Latest Updates
-
கோடைகாலத்தில் எடையை புயல் வேகத்தில் குறைக்க உதவும் சிறந்த 10 உணவுகள் -
வீட்டில் எப்பவும் செல்வமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கணுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வையுங்க! -
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் ஸ்வேதா சொல்ற இந்த விதைகளை தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க! -
தமிழ்நாட்டில் இந்த கிராமத்திற்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லையாம் - இங்க அப்படி என்ன இருக்கு தெரியுமா? -
ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
வாஸ்து படி உங்கள் பாத்ரூமில் ஒரு கிண்ணம் உப்பை வைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
தயிர் Vs. மோர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தமிழ் புத்தாண்டில் உருவாகும் அசுப யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படலாம்! -
சூப்பரான செட்டிநாடு பச்சை சுண்டக்காய் கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
வரகரிசி கஞ்சியும், முட்டை ஆம்லெட்டும் - எப்படி செய்றது-ன்னு பாத்து இந்த காம்போவை ட்ரை பண்ணி பாருங்க!
உலகின் மிகவும் இரம்மியமான கடலோர நகரங்கள்!!!
உலகில் பல கடற்கரை நகரங்கள் இருக்கின்றன. ஏன் லண்டன், மும்பை, இஸ்தான்புல், சிட்னி, நம்ம ஊர் சென்னை வரை அனைத்தும் கடலோர நகரங்கள் தான். ஆனால், இவை அனைத்தும் வர்த்தகம் மற்றும் தொழில் சார்ந்த நகரங்கள். இங்கும் சுற்றுலா தளங்கள் இருக்கின்றன எனிலும் ஒட்டுமொத்தமாக அழகு என கூறிவிட முடியாது.
ஆனால், சில கடற்கரை நகரங்கள் சுற்றுலா பயணிகளுக்காகவே உருவாக்கப்பட்டவை போல இருக்கும். அதன் அழகையும், இரம்மியமான தோற்றத்தையும் காண இரண்டு கண்கள் போதாது. அந்த இடங்களுக்கு சென்றால், அங்கிருந்து வர மனமும் வெறுக்கும். அப்படிப்பட்ட நகரங்களில் சிறந்த ஆறு கடற்கரை நகரங்கள் பற்றிதான் நாம் இப்போது பார்க்கவிருக்கிறோம்....

பாஸிடேனோ, அமல்ஃப்பி கோஸ்ட், இத்தாலி (Positano, Amalfi coast, Italy )
கடற்கரை ஓரம் ஒட்டியிருக்கும் மலைகள், நீல நிற வானம், பல வண்ணங்களில் ஜொலிக்கும் கட்டிடங்கள் என சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக திகழ்கிறது பாஸிடேனோ. இந்த பகுதியை ஜூவல் ஆப் அமல்ஃப்பி கோஸ்ட் என்றும் அழைக்கிறார்கள்.
Image Courtesy :JeCCo

கப்ரி, இத்தாலி (Capri, Italy)
பே ஆப் நேபிள்ஸ்-ன் (Bay of Naples) நுழைவிடம். ட்யர்ஹெனியன் (Tyrrhenian) எனும் கடல் பகுதியின் சிறு நகரம் இது. இவ்விடம் ஓர் ஓவியத்தை போல காட்சியளிக்கிறது. இங்கு இயற்கையாக உருவான பாறை சுரங்கங்கள் கடலில் இருக்கின்றன. இங்கிருக்கும் கேஸ்ட்டில், ராக் கப்ரி வளைவுகள் மிகவும் பிரபலமானவை.
Image Courtesy:Soerfm

சான்டோரிணி, கிரீஸ் (Santorini, Greece)
கிரீஸின் புகழ்பெற்ற சுற்றுலா தளம் இந்த சான்டோரிணி. இங்கிருக்கும் ஹோட்டல்களும், கண்களை மயக்கும் காட்சிகளும் உங்களை இந்த இடத்தை விட்டு செல்லவே விடாது.
Image Courtesy:Leonard G.

சிதி பவ் சயிட் துனீசியா (Sidi bou said, tunisia)
ஆப்ரிக்காவின் நுனியில் இருக்கிறது இந்த பகுதி. இந்த நகரம் மத்திய தரைக் கடல் தீவுகளை நோக்கியுள்ளது. நீளம் மற்றும் பச்சை நிறங்களில் இந்த நகரம் ஜொலிக்கிறது.
Image Courtesy:Moumou82

பட்டாநீஸ், பிலிப்பைன்ஸ் (Batanes, Philippines)
வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதிக்கு முன்னர் இருக்கிறது இந்த பட்டாநீஸ். கொஞ்சம் தொழிற்சாலைகளின்ஆதிக்கம் இருப்பினும் கூட இது சிறந்த சுற்றுசூழலுடன் மிக அழகாக திகழ்கிறது. அழகு மட்டுமின்றி மிகவும் அமைதியான இடமும் கூட இது.
Image Courtesy:BritandBeyonce

கமகுரா, ஜப்பான் (Kamakura, Japan)
ஜப்பானின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் இந்த கமகுரா. இங்கிருந்து பார்த்தல் மவுண்ட். ஃபுஜி பார்வைக்கு மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலங்களில் இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
Image Courtesy:Edal



Click it and Unblock the Notifications











