ஆண்களே! உங்க ஆள்காட்டி விரல் மோதிர விரலை விட சிறியதாக உள்ளதா? அப்ப இத படிங்க...

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களே உங்களுடைய வலது கையைப் பாருங்கள். உங்களது ஆள்காட்டி விரல், மோதிர விரலை விட சிறியதாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

உங்கள் உள்ளங்கையில் உள்ள ரேகைகள் சொல்லும் ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஏனெனில் பல ஆய்வுகளில் மனிதர்களின் சில அம்சங்கள் மற்றும் அவர்களது விரலுக்கும் இடையே உள்ள தொடர்பு கண்டுபிடித்துள்ளது.

கையில் உள்ள திருமண ரேகை உங்கள் திருமணத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

இங்கு ஆண்களின் ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நீளங்கள் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

உங்க உள்ளங்கையில "M" வடிவிலான ரேகை இருந்தா என்ன அர்த்தம்-னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்கள் விஷயத்தில் நல்லவர்கள்

பெண்கள் விஷயத்தில் நல்லவர்கள்

குட்டையான ஆள்காட்டி விரலையும், நீளமான மோதிர விரலையும் கொண்ட ஆண்கள் பெண்கள் விஷயத்தில் மிகவும் நல்லவர்களாக இருப்பதால், புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதற்கு கருவில் இருக்கும் போது செக்ஸ் ஹார்மோன் அதிகமாக இருப்பது காரணமாக கூறுகின்றனர். இப்படி செக்ஸ் ஹார்மோன்களான டெஸ்டோஸ்டிரோன் அதிக வெளிப்பாட்டினால் தான், மோதிர விரல் நீளமாக இருப்பதாகவும் சொல்கின்றனர்.

ஆண்குறி அளவு

ஆண்குறி அளவு

2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஜர்னல் ஆப் ஆன்ட்ராலஜியில், மோதிர விரலை விட ஆள்காட்டி விரல் சிறியதாக இருந்தால், விறைப்பு நிலையில் ஆண்குறி அளவு நீளமாக இருப்பதாக வெளிவந்தது.

ஆண்குறி அளவு

ஆண்குறி அளவு

மேலும் இதுக்குறித்த ஆய்வில் 144 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் அவர்களது விரல்களின் நீளம் மற்றும் ஆண்குறியின் அளவு விறைப்பு நிலையிலும், சாதாரண நிலையிலும் அளவிடப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், ஆள்காட்டி விரல் சிறியதாக உள்ளவர்களுக்கு விறைப்பு நிலையில் ஆண்குறியின் நீளம் அதிகமாக இருப்பது தெரிய வந்தது. மேலும் இதற்கு கருவில் டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாடு அதிகம் இருப்பதை காரணமாகவும் கூறுகின்றனர்.

 கவர்ச்சிகரமான முகம்

கவர்ச்சிகரமான முகம்

மற்றொரு ஆய்வில் ஆள்காட்டி விரல் மோதிர விரலை விட குட்டையாக இருப்பவர்களின் முகம் கவர்ச்சிகரமாக இருப்பது தெரிய வந்தது. மீண்டும் இதற்கு கருவில் டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாடு அதிகம் இருப்பதாகவும், அதனால் தான் முகம் கவர்ச்சிகரமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 கணிதத்தில் புலி

கணிதத்தில் புலி

முக்கியமாக மோதிர விரலை விட, ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கும் ஆண்கள் கணிதத்தில் சிறந்தவர்களாக இருப்பார்களாம். எப்பேற்பட்ட சிக்கலான கணக்குகளுக்கும் மிகவும் விரைவாக தீர்வு காண்பார்களாம்.

புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் புற்றுநோய்

ஆண்களின் விரல்களைக் கொண்டே அவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளதா என்பதைக் கூறலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதில் மோதிர விரலை விட ஆள்காட்டி விரல் சிறியதாக இருந்தால், அவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் குறைவாக உள்ளதாம். அதுவே நீளமாக இருந்தால், புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் உள்ளதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things A Man's Finger Length Says About Him

The ratio between the length of a man's second and fourth fingers has been linked to a wide range of physical and personality traits. Read on to know more...
Story first published: Tuesday, April 12, 2016, 13:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter