இஸ்லாமிய கடவுள் அல்லாஹ் பற்றி அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

அல்லாஹ் அல்லது அல்லாஹ் என்பது அல்-இலாஹ் என்பதாகும். அதாவது வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது அதன் பொருள். கடவுள், குதா, காட் என்ற பதங்கள் வணங்கப்படுபவை என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகின்றன. அதற்குச் சமமான பொருளை உடையதே அரபு மொழியில் உள்ள இலாஹ் என்ற பதம். வணங்கப்படுகின்ற எதனையும் இலாஹ் என்று கூறலாம்.

இஸ்லாமிய நோன்பின் ஆன்மீக ரீதியான அர்த்தம்!!!

இலாஹ் என்ற பொதுப் பெயருடன் அல் என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே அல்லாஹ் என்பதாகும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று. அல்லாஹ் என்னும் சொல் எந்த ஒரு பாலையும் குறிக்காது ( ஆண்,பெண்,பலவின்).அதை போன்றே பன்மையும் இல்லை.இந்நிலையிலேயே திருக்குர்ஆன் என்ற இசுலாமியர்களின் மறை அல்லாஹ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றது.

ரமலான் சிறப்பு கட்டுரைகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அல்லாஹ் சொல்லின் சிறப்பு

அல்லாஹ் சொல்லின் சிறப்பு

அல்லாஹ் என்ற சொல்லின் மாபெரும் சிறப்பு, அச்சொல்லிலிருந்து இடது பக்கமாக ஒவ்வொரு எழுத்தாக நீக்கினால் மிகுதியாக இருக்கும் சொல் அல்லாஹ் என்ற அர்த்தத்தையே தரும்.

அல்லாஹ் - அல்லாஹ்.

லில்லாஹ் - அல்லாஹ்.

லஹு - அல்லாஹ்.

ஹு - அவன் (அல்லாஹ்).

இந்தச் சிறப்பு வேறு எந்த மொழியிலும் இறைவன் என்னும் சொல்லுக்கு இல்லை.

துணை இல்லாத கடவுள்

துணை இல்லாத கடவுள்

அல்லாஹ் ஒருவரே துணை (Partner) இல்லாத கடவுள் ஆவார்.

உருவாக்கியவர்

உருவாக்கியவர்

இவர் தான் அனைத்தையும் உருவாக்கியவர். இவர் யாராலும் உருவக்கப்படாதவர். இவர் அன்பின் உருவம், ஆன்மாவின் உருவம்.

ஆதியும், அந்தமும்

ஆதியும், அந்தமும்

இவர் தான் தொடக்கம், இவர் தான் முடிவு. அல்லாஹ் யாரும் இல்லாத போது உதித்தவர், அனைவரையும் காக்க இருப்பவர் அல்லாஹ்.

இதயம் அறிந்தவர்

இதயம் அறிந்தவர்

அல்லாஹ் அனைத்து மக்களின் இதயங்களையும் அறிந்தவர். அல்லாவிடம் எதையும் மறைக்க முடியாது, தப்பிக்கவும் முடியாது.

அருளாளர்

அருளாளர்

அல்லாஹ் அனைவருக்கும் அருள் வழங்க கூடியவர். தவறு செய்பவர்களையும், திருத்தி, திருந்த வாய்ப்பளித்து அருள்பாலிப்பவர்.

சொர்க்கம் , நரகம்

சொர்க்கம் , நரகம்

அல்லாஹ் தனக்கு கீழ்ப்படிபவர்களை (Obey) சொர்கத்திற்கு அனுப்ப சத்தியம் செய்பவர், மறுத்து அநீதிகளுக்கு துணை போவோரை நரகத்திற்கு அனுப்புபவர்.

குரான் என்ன கூறுகிறது

குரான் என்ன கூறுகிறது

நீ அல்லாவை நம்பும் போது, அவர் கூறும் நல்ல வார்த்தைகளை கேட்டு நடக்கும் போது, அல்லாஹ் ஏன் உன்னை தண்டிக்க போகிறார், என்று கூறப்பட்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About Islam God Allah

Do you know about the facts about Islam god allah? read here.
Story first published: Saturday, July 18, 2015, 10:01 [IST]
Subscribe Newsletter