ஆழ்கடல் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

கடல், வெளியில் இருந்து பார்க்க மட்டுமே அமைதியாகவும், ஆழமாகவும் தெரியும். ஆனால், அதன் உள்ளே சொர்க்கம், நரகம் என இரண்டும் கலந்து, கடவும் பாதி, மிருகம் பாதியாக திகழ்ந்து வருகிறது. ஆழ்கடல் தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகானவை. ஆனால், செயலில் அதைவிட பல மடங்கு அபாயமானவை.

இயற்கையில் அனைத்தும் அழகு தான். ஆனால், மனிதனின் கைப்பட்டவுடன் தான் அது மெல்ல மெல்ல அழிய தொடங்கிவிட்டது. ஏறத்தாழ வெறும் 5% தான் மனிதன் கடலின் ஆழத்தை பார்த்துள்ளான். அதற்கே கடலோர பகுதிகள் கூவமாக மாறிவிட்டது. இவன் ஆழ்கடல் வரை இறங்கிவிட்டால் கடலினம் மட்டுமின்றி மனித இனமும் கூட அழிந்துவிடும்.

இப்போது வரை மட்டுமே மனிதர்களின் லீலைகளால் எட்டு அங்குலம் வரை கடல்மட்டம் உயர்ந்துள்ளது. புவி வெப்பமடைதல் இவ்வாறே தொடரும் ஆயின் பல நகரங்கள் நீரில் மூழ்கி அழிந்துவிடும்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நான்கு கிலோமீட்டர்

நான்கு கிலோமீட்டர்

சராசரியான ஆழ்கடலின் ஆழம் நான்கு கிலோமீட்டர் ஆகும்.

குப்பைகள்

குப்பைகள்

கடலில் ஏறத்தாழ ஆறு பில்லியன் கிலோ குப்பைகள் கொட்டப்பட்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் குப்பைகள் ஆகும்.

இயக்க ஆற்றல்

இயக்க ஆற்றல்

கடல் அலைகளில் இருந்து 0.1% இயக்க ஆற்றலை எடுத்தால் கூட ஒட்டுமொத்த உலகிற்கு தேவையான மின்னணு உற்பத்தி சக்தியை ஐந்து மடங்கு அளவு பெற முடியும்.

நீளமான பாலம்

நீளமான பாலம்

ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா மத்தியில் கடலின் நீளம் வெறும் 14.3 கிலோமீட்டர் தான். எனவே, அங்கு நீளமான பாலம் ஒன்று கட்டிவிடலாம் என்ற பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

தங்கம்

தங்கம்

ஏறத்தாழ உலகின் மொத்த கடல் பரப்பளவில் 20 மில்லியன் டன் தங்கம் இருக்கிறதாம்.

ஐஸ் ஹாக்கி

ஐஸ் ஹாக்கி

அட்லாண்டிக் கடல் முழுமையாக உறைந்துபோய்விடும் போது, கனடா மற்றும் நியூஃபவுண்ட்லேன்ட் போன்ற இடங்களில் அங்கு ஐஸ் ஹாக்கி விளையாடுகிறார்கள்.

ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன்

நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 70% கடலில் இருந்து தான் கிடைக்கப்பெறுகிறது.

கடலின் மேற்பரப்பு

கடலின் மேற்பரப்பு

உலகின் 71% மேற்பரப்பு கடலால் தான் கவர்ந்திருக்கிறது. துருவங்கள் மற்றும் கிரீன்லாந்து க்லேஸியர்ஸ் முற்றிலுமாக உருகிவிட்டால், இது இன்னமும் கூட அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

கண்டுப்பிடிக்கப்படவில்லை

கண்டுப்பிடிக்கப்படவில்லை

இன்னமும் கூட 95% ஆழ்கடல் பகுதிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கதிரியக்க குப்பைகள்

கதிரியக்க குப்பைகள்

அமெரிக்க இராணுவம் 1944 - 1970 வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டுமே, நான்கு லட்சம் கெமிக்கல் குண்டுகள் மற்றும் 500 டன் கதிரியக்க குப்பைகளை கடலில் கொட்டியுள்ளது.

பத்தாயிரம் கண்டெய்னர்கள்

பத்தாயிரம் கண்டெய்னர்கள்

ஒவ்வொரு வருடமும் கடலில் பத்தாயிரம் கண்டெய்னர்கள் வரை தொலைந்து போகிறதாம். இதில் 10% கெமிக்கல் பொருட்கள் கொண்டவையாக இருக்கிறது. இவை கடலில் கசிந்தால் ஆபத்தை உண்டாக்கும்.

கடலில் சிறுநீர்

கடலில் சிறுநீர்

கடலில் சிறுநீர் கழிப்பது தவறில்லை, நமது சிறுநீர் யூரியாவில் இருக்கும் நைட்ரஜன் கடல் தாவரங்களுக்கு மிகவும் தேவையானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Facts About Ocean

Lesser Known Facts About Ocean
Story first published: Saturday, December 19, 2015, 12:27 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter