உங்கள் நெற்றி உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Posted By:
Subscribe to Boldsky

பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் தனிப்பட்ட தோற்றத்தைக் கொண்டுள்ளோம். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட மக்களின் முகம், மூக்கு, கண்கள், உதடு, விரல்கள் போன்றவை ஒரே மாதிரியான வடிவத்தைக் கொண்டிருக்கும். அப்படி ஒரே மாதிரியான வடிவத்தைக் கொண்டிருப்பவர்களின் குணநலன்களைப் பார்த்தால், சற்று ஒரே மாதிரி இருக்கும்.

இங்கு அதில் ஒருவரின் நெற்றியின் வடிவம் அவரைப் பற்றி என்ன சொல்கிறது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் நெற்றி உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பரந்த நெற்றி

பரந்த நெற்றி

பலருக்கும் பரந்த நெற்றி பிடிக்காது. ஏனெனில் இது தலையில் வழுக்கை விழுந்தது போன்ற தோற்றத்தை அளிக்கும். ஆனால் அப்படி பரந்த நெற்றியைக் கொண்டவர்கள் மிகவும் புத்திசாலி. எதையும் அதிவிரைவில் கற்றுக் கொள்ளும் திறன் கொண்டவர்கள். இவர்களால் முன்கூட்டியே நடக்கப் போவதை சரியாக கணிக்க முடியும்.

குறுகிய நெற்றி

குறுகிய நெற்றி

குறுகிய நெற்றியைக் கொண்டவர்களும் புத்திக்கூர்மை உள்ளவர்கள். இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இவர்கள் தன் மனம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்பவர்கள். மேலும் எப்போதும் தனிமையை விரும்புபவர்கள், அதற்காக கூட்டத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல.

நேரான நெற்றி

நேரான நெற்றி

நேரான மயிரிழையினால் என்னவோ, சிலருக்கு நெற்றி நேராக இருக்கும். இந்த வகையான நெற்றியைக் கொண்டவர்கள் எதையும் வெளிப்படையாக பேசுவார்கள். தங்களது தனிப்பட்ட மகிழ்ச்சி மற்றும் தேவைகளுக்கான சமசரம் செய்ய தயாராக இருக்கமாட்டார்கள். இவர்கள் ஒருவரை நேசித்தால், மனதளவில் உண்மையாக நேசிப்பார்கள்.

வளைவான நெற்றி

வளைவான நெற்றி

வளைவான நெற்றியைக் கொண்டவர்கள் எப்போதுமே நேர்மறையான உணர்வுகளுடன் மற்றும் சந்தோஷமான மனநிலையுடன் இருப்பவர்கள். மேலும் எப்போதும், எதிலும் முன் நிற்க ஆசைப்படுவார்கள்.

M வடிவ நெற்றி

M வடிவ நெற்றி

இந்த வகை நெற்றியைக் கொண்டவர்கள் மிகுந்த கற்பனை வளம் மற்றும் படைப்பாற்றலைக் கொண்டிருப்பார்கள். மொத்தத்தில் இந்த வகை நெற்றியைக் கொண்டிருப்பவர்கள், படைப்புக் கலைஞர்களாக மற்றும் புதுமையாளர்களாக இருப்பார்கள்.

மலை வடிவ நெற்றி

மலை வடிவ நெற்றி

இந்த மாதிரியான நெற்றியைக் கொண்டவர்கள் மிகவும் அரிது. எனவே இந்த வடிவ நெற்றியைக் கொண்டவர்களை அதிர்ஷ்டசாலி எனலாம். இந்த வகை நெற்றியினர் மிகவும் மென்மையானவர்கள் மற்றம் மிகவும் சிநேகிக்கத்தக்கவர்கள். மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்கள். தன் குறிக்கோளில் தெளிவாக இருப்பார்கள் மற்றும் நம்பிக்கையுடன் தன் கருத்தை சொல்வார்கள்.

கூர்மையான நெற்றி

கூர்மையான நெற்றி

கூர்மையான நெற்றியைக் கொண்டவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பர். மேலும் எதையும் ஆரம்பரமான முறையில் தான் மேற்கொள்ள விரும்புவார்கள். மேலும் இந்த வகை நெற்றியைக் கொண்டவர்கள், தாங்கள் ஆசைப்பட்டது எப்படியாவது தனக்கு வந்து சேர வேண்டும் என்று இருப்பார்கள். உயர் அதிகாரிகளிடம் கூட முரண்பாடுடன் உரையாடல்களை மேற்கொள்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Your Forehead Says About You

What Your Forehead Says About You? There are some theories that say your physical features indicate what kins of person you are. Read on to know more.
Subscribe Newsletter