நீதிபதிகள் வழங்கிய சில விசித்திரமான தண்டனைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

எந்த தவறு செய்தாலும் அதற்கான தண்டனையை நாம் பெற்று தான் ஆக வேண்டும். தவறு அல்லது குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு தண்டனை வழங்குவது தான் நீதிமன்றத்தின் வேலை. சில தருணங்களில் குற்றவாளியை திருத்துகிறோம், அல்லது அவர்களது வயதை நோக்கத்தில் கொண்டு தீர்ப்புகளை சற்று வினோதமாக கூறுவது உண்டு.

உலகிலேயே மிகவும் ரணக் கொடூரமான சிறைச்சாலைகள்!!!

அந்த வகையில் சில தவறுகள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுப்பட சில நபர்களுக்கு நீதிபதிகள் வழங்கிய விசித்திரமான தீர்ப்புகளும், அவர்கள் செய்த குற்ற சம்பவங்களும் குறித்து தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.....

நூற்றுக்கணக்கில் கொலை செய்த உலகின் டாப் 10 ரண கொடூரமான சீரியல் கில்லர்ஸ்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கழுதையுடன் ஊரைச்சுற்றிவர வேண்டும்

கழுதையுடன் ஊரைச்சுற்றிவர வேண்டும்

ஜெஸிக்கா லோங் மற்றும் பிரைன் பத்ரிக்ஸ் எனும் 19 வயது நிரம்பிய அமெரிக்க இளைஞர்களுக்கு தான் இந்த கழுதையுடன் சுற்றி வர வேண்டும் என்ற விசித்திர தண்டனை வழங்கப்பட்டது. அந்த கழுதையின் கழுத்தில் மன்னிக்க வேண்டும் என்ற வாசக அட்டையும் தொங்கவிடப்பட்டிருந்தது.

காரணம்

காரணம்

கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்காவின் பெயின்ஸ்வின் நகர நீதிபதி தான் இந்த தண்டனையை வழங்கினார். இந்த இரண்டு இளைஞர்களும் அந்த ஊரில் இருந்த ஒரு தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த இயேசு சிலையை திருடியதற்கே இந்த தண்டனை வழங்கப்பட்டது.

வேலை தேட வேண்டும்

வேலை தேட வேண்டும்

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 25வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தனக்கு பெற்றோர்கள் மாதாமாதம் 400 யூரோக்கள் பணம் தர வேண்டும். அவர்கள் தருவதில்லை என பெற்றோர் மீதே வழக்கு தொடர்ந்தார்.

தீர்ப்பு

தீர்ப்பு

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, உடனடியாக நீ வீட்டை விட்டு வெளியேற வேண்டும், வெளியேறிய 30 நாட்களுக்குள் உனக்கான வேலையை தேடிக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டும் சிறையில் அடைப்பு

கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டும் சிறையில் அடைப்பு

அமெரிக்காவில் ஓஹினோ எனும் பகுதியில், அகதிகளை நாடு கடுத்த தனது ஓட்டுனர் பதிவை கொடுத்து உதவினார் என்பதற்காக, தொடர்ந்து ஐந்து வருடங்கள் கிறிஸ்மஸ் தினத்தை மட்டும் சிறையில் கழிக்க வேண்டும் என்று தண்டனை வழங்கப்பட்டது.

மாற்று தீர்ப்பு

மாற்று தீர்ப்பு

இந்த தண்டனை ஏற்க தவறினால் அல்லது அடுத்து வரும் ஆண்டுகளில் கிறிஸ்மஸ் தினத்தன்று சிறையில் இருக்க தவறினால் 15 வருட சிறை தண்டனையை அவர் ஏற்க வேண்டும் என்று தீர்பளிக்க பட்டது.

20 மணி நேரம் இசைக் கேட்க வேண்டும்

20 மணி நேரம் இசைக் கேட்க வேண்டும்

ஓர்நாள் விக்டர் எனும் 24 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் அதிக சத்தத்துடன் ராப் பாடல்களை ஒலிக்க செய்தமைக்காக 150 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

மாற்று தீர்ப்பு

மாற்று தீர்ப்பு

இல்லையேல் மாற்று தீர்ப்பாக 20 மணிநேரம் பீத்தோவன், ஷொபன் போன்றவர்களின் கிளாசிக் இசையை கேட்க வேண்டும், 35 டாலர்கள் அபராதம் கட்டினால் போதும் என்று தீர்ப்பு வழங்கினர். ஆனால், 15 நிமிடங்களுக்கு மேல் அந்த இசையை கேட்க முடியாமல் போன அந்த இளைஞர், முதல் தீர்ப்பையே ஒப்புக் கொண்டு அபராதம் செலுத்தினார்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Some Weird Punishments Given By Justice

Do you know about some weird punishments that given by Justice? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter