பெண்களின் உடலைப் பற்றி ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்!!!

By: Aruna Saravanan
Subscribe to Boldsky

முதலில் நாங்கள் ஒன்றை தெரிவித்து கொள்ள விரும்புகின்றோம். அதாவது இந்த செய்தி எந்த வகையிலும் யாரையும் தனிப்பட்ட முறையில் பாதிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கின்றோம். இது பெரும்பாலான ஆண் பெண் பிரச்சனைகளுக்கு காரணமான விஷயங்களை எடுத்து கூறவே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம். பெண்களின் உடல் கூறுகளை ஆண்கள் அறிந்து கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும் அந்த பெண்ணின் மனதை பாதிக்காத வண்ணம் நடந்து கொள்வதென்பது ஆண்களின் கடமையாகும்.

ஆணை போலவே பெண்ணுக்கும் பல வித ஆசைகள் உண்டு என்பதை பல ஆண்கள் மறந்துவிடுகின்றனர். இதனால் தான் நினைப்பது ஒன்று, தன் மனைவி நடந்து கொள்வது ஒன்று என்று நினைத்து பல ஆண்கள் தங்கள் மனைவிகளை ஒதுக்குகின்றனர். மனைவியோ தன் கணவன் தன்னை மரியாதையாகவும், அன்பாகவும் நடத்துவதில்லை என்று புலம்புகின்றனர். இதனால் பல குடும்பங்களில் பலவித பிரச்சனைகள் வருகின்றது.

சரியான புரிதல் இருந்தால் மட்டுமே எந்த உறவும் நல்ல முறையில் இருக்க முடியும். மனைவி கணவனை புரிந்து கொள்வது போன்று கணவனும் மனைவியை புரிந்து கொள்ள வேண்டும். உடல் ரீதியான ஒன்றுதலை விட மன ரீதியான ஒன்றுதலை பெண்கள் மிகவும் விரும்புகின்றனர் என்பதை பல ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. இதை சரியாக புரிந்து கொண்டால் பல பிரச்சனைகளைத் தவிர்த்து நல்ல இன்பமயமான வாழ்வை வாழ முடியும். அதைப் பற்றி இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிளர்ச்சி அடைய பெண்கள் வெகு நேரம் எடுத்து கொள்வார்கள்

கிளர்ச்சி அடைய பெண்கள் வெகு நேரம் எடுத்து கொள்வார்கள்

ஆண்களை மிக சீக்கிரம் கிளர்ச்சி அடைய செய்துவிடலாம். அவர்களின் முடியை கோதுவதால் சில சில வருடல்களாலும் மயக்கி விட முடியும். ஆனால் பெண்கள் அப்படி இல்லை அதற்கென தனி கலையே வேண்டும். முன் விளையாட்டுகள் பலவற்றை செய்வதால் மட்டுமே அவர்களை கிளர்ச்சி அடைய செய்ய முடியும். அவர்களுடன் செக்ஸ் பற்றிய பேச்சுகளைப் பேசி, பல முன் விளையாட்டுகளை விளையாடுவதன் மூலமாகவும் தான் ஈர்க்க முடியும்.

பெண்களின் உணர்வுகளை மதிக்க கற்று கொள்ளுங்கள்

பெண்களின் உணர்வுகளை மதிக்க கற்று கொள்ளுங்கள்

தேவையில்லாத ஜோக்ஸ்களின் மூலம் அவர்களை காயப்படுத்தாதீர்கள். அவர்கள் தவறாக கூறினாலும், மோசமாக கிண்டல் செய்ய வேண்டாம். தெளிவாக எடுத்து கூறினாலே அவர்கள் புரிந்து கொள்வார்கள். அதை விடுத்து கிண்டல் நக்கல் செய்தால் உங்களை அவர்கள் ஒதுக்கி விடுவார்கள். உங்களின் சரி பாதியாக அவர்களை நினையுங்கள்.

மாதவிடாயின் பொழுது கவனமாக பார்த்து கொள்ளூங்கள்

மாதவிடாயின் பொழுது கவனமாக பார்த்து கொள்ளூங்கள்

அனைவரும் அறிவியல் அறிந்தவர்கள் தான். ஒரு பெண் மாதவிடாய் நேரத்தில் எவ்வளவு இன்னலுக்கு ஆளாகின்றாள் என்பதை அனைவரும் அறிவர். அந்த நேரத்தில் அவளுக்கு உற்ற துணையாக இருங்கள். சாக்லெட் வாங்கி கொடுங்கள். சூடான குளியலுக்கு உதவுங்கள். அப்புறம் என்ன உங்களையே சுற்றி சுற்றி வருவார்கள்.

பெண்கள் வாய்வை வெளியேற்றலாம்

பெண்கள் வாய்வை வெளியேற்றலாம்

பெண்களும் வாயுவை வெளியேற்றுவார்கள் ஆணை போலவே. ஆகையால் அந்த நேரத்தில் அவர்களை விமர்சிக்க வேண்டாம். அதை நீங்கள் இயல்பாக எடுத்து கொள்ளுங்கள்.

பெண்களைக் குறை கூற வேண்டாம்

பெண்களைக் குறை கூற வேண்டாம்

பெண்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள். திடிரென அவர்களின் எடை கூடும். அதற்காக அதையே விமர்சனம் செய்யாதீர்கள். உங்கள் மனைவி மாடல் இல்லை என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். அன்புக்குரிய மனைவியாக அவளை நடத்துங்கள், நிச்சயம் நீங்கள் எதிர்ப்பார்க்கும் அனைத்தையும் அவள் தருவாள்.

பெண்கள் கொஞ்சுவதை விரும்புவர்

பெண்கள் கொஞ்சுவதை விரும்புவர்

பெண்கள் எப்பொழுதும் படுக்கைக்கு மட்டும் அல்ல. அவர்களை நீங்கள் கொஞ்சி பாராட்ட வேண்டும் என்று எதிர்ப்பார்பார்கள். நீங்கள் அவர்களுடன் நிறைய விளையாடவும், உறையாடவும், மகிழ்ந்தால் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள்.

பெண்களின் உணர்வை உடல் மொழிகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம்

பெண்களின் உணர்வை உடல் மொழிகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம்

இரவு நேரத்தில் அவர்கள் ஒழுங்காக பல் துலக்கி படுக்கையை சரி செய்து பின் உறங்குவதற்கு முன் உங்கள் நெற்றியில் முத்த மிட்டு இரவு வணக்கத்தை சொன்னால் அவர்கள் இன்று ரெடி இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சந்தேகம் இருந்தால் மெல்ல காது மடலை கிளர்ச்சியூட்டிப் பாருங்கள் அப்பொழுதும் வேண்டாம் என்று மறுப்பு தெரிந்தால் தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவது ஆண்மைக்கு நல்லது.

பெண்களுக்கு இரட்டை ஆர்கஸம் உள்ளது

பெண்களுக்கு இரட்டை ஆர்கஸம் உள்ளது

பெண்களுக்கு இரட்டை ஆர்கஸம் உள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதாது அவர்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்களா என்பதை கவனிக்க வேண்டும். அவர்களும் உங்களைப் புரிந்து கொள்ளும்படி நீங்கள் நடப்பது மிகவும் முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

8 Things Men Must Know About The Female Body

This article lists out 8 things about the female body that men must know.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter