For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலாம் குலோத்துங்க சோழன் பற்றி பலரும் அறிந்திராத சரித்திர தகவல்கள்!!!

இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசன் ஒருவனைச் சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவான்.

|

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக ஆட்சிபுரிந்தவர்கள் சோழ மன்னர்கள். ஆயிரம் அலெக்ஸ்சாண்டருக்கு சமமாக வாழ்ந்தவன் இராஜேந்திர சோழன். உலகிலேயே முதல் முறையாக கடற்படை வைத்து பிற நாடுகளின் மீது படையெடுத்து வென்றவர்கள் சோழர்கள். எந்த கட்டிட தொழில்நுட்பமும் இல்லாத போதே, பூகம்பம் வந்தாலும் அழியாதவண்ணம் தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர்கள் சோழர்கள்.

இவர்களது கட்டிட திறனுக்கு எடுத்துக்காட்டாய் தஞ்சை பெரிய கோயில், கல்லணை என காலத்தினால் அழியாத சின்னங்கள் பலவன இருக்கின்றன. இந்த வரிசையில் நாம் முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டிய சோழ மன்னன் தான் முதலாம் குலோத்துங்க சோழன். இனி, முதலாம் குலோத்துங்க சோழன் பற்றி பலரும் அறிந்திராத சரித்திர தகவல்கள் பற்றி காணலாம்...

நன்றி: சோழ மன்னர்கள் வரலாற்று குறிப்புகள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிராஜேந்திர சோழனின் இறப்பு

அதிராஜேந்திர சோழனின் இறப்பு

கி.பி 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசன் ஒருவனைச் சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவான்.

சாளுக்கிய சோழன்

சாளுக்கிய சோழன்

ஆண் வழியில் இவன் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் இவன் சாளுக்கிய சோழன் எனப்படுகிறான். இவனது வழி வந்தவர்களும் சாளுக்கிய சோழர் என அழைக்கப்படுகின்றனர். இவன் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டான்.

ஆட்டம்கண்ட குலோத்துங்கன்

ஆட்டம்கண்ட குலோத்துங்கன்

இவன் திறமையான அரசனாக இருந்தாலும், இவன் காலத்தில் சோழப்பேரரசு ஆட்டம் காணத் தொடங்கியது. ஏறத்தாழ 70 ஆண்டு காலம் சோழர்களின் ஆட்சியின் கீழிருந்த ஈழத்தை, விஜயபாகு என்பவன் தலைமையிலான சிங்களப் படைகள் மீண்டும் கைப்பற்றிக் கொண்டன.

சேர, பாண்டிய நாட்டை அடக்கி வைத்த குலோத்துங்கன்

சேர, பாண்டிய நாட்டை அடக்கி வைத்த குலோத்துங்கன்

சேர நாட்டிலும், பாண்டி நாட்டிலும் கிளர்ச்சிகள் உருவாகின. ஈழத்தைக் கை விட்டாலும், பாண்டிய, சேர நாடுகளில் தோன்றிய விடுதலைப் போக்குகளைக் குலோத்துங்கன் அடக்கினான். திறை செலுத்த மறுத்த வட கலிங்கத்து மன்னனுக்கு எதிராகக் குலோத்துங்கனின் சோழர் படை கலிங்கம் வரை சென்று போராடி வெற்றி பெற்றது.

சுங்கம் தவிர்த்த சோழன்

சுங்கம் தவிர்த்த சோழன்

நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், சுங்கம் தவிர்த்த சோழன் என இவன் அழைக்கப்பட்டான். கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

இழப்புகளை சந்தித்த குலோத்துங்கன்

இழப்புகளை சந்தித்த குலோத்துங்கன்

சோழர்களின் நேரடி அரசு அமையாமல் போனதால் சிற்சில குழப்பங்களை குலோத்துங்கன் சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவுகளால் சில இழப்புகளும் நேர்ந்தன.

அடுத்தடுத்து போர்

அடுத்தடுத்து போர்

அரசுரிமையை அடைந்த உடனே சாளுக்கியனுடன் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது, அது மட்டும் இல்லாமல் பாண்டியர்களும் சேரர்களும் சந்தர்பத்தை பயன் படுத்திக் கொள்ள முயன்றதால் இவன் அரசு ஏறிய பின் தொடர்ந்து சில காலங்கள் போரிலும் கலகங்களை அடக்குவதிலும் செலவிட நேர்ந்தது.

ஈழத்தை இழந்ததற்கான காரணம்

ஈழத்தை இழந்ததற்கான காரணம்

இவ்வாறு அருகே நிகழ்ந்த குழப்பத்தினில் ஈழத்தில் நிகழ்ந்த கழகத்தை அடக்குவதில் சிரத்தை காட்டாமல் விட்டுவிட்டான். ஆதலால் நூறு ஆண்டுகள் இருந்து வந்து ஈழ ஆட்சி இவன் காலத்தில் நின்று போனது. ஈழ தேசத்தை விஜயபாகு கைப் பற்றி ஆட்சி புரிய துவங்கினான்.

குலோத்துங்கனின் குரு

குலோத்துங்கனின் குரு

குலோத்துங்கனின் குருவாகவும் அவனது பிரம்மராயராகவும் ராஜ ராஜ பிரம்மராயர் என்கிற வாசுதேவ பட்டர் விளங்கினர். இவர் திருவரங்கம் ரங்கநாதனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். சமயப் பற்றும் சாம்ராஜ்யப் பற்றும் கொண்டிருந்த இவரின் ஆலோசனைகளின்படிதான் பாண்டிய தேசம் மீதும் சேர தேசம் மீதும் படைப் எடுத்தான் குலோத்துங்க சோழன்.

பிரம்மராயர் பார்த்திவேந்திரர்

பிரம்மராயர் பார்த்திவேந்திரர்

குலோத்துங்கனின் பெரும் மதிப்புக்குரிய பிரம்மராயனாக விளங்கியவர் பார்த்திவேந்திரர். மதி நுட்பம் வாய்ந்த இவரின் ஆலோசனைகளின் படி வெளிநாட்டுத் தொடர்புகளை புதுபித்தான் மன்னன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

English summary

Lesser Known Facts About Kulothunga Cholan I

Do you know about the lesser known facts about Kulothunga Cholan I? read here.
Desktop Bottom Promotion