ராக்கெட் பயன்படுத்தி போரிட்ட திப்பு சுல்தான் ஆட்சியின் சிறப்புகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

சிறப்புமிக்க இந்திய அரசர்களில் திப்பு சுல்தானும் ஒருவர். இவர் ஹைதர் அலியின் இரண்டாவது மனைவியான ஃபாத்திமாவிற்கு மகனாக பிறந்தவர். ஹைதர் அலியின் மரணத்திற்கு பிறகு ஆட்சி அரியணையில் ஏறினார் திப்பு. திப்புவை இவரது நெருங்கிய வட்டம் மைசூரின் புலி என்று புனைப்பெயர் வைத்து அழைப்பார்கள்.

கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!

ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு துரத்த பிரான்ஸ் நாட்டு மாவீரன் நெப்போலியனுடன் திப்பு பேச்சு வார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் மற்றும் மைசூர் அரசுக்கு மத்தியில் நடந்த மூன்றாவது மற்றும் நான்காம் மைசூர் போரின் போது, ஆங்கில கூட்டுப் படைகளினால் தோல்வியுற்றார்.

மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!!!

தனது தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கடந்த 1799-ம் ஆண்டு மே நான்காம் நாள் போரின் போது உயிரிழந்தார். இவரது ஆட்சியின் சிறப்புகள் மிகவும் அற்புதமானது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போரில் ராக்கெட் தாக்குதல்

போரில் ராக்கெட் தாக்குதல்

திப்பு சுல்தான் போரில் ராக்கெட் தாக்குதல்களை பயன்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர். இதற்கு சான்றாக, வாலோபஸ் விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு வரைபடத்தில், போரில் ஆசியர்கள் ராக்கெட் பயன்படுத்தும் படம் உள்ளதையும் அது மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர் மேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பதையும் இந்திய முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.

விவசாயத்தில் புதுமை

விவசாயத்தில் புதுமை

அந்த காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரக பயிர்கள் என்று விவசாய துறையில் நிறைய புதுமைகளை புகுத்தியவர் திப்பு சுல்தான்.

கப்பல் தளம்

கப்பல் தளம்

இவரது ஆட்சி களத்தில் கப்பல் கட்டும் தளம் அமைத்து, பல பெரும் இராஜ்ஜியத்தையே வியப்பில் ஆழ்த்தியவர் திப்பு.

சகோதரத்துவம்

சகோதரத்துவம்

காலம், காலமாக இந்து, இஸ்லாமிய பிரச்சனை நிலவி வந்துக் கொண்டிருந்தாலும். தனது ஆட்சியில் இந்து இஸ்லாமி பிரச்சனைகள் ஏதுமின்றி சகோதரத்துவத்தை வளர்த்தவர் திப்பு சுல்தான்.

பொது விநியோகம்

பொது விநியோகம்

நாம் இப்போது செயல்பாட்டில் கடைபிடித்து வரும் பொதுவிநியோகத் திட்டத்தை, திப்பு அவரது ஆட்சியில் அப்போதே செயல்பாட்டில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி

வளர்ச்சி

திப்பு சுல்தான் தனது ஆட்சியில் நிறைய வளர்ச்சி திட்டங்களை கொண்டிருந்தார். அதன் மூலம் கிராமங்களும், நகரங்களுக்கு இணையாக வளர்ச்சி அடைய வைத்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Greatness Of The Tipu Sultan's Governance

Tipu Sultan is one of the great Ruler of India. He was a ruler of the Kingdom of Mysore. And Here we gonna see about his greatness in governanace.
Subscribe Newsletter