அடச்சீ... சொல்ல வைக்கும் சில அபத்தமான இன்ஸ்டாகிராம் பதிவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

கிட்டத்தட்ட உலகே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சமூகத்தளங்களில் தங்களது அந்தரங்க விஷயங்களை அலங்காரத்துடன் பதிவு செய்வது இன்றைய டிரெண்டிங் செயல்பாடு கூறலாம்.

காதலிப்பதில் இருந்து, காதல் பிரிவு வரை என்று மட்டுமில்லமால், இருவருக்குள்ளான இரகசியங்கள் கூட சில சூழலில் சமூக தளங்களில் பகிர படுகிறது.

ட்விட்டர், முகநூலில் எழுத்துக்களாக இருந்தவை இன்ஸ்டாகிராம் விஸ்வரூபம் எடுத்த பிறகு, புகைப்பட பகிர்வுகள், பதிவுகள் எக்கச்சக்கம் ஆகிவிட்டன. சில விஷயங்களை பதிவு செய்யும் இது அபத்தமானாதாக இருக்கும் என அறியாமலேயே சிலர் அதை பதிவு செய்துவிடுங்கின்றனர்.

இதை எல்லாம் எதற்காக செய்கிறார்கள் என நாம் ஆழமாக யோசிக்க தேவையில்லை. இது போன்ற 90% பதிவுகள், லைக்ஸ்-காக தான் பகிரப்படுகின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலுறவுக்கு பின்...

உடலுறவுக்கு பின்...

உடலுறவில் ஈடுபட்ட உடனேயே படுக்கையில் இருந்து அபத்தமான நிலையில் புகைப்படம் எடுத்து பதிவு செய்த நபர்...

எழுத்துப்பிழை!

எழுத்துப்பிழை!

ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோகன் பதிவு செய்த புகைப்படத்தில் அரபிக் மொழியில் அழகு என எழுதி பதிவு செய்துள்ளார். ஆனால், அது உண்மையில் கழுதை எனும் பொருள் கொண்டுள்ளது என கூறி வேறு நபர் அதை பகிர்ந்துள்ளார்.

ஆப்பு!

ஆப்பு!

இன்ஸ்டாகிராமில் தன் காதலிக்கு புகைப்படத்தை அனுப்பிய நபர் ஒருவர், அவருடன் சேர்த்து பல பெண்களுக்கும் அனுப்பியிருக்கிறார். யார் யாருக்கு எல்லாம் அனுப்பியிருக்கிறார் என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்து விட்டது.

தன் மீதே காதல்!

தன் மீதே காதல்!

#LoveYourself என்பது பாசிடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என கூறுவார்கள். அதற்காக கண்ணாடிக்கு முத்தம் கொடுத்து, அதை பகிர வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை.

ரொம்ப நல்லது!!!

ரொம்ப நல்லது!!!

இதுபோன்ற பகிர்வுகளை நம்ம ஊர் ஆட்களும் நிறைய செய்வார்கள். அடிப்பட்டுவிட்டால் மருத்துவமனைக்கு செல்வதை விட்டுவிட்டு, இரத்தம் சொட்டுவதை புகைப்படம் எடுத்து சமூக தளங்களில் பகிர்வார்கள்.

இந்த பெண்ணும் அப்படி தான். கத்தி கீறி, இரத்தம் வழிவதை பல படங்கள் எடுத்து, கொலாஜ் செய்து பதிவு செய்துள்ளார்.

மப்பு!

மப்பு!

மப்பில் ஒரு பெண் கழிவறையில், நீர் அருந்துவதை புகைப்படம் எடுத்து அவரது நண்பர் கேலி செய்து பதிவு செய்துள்ளார்.

பாட்டி!

பாட்டி!

மருத்துவமனைக்கு சென்றாலும் நலம் விசாரிக்காமல் அங்கும் செல்ஃபீ எடுத்து பகிரும் நபர்களும் இருக்கின்றனர்.

இது, அதுக்கும் மேல லெவல். மருத்துவமனையில் இருக்கும் பாட்டியை காண சென்ற பேரப்பிள்ளைகள், அவர் போர்வை மீது டாலர்களை பரப்பி போட்டோ எடுத்து பதிவுசெய்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Of The Funniest Instagram Fails

Ten Of The Funniest Instagram Fails, take a look on here.
Story first published: Saturday, August 27, 2016, 12:37 [IST]
Subscribe Newsletter