இந்திய மூடநம்பிக்கைகளும் அதன் பின்னணியில் இருக்கும் விசித்திர காரணங்களும்!!

Posted By:
Subscribe to Boldsky

உலகெங்கிலும் சகுனம், சடங்கு, மூடநம்பிக்கைகள் நிறைந்துள்ளன. ஆனால், இதற்கான தாய்நாடு இந்தியாவாக தான் இருக்கிறது. சிலவன அறிவியல் பின்னணி கொண்டுள்ளன, சிலவன முற்றிலும் முட்டாள்தனமான முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. நாகரீக வளர்ச்சி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் கூட இதுப் போன்ற மூடநம்பிக்கைகளில் மூழ்கி இருப்பது தான் சோகம்.

இந்திய புராணங்களில் இருந்து பிறந்த அறிவியல் கண்டுப்பிடிப்புகள்!!!

சூரிய அஸ்தமனம் பிறகு நகம் வெட்டுதல், அந்த மூன்று நாட்கள், மெட்டி அணிவது, பூனை குறுக்கே வருவது போன்றவற்றின் பின்னணியில் அறிவியல், மருத்துவ காரணங்கள் இருப்பினும். எலுமிச்சை கட்டுதல், விதவை பெண் எதிரே வருதல், பால் பொங்குவது, கண் துடிப்பது போன்றவை எல்லாம் கொஞ்சம் ஓவர் என்ற ரீதியில் தான் இருக்கின்றன.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூரிய அஸ்தமனம் ஆன பிறகு முடி, நகம் வெட்டுதல்

சூரிய அஸ்தமனம் ஆன பிறகு முடி, நகம் வெட்டுதல்

இன்றளவும் நமது நாட்டில் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு முடி, நகம் வெட்டுதல் கூடாது என கூறுவது உண்டு. அந்த காலத்தில் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு வீடுகளில் பெரிதாய் வெளிச்சம் இருக்காது. அகல் விளக்குகள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலை தான் இருந்தது. எனவே, சூரிய அஸ்தமனம் ஆன பிறகு முடி, நகம் வெட்டினால், அவை தப்பி தவறி உணவில் கலந்துவிட்டால் உடலுக்கு கேடு என இவற்றை செய்ய வேண்டாம் என கூறியிருக்கலாம். ஆனால், இன்றளவும் இதை இந்தியாவில் பின்பற்றி தான் வருகிறோம்.

அந்த மூன்று நாட்கள்

அந்த மூன்று நாட்கள்

இன்றும் கூட பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோவிலுக்கு செல்ல கூடாது என்று கூறுவார்கள். ஏன் சிலர் சமையலறையில் கூட செல்ல அனுமதி இல்லை. அன்று நேப்கின் போன்ற பாதுகாப்பு உபகரணம் இல்லை. எனவே, உடலில் இருந்து வெளியேறும் அந்த கிருமிகள் நிறைந்துள்ள இரத்த போக்கினால் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்று தான் அந்த நாட்களில் வீட்டில் இருந்து வெளியே அமர வைத்தனர். ஆனால், இன்றவளவும் இதை பின்பற்றுவது கேலிக்கூத்தாக தான் இருக்கிறது.

கிரகணம் அன்று சமைக்க கூடாது

கிரகணம் அன்று சமைக்க கூடாது

கிரகணத்தின் போது வெளியே வரக் கூடாது, சமைக்க கூடாது என்று கூறுவதுண்டு. ஆம், இதை நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். கிரகணத்தின் போது சூரியனில் இருந்து பூமிக்கு வரும் கதிர்வீச்சு தடைப்படுகிறது. இதற்கு மாறாக தீய கதிர்வீச்சுகளின் தாக்கம் பூமியில் அதிகரிப்பதால் தான் அந்த காலத்தில் இருந்தே இது பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இதை தற்போதைய அறிவியல் விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

எலுமிச்சை

எலுமிச்சை

எதற்கெடுத்தாலும் எலுமிச்சை கட்டுவது நம்மில் பலரை கடுப்பாக்கும் செயல்பாடு. வீட்டில், அலுவலகத்தில் வாசலில் எலுமிச்சை கட்டப்பட்டது போக வாகனங்களில் எல்லாம் கூட எலுமிச்சை கட்டும் பழக்கம் இருக்கிறது. எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி போன்றவற்றை சேர்த்து வாசலில் கட்டினால் திருஷ்டி கழியும் என்கிறார்கள். ஆனால், இதற்கான உண்மை விளக்கங்கள் என்ன என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் கமென்ட் மூலமாக பகிர்ந்துக் கொள்ளவும்.

மெட்டி அணிவது

மெட்டி அணிவது

பொதுவாக மெட்டி இரண்டாவது விரலில் தான் அணிவார்கள், அந்த இரண்டாவது விரலில் இருந்து ஒரு நரம்பு கருப்பை மூலமாக இதயத்திற்கு செல்கின்றது. இந்த விரலில் மெட்டி அணிவதால் கருப்பை பலமாகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் பெண்கள் கர்ப்பக் காலத்தின் போது எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது. இதனால் தான் திருமணமான பெண்கள் மெட்டி அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது.

பூனை எதிரே வந்தால் கெட்ட சகுனம்

பூனை எதிரே வந்தால் கெட்ட சகுனம்

உண்மையில் இதன் பின்னணி கதையே வேறு. அரசர் காலத்தில் போருக்கு செல்லும் போது இடையே பூனை வந்தால் வேறு வழியில் சென்றுவிடுவார்கள். ஏனெனில், பூனை மக்கள் இருக்கும் பகுதியில் வாழும் உயிரினம். அந்த காலத்து போர் நியதி படி மக்களை துன்புறுத்தாது தான் போரில் ஈடுப்பட வேண்டும். ஊரின் எல்லைகளில் தான் போரிடுவார்கள். இந்த வழக்கம் தான் பின்னாளில் குருட்டுத்தனமான மூடநம்பிக்கை ஆகிவிட்டது.

எழுந்ததும் கைகளை பார்த்து முகத்தில் ஒத்திக் கொள்வது

எழுந்ததும் கைகளை பார்த்து முகத்தில் ஒத்திக் கொள்வது

இது பலருக்கும் இந்த காலத்தில் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. காலை எழுந்ததும் தங்கள் கைகளை பார்த்து முகத்தில் ஒத்திக் கொள்ள வேண்டும் என கூறும் பழக்கம் இருந்தது. ஏனெனில், நமது உள்ளங்கையில் இருந்து வெளிவரும் வீச்சு/ ஒளி மூளை மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. இதனால் தான் மணமக்களை வாழ்த்தும் போது அவர்களது தலையில் உள்ளங்கை படும்படி வாழ்த்தும் முறை பின்பற்றப்பட்டது.

கண் துடித்தல்

கண் துடித்தல்

இடது கண் துடித்தால் கேட்டது, வலது கண் துடித்தால் நல்லது என்று கூறும் மூடநம்பிக்கையும் நம்மவர் மத்தியில் வெகுநாட்களாக இருந்து வருகிறது. அறிவியல் ரீதியாக இது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கண்களுக்கு அதிக வேலைக் கொடுப்பது என்று கூறப்படுகிறது.

பால் பொங்குவது

பால் பொங்குவது

சுபகாரியங்கள், வெள்ளிக்கிழமைகள் போன்ற நாட்களில் பால் பொங்குவது தீய சகுனம் என்ற மூடநம்பிக்கையும் நிலவி வருகிறது. பால் மிகுதியான சூடாகும் போது பொங்குவது இயல்பு. இது நமது கவனக்குறைவு.

பல்லி கத்துதல்

பல்லி கத்துதல்

பல்லி சத்தமிட்டால் கூட அது சகுனமாக பார்ப்பது மிகப்பெரிய மூடநம்பிக்கை. இவையெல்லாம் எல்லாம் சிரிப்பை வரவழைத்துவிடுகிறது.

பெண்கள்

பெண்கள்

விதவை பெண் எதிரே வருதல், ஆண் வெளியே செல்லும் போது தலைவிரிக் கோலமாக பெண் நின்றுக் கொண்டிருப்பது போன்றவை கூட சகுனமாக பார்க்கப்படுகிறது. இவை முட்டாள்த்தனத்தின் உச்சக்கட்டமாக தான் இருக்கிறது. பாவம் இதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்.

உங்கள் கருத்து

உங்கள் கருத்து

இது குறித்த உங்களது கருத்துகள், மற்றும் இதுப் போன்ற வேறு மூடநம்பிக்கைகள் குறித்து எங்களுடன் கமென்ட் மூலமாக பகிர்ந்துக் கொள்ளுங்கள். மேலும் தமிழ் போல்ட்ஸ்கை-ன் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

Tamil Boldsky

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Superstitions In India And Bizarre Reasons

Most Hilarious Superstitions In India,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter