Latest Updates
-
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசி அள்ளும்..
Thuvaram Paruppu Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சட்னி தான் ரொம்ப பிடிக்குமா? ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான சட்னியைத் தான் செய்வீர்களா? சற்று புதுமையான சட்னியை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் துவரம் பருப்பு சட்னியை செய்யுங்கள் இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு துவரம் பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துவரம் பருப்பு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* துவரம் பருப்பு - 4 ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 3 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 6
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* தேங்காய் - 1/2 மூடி (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 ஸ்பூன்
* கடுகு - 1/2 ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், துவரம் பருப்பை சேர்த்து நிறம் மாற வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்னர் அதில் புளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய அரை மூடி தேங்காயை சேர்த்து நன்கு
நிறம் மாற வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சட்யுடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து
சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான துவரம் பருப்பு சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications
