"ஜுராஸிக் வேர்ல்ட்" டினோசர்கள் பற்றிய பிரமிக்க வைக்கும் உண்மை தகவல்கள்!!!

By: John
Subscribe to Boldsky

கொஞ்சம் உங்களது கற்பனையை கடல் அலை போல அகலமாய் பரவவிடுங்கள். நாம் காணாத உலகம், உலகின் நிலப்பரப்பு கண்டங்களாக பிரியாமல் ஒன்றிணைந்து இருந்த காலம். மரங்களும், மலைகளும் வான்தொட்டும், கரும்பச்சை நிறத்தில் போர்வைப் போத்தியத்தை போலவும் உலகம் காட்சியளித்திருக்கலாம். ஆனால், இவை எவற்றையும் மற்றும் அந்த காலத்தில் வாழ்ந்த உயிரினமான டினோசார்களையும் நாம் கண்டதேயில்லை.

நாளைய உலக அழிவுக்கு காரணமாக எதிர்பார்க்கப்படும் மாபெரும் இயற்கை சீற்றங்கள்!!

டினோசாரை நாம் இதுவரை ஹாலிவுட் படங்களிலும், அகழ்வாராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதன் எலும்பு கூடுகளிலும் தான் பார்த்திருக்கிறோம். மிகவும் பெரிய உருவில், அனைவரையும் மிரட்டும் வகையில் பிரம்மாண்டமாய் இருக்கும் என்று நாம் நம்பிவரும் டினோசார்கள் பற்றிய சில உண்மையான தகவல்களை நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டுமா?

ஏலியன்கள் வாழும் கிரகங்கள் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட கோள்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் டினோசாரின் காலம்

முதல் டினோசாரின் காலம்

முதலாம் டினோசாரின் காலம் இடைப்பட்ட "ட்ரையாசிக் பீரியட் " ஆகும். இது ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆர்கோசார்ஸ் என்னும் பல்லி இனத்தை சேர்ந்த பாலூட்டி வகை ஊர்வன இருந்ததாம். அதனால், 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான் டினோசார்களின் ஆதிக்கம் அதிகமானது.

உலகில் நீண்ட ஆயுள் வாழ்ந்த உயிரினம்

உலகில் நீண்ட ஆயுள் வாழ்ந்த உயிரினம்

100 ஆண்டுகாலம் வாழும் மனிதர்கள், சிறந்த அறிவும், நுட்பமான அறிவியலும் அறிந்தே மொத்தம் 10,000 ஆண்டுகளாக தான் உலகில் உயிர் வாழ்ந்து வருகிறோம். இன்னும் சில நூற்றாண்டுகளில் அழிந்தும் விடுவோம். ஆனால், டினோசார்கள் 150 மில்லியன் ஆண்டுகள் உலகில் வாழ்ந்திருக்கின்றன.

தாவரவுண்ணிகள், ஊனுண்ணிகள்

தாவரவுண்ணிகள், ஊனுண்ணிகள்

டினோசார்களை தாவரவுண்ணிகள் அல்லது ஊனுண்ணிகளாக பிரிப்பது கடினம். எனவே, ஆய்வாளர்கள், இவற்றை ஸௌரிஷியன் (Saurichian- பல்லி வகை) மற்றும் ஆர்னிதிஷியன் (Ornithishian - பறவை வகை) என பிரிக்கின்றனர். இதில், ஸௌரிஷியன் வகை டினோசார்கள் தாவரம், உயிரினம் என்று இரண்டும் சாப்பிடும். ஆர்னிதிஷியன் வகை டினோசார்கள், தாவரங்களை மட்டுமே சாப்பிடும் என்றும் கூறப்படுகிறது. ஆயினும், இதிலும் சில வகை டினோசார்கள் வேறுப்பட்டு இருக்கும் என்கிறார்கள்.

ஜுராசிக் காலம்

ஜுராசிக் காலம்

டிநோசார்களை பொறுத்த வரைஅனைத்து ஆய்வாளர்களும் ஓர் கருத்தை ஒத்திருப்பது இல்லை. பலரும் பல கருத்துகளை சார்ந்து இருக்கின்றனர். ஜுராசிக் காலகட்டத்தில் இருந்த சில சிறிய வகை சிறகுகள் கொண்ட டினோசார்கள் தான் காலப்போக்கில் மருவி தற்போதைய காலகட்ட பறவைகளாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

வெப்பம் உருவாக்கும் டினோசார்கள்

வெப்பம் உருவாக்கும் டினோசார்கள்

சில வகை டினோசர்கள் தங்கள் உடலுக்குள்ளேயே வெப்பத்தை உருவாக்கி கனல்களாக கக்கும் தன்மை கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதைப் பற்றிய ஆராய்ச்சிகளில் பலரும் பல கருத்துகள் தெரிவிப்பதால். எது உண்மை, எது பொய் என்று அகப்படாமல் இருக்கின்றது.

அதிகமானவை தாவிர உண்ணிகள்

அதிகமானவை தாவிர உண்ணிகள்

டினோசார்களில், மிக அதிகமான வகைகள் தாவிர உண்ணிகளாக தான் இருந்திருக்கிறது. டைரன்னோசார்ஸ் மற்றும் ஜிகன்னேட்டோசார்ஸ் போன்ற வகைகளை சேர்ந்தவை தாவிர உண்ணிகள் தான். ஆனால், இது மிகவும் பெரிய உருவம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

மூளை, ஆற்றல்

மூளை, ஆற்றல்

அனைத்து டினோசார்களும் ஒரே மாதிரி அறிவுக் கொண்டவை அல்ல. ஸ்டேகோசார்ஸ் போன்ற டினோசார்கள் எல்லாம் உருவத்தோடு ஒப்பிடுகையில் மிகவும் சிறிய மூளைக் கொண்டிருந்ததாம். இதுப் போல உருவத்திற்கும், மூளைக்கும் ஒப்பில்லாமல் பல வகை டினோசர்கள் இருந்திருக்கின்றன.

டினோசார்களின் அழிவு ஒரே நேரத்தில் நிகழ்ந்தது அல்ல

டினோசார்களின் அழிவு ஒரே நேரத்தில் நிகழ்ந்தது அல்ல

அனைத்து வகை டினோசார்களும்ஒரே நேரத்தில் அழியவில்லை. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், நமது பூமியின் மீது விழுந்த எரிகற்களினால் தான் டினோசார்களின் அழிவுத் தொடங்கியது. ஆயினும், இதன் பிறகு ஏற்பட்ட வெப்ப அதிகரிப்பு மற்றும் சில இயற்க்கை மாற்றங்களினால் தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக டினோசார்கள் அழிந்தன.

அதீத வளர்ச்சி

அதீத வளர்ச்சி

டினோசர்கள் அதீத வளர்ச்சியுடையவை, வேகமாக மிக பெரிதாக வளர்ந்துவிடுமாம்.

பற்கள்

பற்கள்

டினோசார்களின் பற்கள் குறைந்தது 10 அங்குல நீளமாக இருக்குமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Important Dinosaur And Jurassic Facts

Do you have interest in knowing about dinosaurs? then it is a info feast, that you should know about the important dinosaurs facts.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter