For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிசம்பர் 12, 1991 நடந்தது என்ன? அன்று முதல் இன்று வரை தமிழர்கள் தாக்கப்படுவது ஏன்?

|

கடந்த சில தினங்களாக தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்து கர்நாடகாவில் பல இடங்களில் கலவரம் வெடித்து வருகிறது. கலவரத்தின் உச்சக்கட்டமாக நேற்று கர்நாடகத்தின் பல பகுதிகளில் தமிழக வாகனங்கள் தீக்கு இரையாக்கப்பட்டன.

கடந்த பல வருடங்களாக நீடித்து வரும் இந்த காவிரி நீர் பகிர்வு பிரச்சனை காரணமாக ஏற்பட்ட முதல் கலவரம் அல்ல இது. சரியாக 25வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற காவிரிப் பிரச்சனை காரணமாக நாம் நேற்று கண்டதைவிட பல மடங்கு பெரிய கலவரம் 1991-ம் ஆண்டு வெடித்தது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
12-13, டிசம்பர் -1991

12-13, டிசம்பர் -1991

தென் கர்நாடக பகுதிகளில் தான் இந்த கலவரம் பெரிதாக உண்டானது. முக்கியமாக பெங்களூர் மற்றும் மைசூர் பகுதிகளில். காவிரி நடுவர் மன்றத்தின் ஆணையை எதிர்த்து இந்த கலவரம் நடந்தது.

தமிழர்கள் மீது தாக்குதல்!

தமிழர்கள் மீது தாக்குதல்!

இந்த கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள், தென் கர்நாடக பகுதியில் வசித்து வந்த தமிழர்கள் தான். எல்லை பகுதியில் வாழ்ந்து மக்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். அரசாங்கம் 18பேர் இறந்தனர் என எண்ணிக்கை வெளியிட்ட போதிலும், தனிப்பட்ட மக்களிடம் கேட்டறிந்த போது எண்ணிக்கை பலமடங்கு உயர்வாகவே இருந்தது.

மக்கள் எண்ணிக்கை!

மக்கள் எண்ணிக்கை!

கர்நாடகாவில் 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் 3.82% தமிழக மக்கள் வாழ்வது கண்டறியப்பட்டது. பெங்களூர் நகர்புறம், பெங்களூர் கிராமப்புறம், ராமநகரம், மைசூர், மாண்டியா போன்ற பகுதிகளில் தமிழக மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

ஜூன் 25, 1991

ஜூன் 25, 1991

ஜூன் 25, 1991 அன்று காவிரி நீர் நடுவர் மன்றம் கர்நாடக அரசை தமிழகத்திற்கு 205 பில்லியன் ft3 அளவு நீரை அந்த வருடத்திற்குள் திறந்துவிட ஆணை பிறப்பித்தது. பிறகு கர்நாடக அரசு காவிரி நீர் நடுவர் மன்ற ஆணையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்-ல் முறையிட்டது.

டிசம்பர் 11,1991

டிசம்பர் 11,1991

இந்திய அரசு டிசம்பர் 11,1991 அன்று காவிரி நீர் நடுவர் மன்ற ஆணையை நிறைவேற்ற கூற, மறுநாளே கர்நாடகம் முழுவதும் பெரியளவில் கலவரம் வெடித்தன. கர்நாடக அரசியல்வாதி வட்டாள் நாகராஜ் தலைமையில் பந்த் அறிவிக்கப்பட்டது.

கர்நாடகத்தின் தாய்!

கர்நாடகத்தின் தாய்!

காவிரி கர்நாடகத்தின் தாய், அதை நாங்கள் யாருக்கும் தரமாட்டோம் என்று கூறி நீர் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 12 தேதி முதலே சாலைகளில் கலவரக்காரர்கள் அதிகரித்தனர், தமிழ் பேசும் மக்கள் மீது அதிரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பழிவாங்கும் நடவடிக்கை!

பழிவாங்கும் நடவடிக்கை!

தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, பழிவாங்கும் நடவடிக்கையாக, நீலகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் வசித்து வந்த கன்னட மக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இழப்பு!

இழப்பு!

மாற்றி மாற்றி நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களால் ஏறத்தாழ 17கோடி மதிப்பிலான சொத்துக்கள் அளிக்கப்பட்டன என இந்திய மனித உரிமை ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

1991 Anti-Tamil violence of Karnataka

1991 Anti-Tamil violence of Karnataka, a look back.
Desktop Bottom Promotion