வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

கடைகளில் விற்கப்படும் நாம் உண்ணும் உணவுகள் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே ஆரோக்கியமானது என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள். ஏனெனில் இந்தியாவில் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட ஏராளமான பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பொருட்கள் இந்தியாவில் அனைத்து மக்களும் நல்லது என்று நினைத்து அன்றாடம் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

நீங்கள் தினசரி சாப்பிடும் உணவில் கலக்கப்படும் இரசாயனங்களும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும்!!!

என்ன ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம் நாங்கள் சொல்வது உண்மையே. இங்கு வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லைஃப்பாய் சோப்பு

லைஃப்பாய் சோப்பு

உங்களுக்கு ஒன்று தெரியுமா, நாம் பயன்படுத்தும் லைஃப்பாய் சோப்புக்களானது வெளிநாடுகளில் சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்று தடை செய்யப்பட்டுவிட்டது. மேலும் வெளிநாடுகளில் ஒருசில மிருகங்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவிலோ இதனை தான் நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறோம்.

ரெட் புல்

ரெட் புல்

எனர்ஜி ட்ரிங்ஸ் என்று விற்கப்படும் ரெட் புல் பிரான்ஸ், டென்மார்க் போன்ற பகுதிகளில் தடை செய்யப்பட்டுவிட்டது. ஏனெனில் இந்த பானமானது இதய நோய், மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியது என்பதால் தானாம். ஆனால் இந்தியாவில் இதனை நிறைய மக்கள் ஆற்றலை அதிகரிக்கும் என்று நினைத்து டப்பா டப்பாவாக வாங்கி குடிக்கிறோம்.

டிஸ்பிரின்

டிஸ்பிரின்

இந்தியாவில் விற்கப்படும் வலிநிவாரணி மாத்திரைகளில் ஒன்று தான் டிஸ்பிரின் என்னும் அஸ்பிரின். இதனை பெரும்பாலான வீடுகளில் காணலாம். ஆனால் இந்த மாத்திரை வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு விட்டது. ஏனெனில் இதனால் உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவிலோ இன்னும் விற்கப்படுகிறது

பூச்சிக்கொல்லிகள்

பூச்சிக்கொல்லிகள்

இந்தியாவைத் தவிர, மற்ற நாடுகளில் 60-க்கும் அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகள் தடை செய்யப்பட்டுவிட்டது. தசை செய்ததற்கு காரணம், பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க நிறைய மோசமான, மனிதரின் உயிருக்கே உலை வைக்கும்படியான கெமிக்கல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தான்.

பச்சை பால்

பச்சை பால்

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் சுத்திகரிக்கப்படாத பச்சை பால், அதில் தீமை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் கிருமிகள் இருப்பதால் தடை செய்யப்பட்டுவிட்டது.

ஜெல்லி மிட்டாய்

ஜெல்லி மிட்டாய்

இந்த வகையான மிட்டாய்கள் அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை. ஏனெனில் அங்கு இந்த வகை மிட்டாய்கள் தடைசெய்யப்பட்டுவிட்டது. இதற்கு காரணம் இந்த வகை மிட்டாய்கள் குழந்தைகளுக்கு தீவிர சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக பல ரிபோர்ட்டுகளில் தெரிய வந்துள்ளது. ஆனால் இவை இந்தியாவில் ஏராளமாக விற்கப்படுகிறது.

கிண்டர் ஜாய் சாக்லேட்

கிண்டர் ஜாய் சாக்லேட்

இந்தியாவில் குழந்தைகள் கிண்டர் ஜாய் சாக்லேட்டை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வகை சாக்லேட் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது விட்டது. ஏனெனில் இதுவும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த தீங்கை விளைவிக்கிறது என்பதால் தான்.

டி-கோல்டு டோட்டல்

டி-கோல்டு டோட்டல்

இது மற்றொரு பிரபலமான சளி, இருமல் பிரச்சனைக்கு இந்திய மக்கள் வாங்கி சாப்பிடும் ஓர் மாத்திரை. ஆனால் இந்த மாத்திரை பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஏனெனில் இது சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால்.

நிமுலிட்

நிமுலிட்

பொதுவாக பல வலிகளுக்கு போடப்படும் ஓர் வலி நிவாரணி மாத்திரை தான் நிமுலிட். இந்த வகை மாத்திரை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் மற்றும் இதர நாடுகளிலும் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஏனெனில் இது கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Everyday Things That Are Banned Abroad But Not In India

Here are some everyday things that are banned abroad but not in india. Read on to know more.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter