For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டு 'கக்கூச' விட மோசமான பலரையும் ஆச்சரியப்பட வைக்கும் பொருட்கள்!!!

|

வீட்டில் இருப்பதிலேயே மிகவும் "கப்"பான இடம் என்றால் அது கழிவறை என நம்மில் பெரும்பாலானோர் எண்ணுகிறோம். ஏனெனில் அங்கிருந்து தான் நிறைய கிருமிகள் பரவுகிறது என்பது நமது யூகம். சரியானது தான் இந்த யூகம் ஆனால், கழிவறையை விடவும் மிக மோசாமான மற்றும் நோய் கிருமிகளை பரப்ப கூடிய வேறு சில இடங்களும் நம்மை ஏமாற்றி நமது கைகளிலேயே அவ்வப்போது தவழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

நம் கண்களுக்கு புலப்படாத இடத்தில் எங்காவது இருக்குமோ என நீங்கள் எண்ணினால் அது தவறு. நீங்கள் கையாளும் பொருட்கள் அது, நீங்கள் தினசரி உபயோகப்படுத்தும் பொருள்கள் தான் அவை. ஆயினும் நமது கவன குறைவினாலும். அக்கறையின்மையினாலும் தான் அவைகள் மிக மோசமான நோய் கிருமிகளை நம் மீது அண்ட வைக்கிறது. "அட, என்னடா நம்ம வீட்டுல நமக்கே தெரியாம ஒரு விரோதியா.." என்ற யோசனை எல்லாம் நிறுத்திவிட்டு தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மொபைல் ஃபோன்

மொபைல் ஃபோன்

ஒரு நாளில் கிட்டத்தட்ட குறைந்தது 500 க்கும் மேற்பட்ட் முறை நீங்கள் கையால் தொடுவது உங்கள் மொபைல் ஃபோன் தான். உங்கள் வீட்டு கழிவறையை விட அதிகமான கிருமிகள் இதன் மூலம் தான் பரவுகிறது. இதை கழுவ முடியாது எனிலும் நாம் துடைத்து கூட வைத்திருக்க மாட்டோம். இதில் காதலிக்கு முத்தம் தருகிறேன் எச்சை செய்தி அதிகமாக கிருமிகளை அண்ட வைப்பதே நீங்கள் தான்.

கம்ப்யூட்டர் கீபோர்டு

கம்ப்யூட்டர் கீபோர்டு

மொபைலுக்கு அடுத்து அதிகமாக கிருமிகளை பரப்புவது உங்கள் கம்ப்யூட்டரின் கீபோர்டு தான். கைகளின் மூலம் நம்மோடு மிகவும் அன்போடு உறவாடும் இது உண்மையில் பகைவன்.

காய்கறி அறுக்கும் பலகை

காய்கறி அறுக்கும் பலகை

இதுவெல்லாமா என நீங்கள் யோசிக்கலாம். ஆனால், இவை தான் நோய் கிருமிகளை மிக அதிகமாக பரப்புகிறது. இதில் காய்கறி, இறைச்சி அறுக்க நாம் தினசரி பயன்படுத்துகிறோம். ஆனால், அதற்கு ஏற்ப சரியாக கழுவி வைப்பது இல்லை. வெறுமென தண்ணீரில் அலாசி எடுத்து வைத்துவிடுவோம்.

தரை விரிப்பு

தரை விரிப்பு

இதை எல்லாம் வருடத்திற்கு ஒரு முறை துவைப்பது தான் காலம் காலமாக நாம் பின் பற்றி வரும் வழக்கம். நாம் சுவாசிக்கும் போது இதன் மூலமாக பெருவாரியாக கிருமிகள் நம் உடலுக்குள் செல்கிறது. உங்கள் வீட்டு கழிவறையை விட 4000 முறைக்கும் அதிகமான கிருமிகளை இது பரப்புகிறது.

பாத்திரம் கழுவும் இடம்

பாத்திரம் கழுவும் இடம்

இது தான் மிகவும் முக்கியமான இடம் கிட்டத்தட்ட 5,00,000 லட்சத்திற்கும் மேற்பட்ட கிருமிகளை இது பரப்புகிறது. கழிவறையை கூட தினம், அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கழுவி சுத்தமாக வைத்திருப்பவர்கள். இவ்விடங்கள் நன்கு கழுவ வேண்டும் என நினைப்பதே இல்லை.

டி.வி, ரிமோட்

டி.வி, ரிமோட்

நம் கைகளில் மட்டுமில்லாது அனைவரது கைகளிலும் தவழும் கை குழந்தை தான் இது. உணவு துகள்கள், தூசி, வியர்வை என பல வழிகளில் கிருமிகள் இதன் மூலம் பரவுகிறது.

அலுவலக மேசை

அலுவலக மேசை

உங்கள் வீட்டு கழிவறையோடு ஒப்பிடுகையில் உங்கள் அலுவலக மேசை தான் அதிகமாக நோய் கிருமிகளை பரப்புகிறது. அதிலும், ஆண்களை விட பெண்களின் அலுவலக மேசை 3-4 மடங்கு அதிகமாக கிருமிகள் இருக்கிறது.

ஆண்களின் பர்ஸ்

ஆண்களின் பர்ஸ்

ஆண்களின் பர்ஸில் பணம் இருக்கிறதோ இல்லையோ, நோய் பரப்பும் கிருமிகள் அதிகமாக இருக்கிறது. பல கை மாறும் பொருள்கள் இதில் அடங்கியிருப்பதே இதற்கு காரணமாய் கூறப்படுகிறது.

டூத் பிரஷ்

டூத் பிரஷ்

நாம் செய்யும் மிக பெரிய தவறே நன்கு கழுவிய பின் மறுபடியும் கிருமிகளின் பிடியில் டூத் பிரஷை வைத்துவிட்டு வருவது தான். எனவே, ஒவ்வொரு முறையும் பல் துலக்கும் முன்பு பிரஷை நன்கு கழுவிய பின் உபயோகப்படுத்துவது நல்லது.

கதவின் கைப்பிடி

கதவின் கைப்பிடி

நன்றாக யோசித்து பாருங்கள், உங்களுக்கு நினவு வந்ததிலிருந்து இந்த பொருளை நீங்கள் துடைத்து கழுவியிருக்கவே மாட்டீர்கள். இதை தொடாமலும் ஒரு நாளும் நீங்கள் இருந்திருக்க மாட்டீர்கள். கட்டாயம் வாரம் ஒருமுறையாவது நீங்கள் கதவின் கைப் பிடியை கழுவியே ஆக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Shocking Things At Home That Are Dirtier Than Your Toilet

Do You Know About Those Ten Shocking Things At Home That Are Dirtier Than Your Toilet? Read Here.
Story first published: Friday, March 20, 2015, 19:00 [IST]
Desktop Bottom Promotion