"தல" தோனியின் பஞ்ச் வசனங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

தமிழகத்தில் "தல" என்றால் இவர்கள் தான் அனைவருக்கும் ஞாபகம் வருவார்கள். ஒருவர் திரையில் தோன்றும் மெயின் "தல" அல்டிமேட் ஸ்டார். மற்றொருவர் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸின் கர்ஜிக்கும் சிங்கம் "தல" டோனி. தனது முதல் "தங்க மீனை" கூட பார்க்காமல், "நான் தேசத்தின் பணியில் இருக்கிறேன், மற்றவை ஏதும் தனக்கு இப்போது முக்கியம் அல்ல" என்ற நம்ம கிரிக்கெட் மன்னன் டோனி.

டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் இரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா!!!!

இந்தியாவிற்கு உலக கோப்பை மட்டுமல்லாது கிரிக்கெட்டில் மகுடமாய் கருதப்படும் சாம்பியன் ட்ராஃபி, டி 2௦ உலக கோப்பை, என பல உலக கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை "தல" டோனிக்கு மட்டுமே சொந்தம். இவர் ஆட்டத்தின் முடிவில் உரையாடும் ஒவ்வொரு வார்த்தைகளும் திரையில் "தலைவர்" சூப்பர் ஸ்டார் பேசும் பஞ்ச போல பொறிப் பறக்கும். அந்த பஞ்ச வசனங்கள் இங்கே உங்களுக்காக....

விராத் கோலியின் 1௦ உடற்திறன் இரகசியங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைவன்

தலைவன்

"வெற்றியில் அனைவரின் பங்கும் இருக்கிறது. ஆனால், தோல்வி என வரும் போது அதற்கான முழு பொறுப்பும் என்னுடையது ஆகிறது. ஆம், அது என்னுடையது தான். அணியை சரியாக வழிநடத்தும் பொறுப்பு என்னிடம் இருக்கிறது அதை நான் சரியாக செய்ய வேண்டும்."

தேசத்தின் பணியில் இருக்கிறேன்

தேசத்தின் பணியில் இருக்கிறேன்

"நான் தேசத்தின் பணியில் இருக்கிறேன், மற்றவை ஏதும் தனக்கு இப்போது முக்கியம் அல்ல"

தேசம் தான் முதலில்

தேசம் தான் முதலில்

"என்னைப் பொறுத்தவரை முதலில் எனது தேசம், பின் எனது பெற்றோர் அதன் பின் தான் எனது மனைவி"

நக்கல்

நக்கல்

ஒரு முறை இந்தியாவின் கடைசி ஆட்டக்காரர்கள் மிக விரைவாக ஆட்டமிழப்பதை பற்றி கேட்ட போது, "பீட்டாவே நினைத்தாலும் இந்த கடைசி வால் (Tail) ஆட்டாக்காரர்களை விழுவதை தடுக்க முடியாது" என நக்கலாக கூறினார்.

உரிமை

உரிமை

ஒரு பத்திரிக்கையாளரை பார்த்து, "உங்களுக்கு என்னிடம் கேள்வி கேட்க எப்படி உரிமை இருக்கிறதோ, அதேப்போல எனக்கும் பதிலளிக்க வேண்டுமா இல்லையா என்ற தனியுரிமை உள்ளது.." என்றார்

ராணுவம்

ராணுவம்

"எனக்கு கிரிக்கெட் பிடிக்கும் அதனால் விளையாடிக் கொண்டிருக்கிறேன், என் தேசம் மீது எனக்கு பற்று இருக்கிறது, அதனால் கண்டிப்பாக ராணுவத்தில் இணைந்து எனது நாட்டிற்காக சேவை செய்வேன்!!" என டோனி கூறியிருக்கிறார்

செயல்திறன்

செயல்திறன்

"யாருக்குமே நன்றாக ஆட கூடிய காலகட்டம் என எதுவும் கிடையாது, ஆடுகளத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தமும், அவர்களது நிலையும் தான் ஆட்டத்தின் முடிவை தேர்வு செய்கிறது!"

கோப்பைகள்

கோப்பைகள்

டி2௦, உலக கோப்பை, சாம்பியன் ட்ராஃபி என அனைத்து கோப்பைகளும் வென்ற பின்னர் இனி நீங்கள் எந்த கோப்பையை விட்டு வைக்க போகிறீர்கள் என கேட்டதற்கு, "இவை அனைத்தையும் மீண்டும் வெல்ல வேண்டிய நிலை என்று ஒன்று இருக்கிறது" என சிரித்துக் கொண்டே கூறியுள்ளார் டோனி

திறமை

திறமை

நூறு சதவீதம் திறனின்றி அணியில் இடம் கிடைக்கிறது என விளையாடுவது தேசத்தை ஏமாற்றுவதற்கு சமம் என்று டோனி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

 நல்ல கதை

நல்ல கதை

ஒரு பத்திரிக்கையாளர் டோனியிடம் உங்கள் அணியில் விராட் கோஹ்லிக்கும் தவானுக்கும் சண்டையாமே என கேட்டதற்கு, "இந்த கதையை நீங்கள் ஹாலிவுட்டில் போய் சொல்லுங்கள் யாரேனும் கேட்பார்கள், வேறு ஏதாவது கேள்வி கதை இருக்கிறதா" என பதில் அளித்தார்.

நாட்டிற்காக விளையாடுகிறோம்

நாட்டிற்காக விளையாடுகிறோம்

ஒருமுறை வெளிநாட்டு பயணித்தின் போது, இங்கு உங்கள் நாட்டு ரசிகர்கள் குறைவு எப்படி விளையாடுவீர்கள் என கேட்டதற்கு," நாங்கள் எங்கள் நாட்டிற்காக விளையாட வந்துள்ளோம் ரசிகர்களின் கூட்டத்திற்காக அல்ல" என தல கூறியிருக்கிறார்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

MS Dhonis Cricket Punch Dialogues

MS Dhoni isn't an actor. but, while he speaks in front of mic it is like a superstars punch dialogue.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter