மகாபாரதம்! நிஜம் என்பதற்கான அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

மகாபாரதம், இவ்வுலகில் நிகழ்ந்த மாபெரும் இதிகாசம்! வாழ்வியலின் சாராம்சத்தை துளியும் குறைவில்லாது, தோய்வில்லாது புகட்டிய வரலாற்று காவியம். ஓர் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் காரணத்தை கருவாய் கொண்டு உலகையே உலுக்கிய மாபெரும் போர்கள் மூண்ட வீரப்பிரதேசம்! ஆசான்களை அவமதித்தல், பெண்மையை சூறையாடுதல், வினை விதைப்பவனின் விதி பயன், தீய இடத்தில் இருந்தும் நற்குணம் கொண்டவனின் கதி என வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதன் என்ன செயல் செய்தால், அவனுக்கு என்ன பலன் விளைவிக்கப்படும் என வாழ்வியலில் புரிதல் ஏற்பட, நம் மண்ணில் நிகழ்ந்தேறிய மாபெரும் இதிகாசம்.

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

பீஷ்மரின் பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிவை எட்டிய மகாபாரதத்தில், கண்ணனும், கர்ணனும் ஈடில்லா நாயகர்கள்! நிஜத்தை நிழலென கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு, இப்போது அறிவியல் பூர்வமாக மகாபாரதம் ஈடு இணையில்லா உண்மை சரித்திரம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மகாபாரதம் கடந்த கால சுவடு மட்டும் அல்ல. அது நிகழ்காலத்தின் விதை, எதிர்காலத்தின் கரு என நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் கண்ட நிகழ்வுகளும், இனி காணவிருக்கும் சம்பவங்களும் முன்பே மகாபாரதத்தில் கூறப்பட்டவை என்பதை நம்மில் எவ்வளவு பேர் அறிவோம்! இதிகாசத்தின் உண்மை பதிவுகளை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

மகாபாரத ரகசியம்: அர்ஜுனன் ஏன் தருமனை கொல்ல நினைத்தார்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரச வம்சங்களின் பதிவுகள்

அரச வம்சங்களின் பதிவுகள்

மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள அரச வம்சங்களில் 5௦-ற்கும் மேற்ப்பட்ட அரச வம்சங்கள் இந்தியாவில் ஆட்சியாற்றியதற்கான பதிவுகள் பல கல்வெட்டுகளின் மூலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கலியுகம் பற்றிய விவரங்கள்

கலியுகம் பற்றிய விவரங்கள்

மகாபாரதத்தில் கண்ணன் கலியுகத்தைக் கூறிய பல கூற்றுகள் நிகழ்காலத்தில் நாம் கண் முன்னே கண்டவையே. பல ஆயிர வருடங்களுக்கு முன் கூறிய கூற்றுகள் இப்போது நிகழ்கிறது என்பது எப்படி கதையாக முடியும். இது, இதிகாசம் பொய்யல்ல என்பதற்கான மிக முக்கியமான விஷயமாக திகழ்கிறது.

த்வராகா நகரம்

த்வராகா நகரம்

மகாபாரதத்தில் கிருஷ்ணனின் துறைமுக நகராக கூறப்பட்டுள்ள த்வராகா நகரம் தற்போதைய குஜராத் மாநிலத்தின் துறைமுக பகுதியில் கடலின் அடியில் கண்டறியப்பட்டுள்ளது. இதிகாசத்தில் கூறியவாறே அந்த துறைமுக நகரில் கோட்டைகளும், படகு நிறுத்தும் பகுதிகளும் இருகின்றன என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

த்வராகாவில் இயற்கை சீற்றம்

த்வராகாவில் இயற்கை சீற்றம்

இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளதை போலவே த்வராக நகரம் ஓர் இயற்கை சீற்றத்தின் காரணமாக கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பில் கடலினுள் மூழ்கிவிட்டது. இந்த சம்பவம் மகாபாரதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டைய காலத்து நகரங்கள்

பண்டைய காலத்து நகரங்கள்

மகாபாரத்ததில் கூறப்பட்டுள்ள பண்டைய காலத்து நகரங்களில் 35-ற்கும் மேற்பட்ட நகரங்கள் தற்போதைய இந்தியாவில் உள்ளதென அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அந்த காலத்தில் பயன்படுத்தியதாக கூறப்பட்ட போர் ஆயுதங்கள், நாணயங்கள், பாத்திரங்கள், முத்திரைகள் மற்றும் சுடுமண் பொருட்கள் என பலவன இப்போதும் அந்த இடங்களில் இருந்து அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ கிருஷ்ணரின் வம்சாவளி

ஸ்ரீ கிருஷ்ணரின் வம்சாவளி

ஸ்ரீ கிருஷ்ணரின் மகா ஸ்தான வம்சாவளியில் இருந்து வந்த 138 ஆவது அரசன் தான் சந்திர குப்தா மயூர்யா என வரலாற்று கூறுகள் குறிப்பிடுகின்றன.

கிரகங்கள் பற்றிய குறிப்பு

கிரகங்கள் பற்றிய குறிப்பு

மகாபாரதத்தின் பல்வேறு இடங்களில் வியாசர் எடுத்துரைத்துள்ளதில், கிரகங்களின் நிலைகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கால நிலைகளும் அதன் மூலம் மனிதர்களின் மத்தியில் ஏற்படும் நிலை மாற்றங்கள் பற்றியும் வியாசர் தெளிவாக கூறியுள்ளார். வான சாஸ்த்திரங்கள் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது எப்படி கதையாக முடியும்.

வரலாற்று சுவடுகள்

வரலாற்று சுவடுகள்

மயூரியா, குப்தா மற்றும் கிரேக்க சாம்ராஜ்ஜியம் பற்றிய பல குறிப்புகள் நமது புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போதைய உலகில் நிலைத்திருக்கும் இடங்கள் பற்றிய குறிப்புகள் அடங்கியுள்ள ஒரு வரலாறு எப்படி வெறும் கதையென கருதப்படலாம். மகாபாரதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த உண்மை சம்பவமே

அணுகுண்டுகள்

அணுகுண்டுகள்

ஜப்பானில் பிரதயோகிக்கபட்டது தான் இவ்வுலகில் வெடித்த முதல் அணுகுண்டாக கருத முடியாது. பாரத யுத்தத்தில் இந்தியாவில் அணுகுண்டுகள் பிரதயோகிக்கப் பட்டிருக்கலாம் என அமெரிக்க இயற்பியல் ஆசிரியர் ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் (Robert Oppenheimer) மிக நம்பகமாக கூறியிருக்கிறார்.

இராமாயணமும், மகாபாரதமும்

இராமாயணமும், மகாபாரதமும்

இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள சாம்ராஜ்ஜியங்கள் எந்த வேறுபாடுகள் இன்றி குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றும் அந்த அரசர்கள் மத்தியில் இருந்த உறவுகளும் கூட வேறுபாடின்றிக் கூறப்பட்டுள்ள குறிப்புகள் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Facts That Prove Mahabharata Happened For Real

    Do you know about the facts that prove mahabharata happened for real, read here.
    Story first published: Thursday, February 26, 2015, 14:57 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more