ஸ்மார்ட் நகர திட்டத்தால் மக்களுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன?

Posted By:
Subscribe to Boldsky

ஸ்மார்ட் நகரம், இந்தியாவின் கனவு திட்டமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் பெரும்பாலான நகரங்களை தொழில், தொழில்நுட்பம், கல்வி, தகவல் அறிதல், இன்டர்நெட், கலாச்சாரம் என அனைத்து வசதிகளும் கொண்ட ஸ்மார்ட் நகராக மாற்றுவது தான் இந்த திட்டம்.

இந்த திட்டத்தினால் இந்திய நகரங்கள் வளரும், நகரங்களின் வளர்ச்சி மற்றும் இதனால் அதிகரிக்கும் பொருளாதாரம் இந்தியாவை உலகளவில் முன்னேறிய நாடாக உருமாற வழிவகுக்கும். ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தினால் என்னென்ன நன்மைகள் மற்றும் சவால்கள் இருக்கின்றன என இனிக் காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நகரமைப்பை மேம்படுத்துதல்

நகரமைப்பை மேம்படுத்துதல்

நகரின் வீடமைப்பு மற்றும் தொழில் அமைப்பை மேம்படுத்தி நகரின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.

நகரை விரிவுப்படுத்துதல்

நகரை விரிவுப்படுத்துதல்

நகரின் நெரிசலை குறைக்கவும், வளங்களை அதிகப்படுத்த, சுற்றுசூழல் மாசினை குறைக்க இந்த திட்டம் உதவும்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

நகரில் உள்ளூர் தொழில் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தி பொருளாதார அளவில் மேன்மையை காணவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் இத்திட்டம் உதவும்.

உள்ளூர் வளர்ச்சி

உள்ளூர் வளர்ச்சி

பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், பொழுதுபோக்கு இடங்களை அதிகரித்து உள்ளூர் கட்டமைப்பையும், குடிமக்களின் வாழ்வாதார வளர்ச்சியை பெரிதுப்படுதவும் இது உதவும்.

போக்குவரத்து

போக்குவரத்து

ரயில், விமானம், பேருந்து போன்ற போக்குவரத்து சார்ந்த வளர்சிகள் அதிகரிக்கும்.

குடிமக்கள் நன்மை

குடிமக்கள் நன்மை

அரசாங்க இயந்திரம் குடிமக்களுக்கு நன்மை விளைவிக்கும் வகையில் மிக எளிதாக தொடர்புக் கொள்ளும் அளவிற்கு மேம்படுத்துதல், ஆன்லைன் மூலமாகவே அனைத்து சேவைகளும் வழங்குதல் போன்றவை ஏற்படுத்தப்படும்.

தனித்துவம்

தனித்துவம்

அந்தந்த நகரின் தனித்துவமான கலாச்சாரம், ஆரோக்கியம், கல்வி, விளையாட்டு, தொழில் போன்றவை மேம்படுத்தப்படும்.

தண்ணீர்

தண்ணீர்

அன்றாட தேவைக்கான நூறு சதவீத தண்ணீர் வழங்குதல் இன்றளவும் மெட்ரோ நகரங்களிலேயே சாத்தியமற்று இருக்கிறது. இதில், இத்தனை வளர்ச்சி திட்டங்கள் கொண்டுள்ள ஸ்மார்ட் நகரங்களுக்கும் வழங்கப்படுமா?

முதலீடு

முதலீடு

வரும் 20 வருடங்களில் ஸ்மார்ட் நகர மேம்பாடு திட்டங்களுக்காக 7 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது. வருடா வருடம் 35000 கோடி இதற்காக ஒதுக்கப்படும். பெரும்பாலான திட்டங்கள் தனியார் கையில் ஒப்படைக்கப்படவுள்ளது.

மாஸ்டர் ப்ளான்

மாஸ்டர் ப்ளான்

இந்தியாவின் 70-80% நகரங்கள் மேம்பாட்டிற்கான பெரிய திட்டங்கள் ஏதும் இல்லாமல் இருக்கின்றன. ஸ்மார்ட் நகரங்களுக்கு இது மிகவும் முக்கியமானது ஆகும்.

நேரம்

நேரம்

இந்த மிகப்பெரிய திட்டத்தை சரியான நேரத்திற்குள் முடிக்க அனைத்து ஆணைகளும், திட்ட ஒப்புதல்களும் ஆன்லைனில் செய்யப்பட வேண்டும். இல்லையேல் உத்தரவு பெறுவதற்குள்ளாகவே நேரம் முடிந்துவிடும்.

மின்சாரம்

மின்சாரம்

ஸ்மார்ட் நகரங்களில் 24x7 தடையில்லா மின்சார வசதி வேண்டும். இந்தியாவில் அடுத்த பெரிய சவாலாக இருக்க போவதே இந்த மின்சார பற்றாக்குறை தான். எனவே, எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்தியில் அதிகமான கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Challenges And Benefits Of Smart Cities

Challenges And Benefits Of Smart Cities, read here in tamil.
Story first published: Saturday, February 27, 2016, 12:14 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter