உங்களை பற்றி ஜாதகம் உள்ளடக்கி வைத்திருக்கும் ஐந்து இரகசியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஜாதகம் என்பது திருமண பொருத்தம் மட்டும் பார்ப்பதற்கான கருவி அல்ல. இது உங்களை பற்றிய விவரங்களையும், உங்கள் எதிர்காலத்தை பற்றிய தகவல்களையும் கூட அறிய உதவுகிறது. பெரும்பாலும் நாம் அனைவரும் நமது ராசியை அறிந்திருப்போம். நமது ராசியானது, நாம் பிறக்கும் போது சந்திரன் நிற்கும் நிலையை வைத்து கணிக்கப்படுவது ஆகும். (*சூரியனை வைத்து கணிக்கும் முறையும் உண்டு)

திருமணங்களில் ஜாதக பொருத்தங்களின் முக்கியத்துவம்!

நமது கிரகத்திற்கு மிகவும் அருகாமையில் இருக்கும் துணை கிரகம் சந்திரன் தான். எனவே, இதன் இயக்க வேகத்தை கணித்து, கணக்கிட்டு அண்ட வெளியை 108 பாகமாக பிரித்து அதில் சந்திரன் நிற்கும் நிலையை வைத்து ராசி கணிக்கப்படுகிறது.

பிறந்த தேதியை வைத்து உங்களுக்கு ஏற்ற துணையை கண்டறிவது எப்படி?

அண்ட வெளியை 12 பாகமாக பிரித்தால் அதில் ஒரு பாகத்தை ராசியாகவும் (12 ராசி), 108 ஆக பிரித்தால் அதன் ஒரு பகுதியை பாதமாகவும் கணிக்கப்படுகிறது. அதாவது சந்திரன் நிற்கும் நிலை அஸ்வினி எனில், 108 / 4 = 27, 27 நட்சத்திரங்கள் (அஸ்வினி முதல் ரேவதி வரை) என பிரிக்கிறார்கள். இதில் அஸ்வினி முதல் பாதம், இரண்டாம் பாதம் என நான்கு பாதங்கள் வரை பிறந்த நேரம் மற்றும் நிலையை வைத்து நமது நட்சத்திரம் கூறப்படும்.

உங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா...?

இனி, ஜாதகம் உங்களை பற்றி தெரிவிக்கும் ஐந்து இரகசியங்கள் பற்றிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொழில்

தொழில்

உங்கள் ஜாதகத்தை வைத்தே உங்களுக்கு எந்த தொழில் நன்கு வரும் என்று கண்டறிய முடியும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். நாம் பிறக்கும் நேரத்தில் நட்சத்திரங்களில் நிலைப்பாட்டை வைத்து உங்களது வலிமை என்ன, வலுவின்மை என்ன என்று கூற முடியுமாம். எனவே, உங்கள் ஜாதகத்தை வைத்து நீங்கள் எந்த துறையில் திறமைவாய்ந்தவராக இருப்பீர்கள் என கண்டறிய முடியுமாம்.

படைப்பாற்றல், செயலாற்றல்

படைப்பாற்றல், செயலாற்றல்

உங்கள் ஜாதகத்தை வைத்து, நீங்கள் படைப்பாற்றல் (Creative) அல்லது செயலாற்றல் (Engineering) போன்ற எந்த துறையில் திறன் வாய்ந்து செயல்படுவீர்கள் என்றும் கூற முடியுமாம். எனவே, ஜாதகம் உங்களது நாட்டம் எதை சார்ந்து இருக்கும் என்று கணித்துக் கூறுகிறது.

வலுவின்மை

வலுவின்மை

உங்களது வலிமை மட்டுமின்றி, உங்களது வலுவின்மையை பற்றியும் உங்களது ஜாதகத்தை வைத்து கண்டறிய முடியும். இதன் மூலமாக நீங்கள் உங்கள் வலுவின்மையை அறிந்து, அதற்கேற்ப உங்களை வலிமையான நபராய் மாற்றிக் கொள்ள முடியும்.

தொய்வு

தொய்வு

பெரும்பாலும் நமது தொழில் அல்லது வேலை ரீதியான வலுவின்மையை அறிவதால், நமது வேலையில் தொய்வு அல்லது நட்டம் இன்றி சிறந்து செயல்பட ஜாதகம் உதவுகிறது.

ஆளுமை, குணநலன்

ஆளுமை, குணநலன்

மேலும் உங்களது நட்சத்திரம் மற்றும் ஜாதகத்தை வைத்து உங்களது ஆளுமை திறன் எவ்வாறு இருக்கும் எனவும், மேலும் குணநலம் போன்றவற்றையும் கண்டறிந்து கூற முடியும்.

சொல் புத்தி, சுய புத்தி

சொல் புத்தி, சுய புத்தி

பொதுவாக மக்களில் மூன்று வகை, ஒன்று சொல் புத்தி, இரண்டு சுய புத்தி, மற்றொன்று இரண்டும் கெட்டது. இதில், நீங்கள் சொவ்லதை கேட்பவரா, சுயமாக சிந்திப்பவரா? அல்லது குழப்பவாதியா என்றும் கூட கண்டறிய முடியும்.

துயரம்

துயரம்

மேலும் ஜாதகத்தை வைத்து, உங்கள் வாழ்க்கையில் எந்த கட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. எந்த தருணங்களில் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை பற்றியும் அறிய முடியும்.

முன்ஜாக்கிரதை

முன்ஜாக்கிரதை

எனவே, இது போன்ற துயரம் ஏற்படும் தருணங்கள் பற்றி முன்கூட்டியே அறியும் போது, முன்பாதுகாப்பாக இருக்க ஜாதகம் உதவுகிறது. ஜாதகம் கூறும் இந்த தகவல்களை வைத்து நீங்கள் உங்கள் வாழ்க்கை பாதையை சிறந்த வகையில் அமைத்துக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Things Your Birth Chart Reveals About You

Five Things Your Birth Chart Reveals About You, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter