For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் ராசி உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

By Super
|

ஜோதிட சாஸ்திரப்படி மொத்தம் 12 ராசிகள் உள்ளது. ஒரு வருடத்தில் உள்ள 12 மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ராசி பொருந்தும். இந்த ராசிகள் ஒருவரின் அடையாளம், அவரின் குணாதிசயம் மற்றும் வாழ்க்கையில் அவரின் பயணத்தை தீர்மானிக்கும். ஒரு நபர் பிறந்த தேதி மற்றும் மாதம் தான் அவர்களின் ராசியை தீர்மானிக்கும்.

உங்க ராசிக்கு எந்த ராசிக்காரர்கள் பொருத்தமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஒருவரின் விருப்பு, வெறுப்பு, பிடித்த உணவு, நண்பர்களின் வகை, படிக்க பிடித்தது, தொழில் தேர்வுகள் போன்ற பலவற்றையும் உங்கள் ராசி தான் தீர்மானிக்கும். ஆம், ராசிகளை வைத்து ஒருவரைப் பற்றிய பல விஷயங்களை நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம். அதனால் ஒருவரின் ஆரோக்கியத்திலும் கூட ராசிகளுக்கு தொடர்புள்ளது என நாங்கள் கூறப்போவது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்காது.

சிம்ம ராசிக்காரர்களை தனித்து காட்டும் அட்டகாசமான குணாதிசயங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜோதிடமும்.. மருத்துவ அறிவியலும்..

ஜோதிடமும்.. மருத்துவ அறிவியலும்..

வரலாற்றைப் பார்த்தோமானால், மருத்துவ பயிற்சியாளர்கள் கூட மக்களுக்கு இருந்த நோய்களுக்கான காரணத்தைக் கண்டறிய ஜோதிடத்தை நம்பியிருந்திருக்கிறார்கள். எண்ணிலடங்கா மருத்துவ பிரச்சனைகளின் வளர்ச்சியை தீர்மானிக்கவும் கூட ஜோதிடம் உதவியுள்ளது. ஜோதிடத்தின் மிக பழமையான கிளை தான் மருத்துவ ஜோதிடம். இருப்பினும், மருத்துவத்தையும், ஜோதிடத்தையும் இன்று இரு வேறு துருவங்களாக பார்க்கின்றனர். இந்த முன்னறிவிக்கும் அறிவியலுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மருத்துவர்கள் இப்போதெல்லாம் விரும்புவதில்லை. ஆனால் ஆய்வுகள் வேறு விதமாக பரிந்துரைக்கிறது. வெயில் காலத்தில் பிறந்தவர்களை விட குளிர் கால மாதத்தில் பிறந்தவர்களுக்கு தான் மூளை கோளாறு ஏற்படுவதற்கான இடர்பாடு அதிகமாக உள்ளது என ஒரு ஆய்வு கூறியுள்ளது. சரி, உங்கள் ஆரோக்கியத்தை ராசிகள் எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாமா?

மேஷம்

மேஷம்

மேஷ ராசி தலை மற்றும் மூளை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தும். மேஷ ராசியை கொண்டவரின் மூளை எப்போதுமே மிகையான நேரத்திற்கு வேலை செய்யும். அனைத்தையுமே மிகையாக சிந்திக்கும் இவர்கள் சுலபமாக கோபமும், எரிச்சலும் அடைவார்கள். அதனால் தலைவலி, பல் வலி, பற்களைக் கடித்தல் போன்ற பிரச்சனைகள் எல்லாமே மேஷ ராசிக்காரர்களுக்கு சாதாரணமாக ஏற்படக்கூடியதே.

ரிஷபம்

ரிஷபம்

தொண்டை, உடலில் உள்ள இன்சுலின் உற்பத்தி மற்றும் கீழ் தாடையை கட்டுப்படுத்தும் சுக்கிரன் தான் ரிஷப ராசியை ஆளுகிறது. சுக்கிரன் வலுவாக இருந்தால், அழகிய, திடமான பற்கள் மற்றும் கூர்ந்து கேட்கக்கூடிய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் ரிஷப ராசிக்காரர்கள். இவர்களுக்கு அடிக்கடி சளியும், காய்ச்சலும் பிடித்துக் கொள்ளும். சுக்கிரன் வலுவடைந்து இருந்தால், தீவிர தொண்டை தொற்றுக்கள், தைராய்டு, டான்சிலிடிஸ், தீவிர கழுத்து மற்றும் காது தொற்றுக்கள் போன்ற பிரச்சனைகளால் அவர்கள் அவதிப்படுவார்கள. மேலும் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

மிதுனம்

மிதுனம்

இரட்டையர்கள் என அறியப்படும் மிதுனத்தை ஆள்வது புதன் கிரகமாகும். இது உடலில் உள்ள மூட்டுக்கள் மற்றும் சுவாச அமைப்பை ஆளுகிறது. அதனால் பொதுவான சளிக்கு ஆளாவார்கள் மிதுன ராசிக்காரர்கள். மிதுனம் வலுவிழந்து கிடந்தால் தீவிர காய்ச்சல், இருமல் மற்றும் தசைநாண் அழற்சியால் அவர்கள் சுகவீனம் அடைவார்கள்.

கடகம்

கடகம்

சந்திரனால் ஆளப்படும் கடக ராசி, வயிறு மற்றும் செரிமான அமைப்புடன் நேரடியாக தொடர்பில் உள்ளது. அதிக உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சிப் பொங்கும் வகையில் உள்ள கடக ராசிக்காரர்கள், செரிமான அமைப்பு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். சந்திரனின் ஆளுமையால் தங்கள் கோபம் அல்லது வலியை அவர்களால் போக வைக்க முடியவில்லை என்றால், குடல் பிரச்சனைகள், வயிற்றில் அல்சர் மற்றும் செரிமானமின்மையால் அவர்கள் அவதிப்படுவார்கள்.

சிம்மம்

சிம்மம்

சூரியனால் ஆளப்படும் சிம்மம், இதயத்தையும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தையும் ஆளும். அதனால் அவர்கள் அதிகார தன்மையுடன், வாழ்க்கையில் அதிக தன்னம்பிக்கையுடன் விளங்குவார்கள். இருப்பினும், வலுவிழந்த சிம்மம் என்றால் இதயம், ஊக்கமின்மை மற்றும் முதுகு பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள்.

கன்னி

கன்னி

என்ன உணவு உண்ண வேண்டும் என்பதையும், சுவை அரும்புகளை கட்டுப்படுத்தும் அனைத்து உறுப்புகளையும் ஆளும் கன்னி. அதனால் இயற்கையாகவே, அது வயிற்றையும், குடல்களையும் ஆளும். எதெற்கெடுத்தாலும் ஓடத்துடிக்கும் அவர்கள் பொதுவாக எல்லாவற்றிலும் அவசரமாக இருப்பார்கள். அவர்கள் மனது அளவுக்கு அதிகமாக பகுப்பாய்வு செய்வதால், தொடர்ச்சியான ஓய்வின்மையே இருக்கும். அதனால் உணவு அலர்ஜி, அல்சர், மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வந்தடையும்.

துலாம்

துலாம்

நல்லதொரு வாழ்க்கையை துலாம் ராசிக்காரர்கள் விரும்புவார்கள். தங்களைச் சுற்றி சந்தோஷம் நிறைந்த குதூகல சூழ்நிலை நிலவ வேண்டும் என அவர்கள் விரும்புவார்கள். அழகான அனைத்தையும் அவர்கள் விரும்புவார்கள். சுக்கிர கிரகத்தால் ஆளப்படும் துலாம் ராசி, சிறுநீர்ப்பை செயல்பாடுகள் மற்றும் சிறுநீரகங்களை ஆளும். இன்பத்தால் செழித்தோங்கும் துலாம் ராசிக்காரர்கள் எதையுமே அளவுக்கு அதிகமாக செய்யாமல் இருப்பதில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்கள் துயரத்தில் ஆழ்த்தப்படுவார்கள். அதனுடன் சேர்த்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் தீவிர சிறுநீர்ப்பை அழற்சிக்கு ஆளாவார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பொறாமை குணம் கொண்டவர்கள். தங்களுக்கு சொந்தமானது என நினைப்பவற்றின் மீது அவர்கள் ஆட்டிப்படைக்கும் மற்றும் சொந்தம் கொண்டாடும் குணத்தை கொண்டிருப்பார்கள். எப்போதும் எதிர்மறையாகவும் மற்றும் எதிர்மறை சிந்தனையுடனும் இருப்பார்கள். இவர்களை ஆளும் ப்ளூட்டோ கிரகம், ஹார்மோன்கள் மற்றும் இனப்பெருக்க அமைப்பிற்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். சீரற்ற மாதவிடாய், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீர்ப்பை தொற்றுக்கள் போன்றவைகள் இவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் ஆகும்.

தனுசு

தனுசு

குருவால் ஆளப்படும் தனுசு ராசிக்கார்கள் தங்களின் உயிர், கண் பார்வை, தொடை மற்றும் கல்லீரலின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான நம்பிக்கை அவர்களின் பார்வையை பாதிக்கும், முதுகெலும்பில் காயத்தை ஏற்படுத்தும், நச்சுத்தன்மை பிரச்சனைகளை உண்டாக்கும்.

மகரம்

மகரம்

கடின உழைப்பாளியான மகர ராசி, எலும்புகள், குறிப்பாக உடலில் உள்ள மூட்டுக்களை ஆளும். பிடிவாதம் நிறைந்தவர்களான இவர்கள், கடினமாக உழைத்து தங்கள் லட்சியங்களை அடைபவர்கள். அதனால் அவர்களின் எலும்புகளும், மூட்டுக்களும் வலுவிழக்கும்.

கும்பம்

கும்பம்

சந்தோஷமாக இருக்கும் கும்ப ராசி, மூட்டுக்களின் அசைவையும் உடலையும் ஆளும். நரம்புகளின் ஓட்டத்திற்கும், உந்துவிசைக்கும் அவர்கள் பொறுப்பாகும். சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டு, தங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கவில்லை என்றால் இதய நோய்கள், கீல்வாதம், மூட்டுகளில் வீக்கம், ஆஸ்துமா, சுருள் சிரை நாளங்கள் மற்றும் அலர்ஜிகள் போன்றவைகளால் அவதிப்படுவார்கள்.

மீனம்

மீனம்

மீனம் அனிச்சைகளையும் நரம்பியல் அமைப்பையும் ஆளும். நடைமுறைக்கு ஏற்ற வகையில் இல்லாமல் போவதால், வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களினால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இது அதிகமாகும் போது, அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து, அவர்களுக்கு பல வியாதிகளை உண்டாக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Does your Zodiac Sign Say about Your Health?

Zodiac signs help decipher a lot about people. Hence, it comes as no surprise when we say that zodiac signs have a lot to say about one's health as well!
Desktop Bottom Promotion