இயற்கை பேரழிவின் போது எடுக்கப்பட்ட சில வியக்க வைக்கும் புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இயற்கை பேரழிவுகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். சொல்லப்போனால் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு மனிதனும் ஓர் முக்கிய காரணம். மனிதர்கள் நிலத்தின் மீதுள்ள ஆசையால், நமக்கு நன்மைகளை வாரி வழங்கும் மரங்கள் அழிக்கப்பட்டு, அதனால் மழை வராமல், புவி அளவுக்கு அதிகமாக வெப்பமடைந்து, பல பேரழிவுகளை ஏற்படுத்துகிறது.

இக்கட்டுரையில் நாம் பார்க்கப்போவது, இயற்கை பேரழிவுன் போது எடுக்கப்பட்ட சில வியக்க வைக்கும் புகைப்படங்களைத் தான். இங்கு கொடுக்கப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் உண்மையில் பேரழிவு ஏற்படும் இடத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு

ஐஸ்லாந்தில் 2010 ஆம் ஆண்டு பயங்கரமான எரிமலை வெடிப்பு ஒன்று ஏற்பட்டது. இது அந்த எரிமலை வெடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான்.

Image Courtesy

கலிபோர்னியாவில் உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு

கலிபோர்னியாவில் உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு

இது கலிபோர்னியாவில் உள்ள நெடுஞ்சாலை 1-இல் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் தேதி ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. நல்ல வேலை அப்போது அந்த வழியாக யாரும் வரவில்லை.

இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் பயணம் செய்வோர் மிகுந்த அவஸ்தைக்குள்ளானார்கள். இது அப்போது எடுக்கப்பட்ட படம் தான்.

Image Courtesy

பெருங்கடலை நோக்கி பாயும் எரிமலைக்குழம்பு

பெருங்கடலை நோக்கி பாயும் எரிமலைக்குழம்பு

ஒரேகானின் போர்ட்லேண்ட்டில் இருந்து வந்த புகைப்பட கலைஞரான மில்ஸ் மோர்கன் என்பவர், ஏழு வருடங்களாக ஹவாய் தீவுகளில் உள்ள எரிமலைகளை கவனித்து, மிகவும் அழகிய இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார் என்றால் பாருங்கள்.

Image Courtesy

கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு

கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு

பொலினீசியாவில் உள்ள டோங்காவில் கடலுக்கடியில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி பயங்கர எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.

அதுவும் இந்த வெடிப்பின் போது வெளிவந்த புகை, நீராவி, சாம்பல் 1000 அடிக்கு மேல் சென்றது.

அப்போது அப்பகுதியில் 7.6 ரிக்டேர் அளவில் கடுமையான நிலநடுக்கமும் ஏற்பட்டது. இது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான்.

Image Courtesy

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி

இது ஒவ்வொருவரின் மனதையும் பதற வைக்கும் படி இந்தோனேசியால் ஏற்பட்ட சுனாமியின் போது மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் போது எடுத்த புகைப்படம்.

இந்த மோசமான சுனாமினால் சுமார் 230,000 உயிரை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy

ஜமுனா ஆற்றின் மீது பெய்த பருவ மழை

ஜமுனா ஆற்றின் மீது பெய்த பருவ மழை

2006 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்ரகாண்ட் மாநிலத்தில் பெய்த தொடர் மழையால் ஜமுனா ஆறு நிரம்பு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு, வட இந்தியாவில் சுமார் 1000 பேர் உயிரிழந்தோடு, 1000-த்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இது அப்போது எடுத்த புகைப்படம்.

Image Courtesy

ஐஸ்லாந்தில் இரட்டை சூறாவளி

ஐஸ்லாந்தில் இரட்டை சூறாவளி

இந்த அழகிய புகைப்படம் 2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தின் வான் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. உண்மையில் இது பயங்கரமாக இருந்தாலும், அழகாக உள்ளது தானே!

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Photos Of Natural Disasters

Here are some of the Moments Of Natural Disasters captured. These moments can give you a chill down your spine. Read on to know more..
Please Wait while comments are loading...
Subscribe Newsletter