இந்த ஆண்டு இணையத்தில் தாறுமாறாக பிரபலமானவர்கள் : 2015 ஓர் பார்வை!

Posted By:
Subscribe to Boldsky

நேற்று தான் ஹேப்பி நியூயர் கூறியது போல இருக்கிறது. ஆனால், அதற்குள் இந்த ஆண்டே முடியப் போகிறது. எதிர்பார்த்த மாற்றங்கள், எதிர்பாராத நிகழ்வுகள், துயரங்கள் என நமது நெஞ்சத்தில் வலுவாக பல நினைவுகளை பதிய செய்திருக்கிறது இந்த 2015-ம் ஆண்டு. நெட்டிசன்கள் எனப்படும் இணையதள வாசிகளின் பங்கு 2015-ல் பெருமளவில் இருந்தது.

வயிறு குலுங்க சிரிக்க வைத்ததில் இருந்து, முக்கியமான விஷயங்களை சிந்திக்க வைக்கவும் இந்த நெட்டிசன்கள் தவறவில்லை என்று தான் கூற வேண்டும். மெம்ஸ் என்ற பெயரில் இவர்களது கையில், தங்கள் பேச்சால் பலர் சிக்கி தவித்தனர் இந்த ஆண்டு. அவர்களை பற்றிய சிறு தொகுப்பை பற்றி தான் இனிப் பார்க்கவிருக்கிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அட்டாக் புலி

அட்டாக் புலி

புலி திரைப்பட பாடல் வெளியீட்டு நிகழ்வில், விஜயை புகழ்ந்து புலி ரைமிங்கில் பேசி சமூக வலைத்தளத்தில் ஓவர் நைட்டில் ட்ரென்ட் ஆனார் டி.ஆர். இதை வைத்து எண்ணற்ற மெம்ஸ் உருவாக்கப்பட்டன.

தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க

தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க

ஒருமுறை செய்தியாளர் சந்திப்பின் போது, கோவமடைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க என்று கூறியதும் சமூக வலைத்தளத்தில் கன்னாபின்னாவென்று பிரபலமானது.

ஏர்டெல் 4ஜி பொண்ணு

ஏர்டெல் 4ஜி பொண்ணு

ஏர்டெல் 4ஜி பெண், நெட்டிசன்கள் முடிவு செய்துவிட்டால் அது கடவுளாக இருந்தாலும் கூட மெம்ஸ் போட்டு வறுத்தெடுத்துவிடுவார்கள். இதில் 4ஜி பெண் மற்றும் விதிவிலக்கு இல்லையே. விளம்பரம் எனிலும் கூட நமது நெட்டிசன்கள் அவரை விட்டுவைக்காமல் செம கலாய் செய்துவிட்டனர்.

இப்படி பண்றீங்களே மா

இப்படி பண்றீங்களே மா

சிட்டி முதல் பட்டிதொட்டி வரை புகழ்பெற்றது இந்த "என்னமா, இப்படி பண்றீங்களே மா". விஜய் டிவி அது, இது, எது நிகழ்ச்சியின் காமெடி நடிகர் இதன் மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைத்தது என அவரே ஓர் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை அமிர்தா

சென்னை அமிர்தா

சென்னை அமிர்ந்தா நெட்டிசன் கைகளில் சிக்கி மெம்ஸ் மூலம் இந்த வருடம் சின்னாபின்னமாகி போன மற்றுமொரு விளம்பரம். சினேகா, ராதிகா போன்றவர்களின் புகைப்படம் பரவலாக பயன்படுத்தப்பட்டது.

ஆஹான்

ஆஹான்

எப்போதோ வைகைப்புயல் பயன்படுத்திய இந்த வசனம், இந்த வருடம் அனைவரையும் கலாய்க்க பயன்படுத்தப்பட்டது. சாட்டிங் முதல் மெம்ஸ் வரை எங்கு கண்டாலும் தினமும் ஒரு ஆஹான் வந்துவிடும்.

இருட்டில் வாழ்பவன்

இருட்டில் வாழ்பவன்

தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமியின் நடிப்புக்கு இணையாக புகழ்பெற்றது "நான் இருட்டில் வாழ்பவன்" வசனம். நெட்டிசன்கள் அனைவரும் இவரது ரசிகர்கள் ஆனதற்கு இந்த வசனமும் கூட ஓர் காரணம்.

ரெயின் ரமணன்

ரெயின் ரமணன்

கொசறு செய்தியாக வந்துக் கொண்டிருந்த வானிலை அறிக்கை தலைப்பு செய்தியாக மாறியதற்கு காரணம் ரமணன் அவர்கள் தான். சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும் மக்கள் பயந்து பயந்து இவரது பேச்சை கேட்டனர். மாணவர்கள் மட்டும் இன்றும் பள்ளிக்கு விடுமுறை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் இவரை செய்திகளில் காண காத்திருந்தனர்.

ஆர்.ஜே. பாலாஜி, சித்தார்த்

ஆர்.ஜே. பாலாஜி, சித்தார்த்

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.... இந்த வருடம் தமிழக சிட்டிசன் மற்றும் நெட்டிசன் என அனைவராலும் கொண்டாடப்பட்டவர்கள் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் நடிகர் சித்தார்த். மேலும் முகம் தெரியாத பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள். மழை வெள்ளத்தில் இருந்து சென்னை இவர்களால் தான் பாதுகாக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

2015 Popular Guys Among Social Media

In 2015 Some people become popular among the social media suddenly by their talk. Check it out here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter