அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முட்டாள்கள் தினத்தன்று நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

இன்று மட்டும் தான் நாம் ஏமாற்றப்படுகிறோமா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால், இன்று மட்டும் தான் முட்டாள் தனமாக ஏமாற்றப்படுவோம். குழந்தை பருவத்தில், "டேய்.. ஜிப்ப போடல.." என்பதில் ஆரம்பித்து இன்று சச்சின் தான் அடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் என்பது வரை வகை வகையாக இந்த நாளில் நாம் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறோம்.

ஈபிள் டவர் பற்றி உங்களுக்கு தெரியாத வியக்க வைக்கும் சில தகவல்கள்!!!

ஆனால், இந்த முட்டாள்கள் தினத்தன்று சில நல்ல விஷயங்களும், மறக்க முடியாத நிகழ்வுகளும் கூட உலகில் நடந்திருக்கிறது. ஹிட்லர் சிறை சென்றது, இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது, புலிகள் காப்பாகம் துவக்க திட்டமிட்டது என நீங்கள் அறியாத நிறைய விஷயங்கள் இந்த முட்டாள்கள் தினத்தன்று தான் நடந்திருகிறது...

கார்கில் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறை தண்டனை பெற்ற ஹிட்லர்

சிறை தண்டனை பெற்ற ஹிட்லர்

1924ஆம் ஆண்டு அடொல்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலை பெற்று வெளிவந்துவிட்டார்.

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

கடந்த 1935 ஆண்டு ஏப்ரல் முதல் நாள் தான் இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

நயா பைசா அறிமுகம்

நயா பைசா அறிமுகம்

ஏப்ரல் ஒன்று 1957 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

புலிகள் காப்பகம்

புலிகள் காப்பகம்

கடந்த 1973 ஆண்டு ஏப்ரல் ஒன்னு அன்று தான் நமது இந்திய அரசு, புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டத்தை இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கியது

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம்

1976 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தினத்தன்று தான் ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

ஈரான் நாடு

ஈரான் நாடு

கடந்த 1979 ஆம் ஆண்டு இன்றைய தினத்தன்று தான், ஈரான் 98% மக்கள் ஆதரவுடன் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.

வால்வெள்ளி

வால்வெள்ளி

ஹேல்-பொப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்ததும் கடந்த 1997 ஆண்டு இன்றை தினம் அன்று தான்.

ஒருபால் இனத்தவருடனான திருமணம்

ஒருபால் இனத்தவருடனான திருமணம்

கடந்த 2001 ஆண்டு ஏப்ரல் முதல் தினத்தன்று, நெதர்லாந்து சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.

கூகுல் மின்னஞ்சல்

கூகுல் மின்னஞ்சல்

2004 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி, கூகுள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ள ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது. இதை முதலில் உலக மக்கள் முட்டாள் தினத்திற்கான ஏற்பாடு என கருதினர். பின் இது உண்மையாகவே வெளியிடப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unforgettable Events Held On April First

On this Fool's day some unforgettable event were occurred. So, April first isn't alone a fools day.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter