இந்திய வரலாற்றில் மிகுந்த பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்குகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது சென்னையை மிரட்டிக் கொண்டிருக்கும் மழையுடன் கூடிய வெள்ளத்தைப் போலவே, இந்திய வரலாற்றில் இதுப்போன்று மிகவும் மோசமான ஆனால் பல உயிர்களைப் பலி வாங்கிய வெள்ளங்கள் வந்துள்ளன. குறிப்பாக அந்த வெள்ளங்கள் இந்தியாவின் வடக்கு பகுதியில் தான் அதிக உயிர்களை காவு வாங்கியுள்ளது.

இங்கு இந்திய வரலாற்றில் ஏராளமான உயிர்களை பலி வாங்கிய அந்த வெள்ளங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1987 பீகார் வெள்ளம்

1987 பீகார் வெள்ளம்

1987 ஆம் ஆண்டு பீகாரில் உள்ள கோசி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 1,399 மக்கள் மற்றும் 5302 மிருகங்களின் உயிர் பறிக்கப்பட்டது. மேலும் 30 மாவட்டத்தைச் சேர்ந்த 29 மில்லியன் மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.

1998 அஸ்ஸாம் வெள்ளம்

1998 அஸ்ஸாம் வெள்ளம்

இந்திய வரலாற்றிலேயே மிகுந்த பேரழிவை ஏற்படுத்திய ஓர் வெள்ளப்பெருக்கு என்றால் அது 1998 ஆம் ஆண்டு அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு தான். இந்த வெள்ளத்தால் 21 மாவட்டத்தில் இருக்கும் 5,300 கிராமங்களில் உள்ள 47 லட்ச மக்கள் பாதிக்கப்பட்டதோடு, சுமார் 9.7 லட்ட ஹெட்டேர் விவசாய நிலமும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி 30,900 வீடுகள் பாதிக்கப்பட்டு, 156 பேர் இறந்தனர்.

2004 பீகார் வெள்ளம்

2004 பீகார் வெள்ளம்

2004 ஆம் ஆண்டு பீகாரில் வந்த வெள்ளத்தால் சுமார் 885 மக்கள் மற்றும் 3,272 விலங்குகள் வாழ்வை இழந்ததோடு, பீகாரில் உள்ள 20 மாவட்டத்தைச் சேர்ந்த 21,2 மில்லியன் மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளானார்கள்.

2005 மகாராஷ்டிரா வெள்ளம்

2005 மகாராஷ்டிரா வெள்ளம்

இது மற்றொரு மோசமான வெள்ள பேரழிவு. 2005 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் வந்த வெள்ளத்தால் சுமார் 5,000 மக்கள் இறந்தனர். இந்த வெள்ளத்தால் மும்பை நகரம் கடுமையான மழையால் மூழ்கியது. கடுமையான மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மும்பையில் உள்ள மக்கள் அனைவரும் பல நாட்களாக அலுவலகம், வீடுகளிலேயே முடக்கி வைக்கப்பட்டனர்.

2008 பீகார் வெள்ளம்

2008 பீகார் வெள்ளம்

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி கோசி ஏரிக்கரையில் ஏற்பட்ட உடைப்பால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கால் பல்லாயிர மக்கள் அழிக்கப்பட்டதோடு, 30 லட்ச மக்கள் இடம் பெயர்ந்தனர். இந்த நிகழ்வால் சுமார் 8 லட்ச ஏக்கர் விவசாய நிலமும் பேரழிவுக்கு உள்ளானது.

2010 லடாக் வெள்ளம்

2010 லடாக் வெள்ளம்

ஆகஸ்ட் 6, 2010 இல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் வந்த கடுமையான மழையினால் நிலச்சரிவு, மழை வெள்ளம் போன்றவை தூண்டிவிடப்பட்டு, 71 கிராமங்கள் பாதிப்பிற்குள்ளாகி, குறைந்தது 255 மக்கள் இறந்துவிட்டனர்.

2012 அஸ்ஸாம் வெள்ளம்

2012 அஸ்ஸாம் வெள்ளம்

கடுமையான மழையின் காரணமாக பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட உடைப்பால், 124 பேர் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி, இந்த வெள்ளத்தால் காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்த 13 இந்திய நீர்யானைகளும், 500 விலங்குகளும் பலியாயின.

2013 உத்ரகண்ட் வெள்ளம்

2013 உத்ரகண்ட் வெள்ளம்

2013 ஆம் ஆண்டு உத்ரகண்ட்டில் திடீரென்று மழை வெள்ளம் தூண்டிவிடப்பட்டு, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கு சுற்றுலா வந்தவர்களுள் சுமார் 1000 பேர் உயிரிழிந்தனர் மற்றும் 5,700-க்கும் அதிகமானோர் இறந்ததாக கருதப்பட்டனர். மேலும் இந்திய வரலாற்றிலேயே இந்திய ராணுவம் மக்களைக் காப்பாற்றுவதற்காக மிகவும் கடுமையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

2014 ஜம்மு மற்றும் காஷ்மீர் வெள்ளம்

2014 ஜம்மு மற்றும் காஷ்மீர் வெள்ளம்

2014 ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீரில் இடைவிடாத மழையினால், ஜீலம் நதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் சென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுமார் 138 மக்கள் பலியாயினர் மற்றும் இந்திய ராணுவத்தினர் 11,000 மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.

2015?

2015?

தற்போது சென்னையில் 2 நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக, சென்னை மாநகரமே தீவு போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையிலேயே மக்கள் இருக்க இடம், உண்ண உணவு இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். இதில் இன்னும் 4 நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2 நாட்களிலேயே தீவாகிவிட்ட சென்னை, இன்னும் 4 நாள் மழை பெய்தால் என்ன ஆகும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Deadliest Floods In Indian History

Here is a list of Deadliest Floods In Indian History. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter