமும் கடுமையாகவே உள்ளது. இப்படி காலநிலை அடிக்கடி சட்டென்று மாறிக் கொண்டிருப்பதால், நிறைய பேர் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள். ஒருவர் அடிக்கடி சளி, இருமலால் சிரமப்பட்டால், அந்நபரின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.

இந்நிலையில் சளி, இருமல் பிடித்தாலும் விரைவில் குணமாக வேண்டுமானால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு குறிப்பிட்ட சத்துக்கள் நிறைந்த உணவுகள் பெரிதும் உதவி புரியும். இந்த நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் குறித்து டாக்டர் பிரகாஷ் மூர்த்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "அடிக்கடி சளி பிடிக்கக்கூடாது, ஜுரம் வரக்கூடாது, அப்படி இரண்டுமே வந்தாலும் சீக்கிரம் சரியாக வேண்டுமானால் நோயெதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும். நோயெதிர்ப்பு சக்தி என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஜிங்க் மற்றும் வைட்டமின் டி போன்றவை தான். இவை அனைத்தையும் சரியான அளவில் ஒருவர் பெற்று வந்தாலே நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்கும். அதற்கு இந்த அனைத்தையும் சரியாக பராமரிக்க வேண்டும்" என்று கூறினார்.
வைட்டமின் சி
"வைட்டமின் சி-யின் முக்கியமான பங்கு என்னவெனில் ஃபேகோசைட்டோசிஸ்-க்கு உதவி செய்கிறது, கிருமிகளை அழிக்க உதவுகிறது, ஆன்டி-பாடிகள் உருவாக உதவுகிறது.
வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகள்
* கொய்யாப்பழம்
* நெல்லிக்காய்
* சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி
* பப்பாளி
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த அவசியமானவையாகும். இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் என்று பார்த்தால் பீட்டா-கரோட்டீன் என்னும் கரோட்டினாய்டுகள் அதிகம் நிறைந்த கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முருங்கைக்கீரை, சல்பர் நிறைந்த பூண்டு, வெங்காயம், இஞ்சி, மிளகு போன்றவற்றிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன.
ஜிங்க்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மற்றொரு முக்கியமான சத்து தான் ஜிங்க். இருப்பினும் இது அனைவராலும் குறைவாக மதிப்பிடப்படுகிறது. ஆனால் இந்த ஜிங்க் தான் உடலின் மிகவும் முக்கியமான மற்றும் முதன்மையாக உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரக்கூடியது. சொல்லப்போனால் ஜிங்க்கில் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. இது நேரடியாக வைரஸை அழிக்கும் சக்தியைக் கொண்டது.
ஜிங்க் நிறைந்த சைவ உணவுகள்:
* பூசணி விதைகள்
* நிலக்கடலை
* கொண்டைக்கடலை
* பயறு வகைகள்
ஜிங்க் நிறைந்த அசைவ உணவுகள்:
* முட்டை மஞ்சள் கரு
* சிக்கன்
* மட்டன்
* மாட்டிறைச்சி
* பன்றி இறைச்சி
* மீன்களில் மத்தி மீன், கெளுத்தி மீன், நண்டு
உடலில் 300-க்கும் அதிகமான நொதிகளை செயல்படுத்தக்கூடியது ஜிங்க். எனவே நோயெதிர்ப்பு சக்தி என்றாலே ஜிங்க் தான்.
வைட்டமின் டி
வைட்டமின் டி என்பது வெறும் வைட்டமின் அல்ல, அது ஒரு ஹார்மோன். அந்த அளவில் இது உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, தினசரி உணவுகளின் மூலம் போதுமான இந்த வைட்டமின் டி-யை பெற முடியாது. மேலும் உணவுகளிலேயே கடல் உணவுகளில் தான் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. அதை தவிர, ஃபோர்ட்டிஃபைடு பாலில் தான் வைட்டமின் டி உள்ளது. வேறு எந்த உணவுகளிலுமே வைட்டமின் டி இல்லை. எனவே தினமும் சூரிய ஒளி சருமத்தில் படுமாறு ஒரு 1/2 மணிநேரம் இருந்தால், போதுமான வைட்டமின் டி கிடைக்கும். வைட்டமின் டி-யின் சிறப்பே இது ஒரு சன்சைன் வைட்டமின் ஆகும். சூரியனின் UV கதிர்கள் சருமத்தில் படும்போது வைட்டமின் டி உருவாகிறது" என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! மழைக்காலத்தில் உங்களுக்கு அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வந்தால், அது விரைவில் சரியாக மேலே டாக்டர் கூறிய உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

