For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் பிரம்மிப்பூட்டும் விஷயங்கள்!!

|

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பரப்பளவு மக்கள் வாழ முடியாத பாலைவனமாக தான் இருக்கிறது. பெரும்பாலும் ஆஸ்திரேலியாவில் கடலோர பெரும் பகுதிகளில் தான் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதே போல ஆஸ்திரேலியாவில் நிறைய தீவுகள் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலான தீவுகள் மக்கள் வாழாமல் தனித்து தான் இருக்கின்றன.

ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகள் விரும்பும் ஒரு பகுதியாக இருக்க அங்கிருக்கும் கடலோர பகுதிகளும், குட்டி, குட்டி தீவுகளும், மக்களைவிட அதிகமாக காணப்படும் கங்காரு கூட்டமும் தான் காரணம். மேலும் சில பிரம்மிப்பூட்டும் விஷயங்கள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும். அவற்றை பற்றி இனிக் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
8000 தீவுகள்

8000 தீவுகள்

ஆஸ்திரேலியாவை சுற்றிலும் ஏறத்தாழ 8,222 குட்டி குட்டி தீவுகள் இருக்கின்றன. இதில் ஒரே ஒரு தீவு மட்டும் தான் ஆயிரம் சதுர அடி கிலோமீட்டர் அளவுக்கு அதிகமானது.

லேக் டிஸ்-அப்பாயன்ட்மென்ட்

லேக் டிஸ்-அப்பாயன்ட்மென்ட்

ஆஸ்திரேலியாவில் ஒரு குளம் இருக்கிறது, இதன் பெயர் "லேக் டிஸ்-அப்பாயன்ட்மென்ட்". இதன் நிலப்பரப்பு 82,000 ஏக்கர் ஆகும். ஒருகாலத்தில் இந்த குளத்தில் தெளிந்த நீர் இருந்ததாம். ஆனால், இப்போது வெறும் உப்பு தான் இருக்கிறதாம்.

Image Courtesy

ஊரை தாக்கிய ஒட்டகங்கள்

ஊரை தாக்கிய ஒட்டகங்கள்

கடந்த 2009ஆம் ஆண்டு ஆறாயிரம் ஒட்டகங்களுக்கு மேல் படையெடுத்து வந்தது போல ஒரு ஆஸ்திரேலியா நகரத்தினுள் தண்ணீருக்காக நுழைந்துவிட்டது.

லேக் ஹில்லர்

லேக் ஹில்லர்

லேக் ஹில்லர் என்பது வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு குளமாகும். இது 600 மீட்டார் நீளம் மற்றும் 250மீட்டார் அகலமும் கொண்டது. இது வெளிர்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

Image Courtesy

கங்காரு எண்ணிக்கை அதிகம்

கங்காரு எண்ணிக்கை அதிகம்

கடந்த 2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மக்கள் தொகை அளவு 2,15,07,717 ஆகும். ஆனால், அரசாங்கம் வெளியிட்டுள்ள கங்காருகளின் எண்ணிக்கை 3,43,03,677. மக்களை விட ஆஸ்திரேலியாவில் கங்காருகள் அதிகம் இருக்கின்றன.

ஒட்டக ஏற்றுமதி

ஒட்டக ஏற்றுமதி

சவுதிக்கு ஒட்டகங்களை ஏற்றுமதி செய்கிறது ஆஸ்திரேலியா. இதற்கு காரணம், ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒட்டகங்களின் எண்ணிக்கையும், சவுதியில் நிலவும் ஒட்டகங்களுக்கான தேவையுமே ஆகும்.

கண்டுபிடிக்க வேண்டியுள்ள உயிரினங்கள்

கண்டுபிடிக்க வேண்டியுள்ள உயிரினங்கள்

இதுவரை ஆஸ்திரேலியாவில் வாழும் 75% பூச்சி / விலங்கு உயிரினங்கள் உலகளவில் கண்டுபிடிக்கப்படாதவை என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Australia That Will Blow Your Mind

Do you know about the facts of Australia that will blow your mind? read here in tamil.
Story first published: Friday, November 13, 2015, 16:10 [IST]
Desktop Bottom Promotion