Latest Updates
-
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
September Month Rasi Palan 2026: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான மற்றும் சுப யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் செப்டம்பர் மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.

உங்களுக்கு 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் செப்டம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என செப்டம்பர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2026 செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதமானது சாதாரணமாக இருக்கும். சிலருக்கு இம்மாதத்தில் சில நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருந்தாலும் எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும், அதில் வெற்றி பெற கூடுதல் முயற்சி தேவைப்படும். பொறுமையாக எதையும் செய்தால், நல்ல பலன்களைப் பெறலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன்கள் இம்மாதத்தில் கிடைக்கும். முக்கியமாக இம்மாதத்தில் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் சற்று மோசமாக இருக்கும். சில சிரமங்களை சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த வேலைகள் வெற்றிகரமாக நடக்காமல் போகலாம். இம்மாதத்தில் எந்த ஒரு முடிவுகளையும் அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிறு தவறு கூட உங்களின் பெயரை பாதிக்கலாம். மொத்தத்தில் இம்மாதம் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படக்கூடும். கலைத்திறன் மேம்படும் வாய்ப்புள்ளது. நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகள் இம்மாதத்தில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். இருந்தாலும், முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி நிலைமை வலுவடையும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அரசு தொடர்பான வேலைகளை செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் கடின உழைப்பு பாராட்டப்படும். சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைத்தூக்கி மன அழுத்தத்தை உண்டாக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, தினசரி வழக்கத்திலும், போதிய ஓய்வைப் பெறுவதிலும் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதமானது சாதாரணமாக இருக்கும். நிதி நிலைமை வலுவடையும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலையில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இருப்பினும் நிதி விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இம்மாதத்தில் புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்பால் எதிர்காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் இம்மாதத்தில் முடிவுக்கு வரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் உங்களின் பெரிய கனவு நிறைவேறும். பணியிடத்தில் இலக்குகளில் கவனம் செலுத்தி செயல்பட்டால் நல்ல வெற்றி கிடைக்கும். ஆனால் அவசரப்பட்டு எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தொழிலதிபர்களுக்கு தங்களின் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக இம்மாதத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நிதி நிலையிலும் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
