இந்தியா பற்றி பொய்யாக பரப்பப்பட்டு இன்றுவரை உண்மையென நம்பப்படும் 10 விஷயங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

நாம் நம்பிக் கொண்டிருக்கும் அனைத்தும் உண்மை கிடையாது. ஏன் அறிவியலில் கண்டிபிடிக்கப்படும், கூறப்படும் கூற்றுகளும் கூட ஏறத்தாழ உண்மை என்று தான் கூறப்படுகிறதே தவிர, முற்றிலும் இது தான் உண்மை என்று யாரும் கூறுவது இல்லை. அறிவியல், விஞ்ஞானம் போன்றவற்றில் இது சாதாரணம். ஆனால், நமது நாடு பற்றிய சில பொய்யான தகவல்களை நாம் இன்றளவும் உண்மை என்று நம்பிக் கொண்டிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடைய வைக்கும், இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!

இந்திய தேசிய மொழி, விளையாட்டில் தொடங்கி, காந்தி, சுபாஷ் சந்திர போஸ் போன்ற தேசிய தலைவர்கள் வரை பல தகவல்கள் தவறாக பரப்பப்பட்டுள்ளது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹாக்கி தேசிய விளையாட்டு

ஹாக்கி தேசிய விளையாட்டு

இந்தியாவில் பலர் அடிக்கடி கொந்தளிபார்கள், ஹாக்கி தான் தேசிய விளையாட்டு, அதை விடுத்து நாம் கிரிக்கெட் மீது அதீத மோகம் கொண்டுள்ளோம் என்று. ஆனால், உண்மையில் இந்தியாவிற்கு தேசிய விளையாட்டு என்று எதுவும் இல்லை.

இந்தி தேசிய மொழி

இந்தி தேசிய மொழி

பலரும் இந்தியை தேசிய மொழி என இன்றளவும் கூறி வருவதுண்டு. ஆனால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற 20க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சி மொழிகளில் இந்தியும் ஒன்று என்பது தான் உண்மை.

ஆங்கில பெண்ணுடன் காந்தி நடனம்

ஆங்கில பெண்ணுடன் காந்தி நடனம்

பரவலாக, பல வருடங்களாக அரிய புகைப்படம் என்ற பெயரில் காந்தி ஓர் ஆங்கில பெண்ணுடன் நடனம் ஆடுவது போன்ற புகைப்படம் ஒன்று நெட்டில் பரவி வருகிறது. ஆனால் அது ஆஸ்திரேலியா நடிகர் ஒருவர் காந்தியை போல வேடமிட்டு ஒரு பார்ட்டியில் நடனமாடும் போது எடுத்த புகைப்படம் ஆகும்.

உலகின் பழம்பெரும் நகரம் வாரணாசி

உலகின் பழம்பெரும் நகரம் வாரணாசி

வாரணாசிக்கு முன்பே 30க்கும் மேற்பட்ட உலக நகரங்கள் மக்கள் குடியேறிய நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அழிந்த குமரி கண்டம் தான் பழம்பெரும் மக்கள் குடியேற்றம் ஆன பகுதி என்றும் கடந்த ஆண்டுகளில் ஆராய்ச்சி செய்த சில ஆய்வாளர்கள் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளனர்.

காந்தி கூறிய

காந்தி கூறிய "பழிக்குபழி"

"An eye for an eye..." என்று காந்தி கூறியதாக பரவலாக ஓர் செய்தி அவ்வப்போது உலா வந்துக் கொண்டே இருக்கும். ஆனால், இது ஊர்ஜிதம் செய்யப்படாத கூற்றென பலர் கூறுகிறார்கள். மற்றும் இது ஆங்கில நடிகர் பென் கிங்ஸ்லி என்பவர் பேசிய பிரபலமான வசனம் என்றும் கூறப்படுகிறது.

உலகின் பெரிய ரயில்வே துறை

உலகின் பெரிய ரயில்வே துறை

உலகிலேயே இந்திய ரயில்வே துறை தான் மிகவும் பெரியது என சிலர் பறைசாற்றிக் கொள்வதுண்டு. ஆனால், இது உண்மையல்ல. அமெரிக்க ரயில்வே துறை தான் உலகிலேயே மிகவும் பெரியது அதை தொடர்ந்து, இந்தியா மற்றும் சீனா உள்ளது.

1950 கால்பந்து உலகக் கோப்பையில் இந்தியா

1950 கால்பந்து உலகக் கோப்பையில் இந்தியா

1950 கால்பந்து உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் வெறும் காலுடன் விளையாட முற்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது என ஓர் செய்தி பரவலாக உள்ளது. இந்தியா மட்டுமின்றி வேறு நான்கு அணிகளும் கூட திடீரென நீக்கம் செய்யப்பட்டன. இந்தியா வெளிவந்ததற்கு வெறும் காலுடன் விளையாடுவதாய் கூறியது மட்டுமல்ல, பொருளாதார நிலையம் கூட ஓர் காரணம் என கூறப்படுகிறது.

மில்கா சிங் - 1960 ஒலிம்பிக்ஸ்

மில்கா சிங் - 1960 ஒலிம்பிக்ஸ்

1960-ம் ஆண்டின் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் மில்கா சிங், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். இதில் இவர் முதலாவதாக சென்றுக் கொண்டிருக்கும் போது திரும்பி பார்த்தார், தோல்வியுற்றார் என பரவலாக கூறப்படுகிறது. ஆனால் ஒலிம்பிக் சார்பிலிருந்த வந்த தகவல்களில் அவர் ஐந்தாவதாக தான் வந்தார், முடிக்கும் போது நான்காம் இடத்தில் முடித்தார். அவர் முதல் நிலைக்கு வரவே இல்லை என கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்ற தெளிவான தகவல்கள் இல்லை.

மதசார்பற்ற நாடு

மதசார்பற்ற நாடு

சுதந்திரம் பெற்ற போதிலிருந்தே இந்தியா மதசார்பற்ற நாடு இல்லை. 1976-ம் ஆண்டு தான் இந்திய சட்டப்புத்தகத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மதசார்பற்ற என்ற சொல் சேர்க்கப்பட்டது. மேலும் அறிமுகவுரையிலும் கூட சேர்க்கப்பட்டது.

சுபாஷ் சந்திர போஸ் மரணம்

சுபாஷ் சந்திர போஸ் மரணம்

சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்தார் என கூறப்படுகிறது. ஆனால், இது இன்று வரை மர்மமாக தான் இருக்கிறது. 1949-ல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நேதாஜியை ரஷ்யாவில் கண்டதாக கூறினார். இதற்கு பிறகு தான் சுபாஷ் சந்திர போஸ் அவர்களது மரணம் குறித்த மர்மம் மற்றும் நேரு ஷா நவாஸ்கான் கமிஷன் அமைக்க மறைமுக காரணமாக அமைந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Myths about India That Nobody Cared To Even Verify

Do yo know about the Ten Myths about India That Nobody Cared To Even Verify? read here in tamil.
Story first published: Tuesday, January 19, 2016, 11:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter