மனித மூளைகளை வைத்து பகடையாடும் பிக் பாஸ்!

Posted By: Aashika
Subscribe to Boldsky

பொழுது போக்காக துவங்கும் விஷயங்களை எல்லாம் நாம் எவ்வளவு சீரியசாக எடுத்து நம் நேரத்தையும், பணத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் டிவி நிகழ்சிகள் அதிலும் குறிப்பாக ரியாலிட்டி ஷோ என்று நம்ப வைக்க பிரயத்தனப்படும் நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

டிவி வழியாக நம் மூளைக்குள் நுழைந்து நம் உணர்வுகளுடன் விளையாடும் 'பிக் பாஸ்' திட்டமிட்ட உளவியல் கேம். சமூக வலைதளங்களில், வீடுகளில், அலுவலகங்களில் என எல்லா இடங்களிலும் இதைப்பற்றிய விவாதங்களே முன்னெடுத்திருக்கும் இந்த நேரம் தான் இப்போது சரியான தருணம் என்று நினைக்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விலகல் :

விலகல் :

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ இந்த சமூகத்துடன் இயைந்து வாழும்படியாகத்தான் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். இந்த சமூகத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம், வெறுப்பு இருக்கலாம்.

ஆனால் திட்டிக் கொண்டே சட்டைப்பையில் காசு வைக்கும் அப்பாவைப் போலத்தான் இந்த சமூகம். சமூகத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டால் ஏன் இந்த சமூகத்தை விட்டு விலக வேண்டும். வெறுப்பையும் அனுபவிக்கலாமே.

தனிமை :

தனிமை :

மனிதனை மெல்லக் கொல்லும் விஷம் இந்த தனிமை. தனியாய் இருக்கும் போது தான், பல வகையான சிந்தனைகள் வரும் அதை பகிராமல் உள்ளே போட்டு குழப்பி.... குழம்பி மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்போம்.

தனிமையை யாரும் விரும்பி ஏற்பதில்லை. தனிமை பிடிக்கும் என்பவர்கள் ஏதேனும் வெறுப்பு, கையாளாகாத தனத்தை வெளிப்படுத்த முடியாமல் தனிமையை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்களே தவிர அதனை விரும்பி ஏற்பதில்லை.

பிக் பாஸ் :

பிக் பாஸ் :

மனிதர்களை உளவியல் ரீதியாக தாக்குவது என்பது எளிது. அது சந்தோஷமாகவும் இருக்கலாம், கோபமாகவும் இருக்கலாம். பிக் பாஸ் நம்மை உளவியல் ரீதியாக அணுகி நம் மனங்களை கொதறிக்கொண்டேயிருக்கிறான்.

முதலில் சாத்தியப்படாத ஒரு விஷயத்தை சொல்லி ஆசையை தூண்டுகிறான். இந்த சமூகத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள் அல்லது நம்மைப் போன்ற பிம்பங்களை அங்கே காண்பிக்கிறான். தினமும் உணர்சிவசப்படும் வகையில் ஒரு சம்பவத்தை தூண்டிவிட்டு, தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறான் அல்லது பிரச்சனைகளை உருவாக்கி ஒரு வில்லனையும், துரோகியையும் அடையாளப்படுத்துகிறான்.

மனிதர்கள் :

மனிதர்கள் :

வெவ்வேறு பின்னனியில், வெவ்வேறு துறைகளைச் சார்ந்த மனிதர்களை ஒன்றாய் அடைத்து வைத்திருக்கும் வீட்டில் புறம் பேசுவதையும், வெறுப்பை உமிழ்வதையும் , காதலை வெளிப்படுத்துதலையும் தவிர வேறு விஷயங்களே இருக்காதா? பாவம், ஸ்க்ரிப்டில் இருந்தால் தானே பேசுவதற்கு. ஒவ்வொருவரைப் பற்றிய ஒவ்வொரு அபிப்பிராயங்கள் ஏற்படுத்தி, ஒருவர் நல்லவராக காட்டும் அதே நேரத்தில் இன்னொருவர் கேவலமானவராக காட்டப்படுகிறார்.

முகமுடி :

முகமுடி :

மனிதர்கள் எப்போதுமே ஒரு முகமுடியுடன் தான் இருக்கிறோம். இது மிகவும் அவசியமானதும் கூட, இடத்திற்கு தகுந்தாற் போல எல்லாம் நான் மாறமாட்டேன் எல்லா இடங்களிலும் நான் ஒரே மாதிரி தான் நடந்து கொள்வேன் என்று சொல்வது பொய்களில் உன்னதமானது. நாம் அணிந்திருக்கும் முகமுடி நம்மை காக்கும் அரணாக இருக்கலாம். குறைகளை மறைக்கும் கவசமாக இருக்கலாம்.

கேரக்டர் கேம் :

கேரக்டர் கேம் :

பிக் பாஸ் தொழிற்சாலையில் இருப்பவர்களில் ஓவியா பலருக்கும் பிடித்தமானவராக மாறிவருகிறார். பல காரணங்களை சொன்னாலும் மிக முக்கியமானது ஓவியா, எதையும் தன் மனதுக்குள்ளே ஏற்றுவதில்லை.

இதே போல ஜூலி மற்றும்

காயத்ரியை வெறுப்பதற்கும் பல காரணங்கள் இருக்கிறது . இவை எல்லாம் தனிப்பட்ட குணங்களா என்ன ? நம்மிடையேயும் அவ்வப்போது இவை எட்டிப்பார்க்கும் தானே. இந்த தொழிற்சாலையில் ஒருவரை அடையாளப்படுத்த அவரது தனிப்பட்ட குணங்களாக காட்டப்படுகிறது அவ்வளவே.

குடும்பம் :

குடும்பம் :

ஒரேயிடத்தில் கூடி சமைத்து சாப்பிடுவது தான் குடும்பமா? இல்லை. எத்தனை சங்கடங்களை சந்தித்தாலும் அரவணைத்துச் செல்வது, எத்தனை பிரச்சனைகளை சந்தித்தாலும் சமாதானம் கொள்வது, மனிப்பு கேட்காமலேயே மன்னித்தருள்வது, உணவை பகிர்வது போல அன்பையும் பகிர்வது.

பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது, எங்கள் வீடுகளுக்கு வாருங்கள் பிக் பாஸ், வெவ்வேறு குணங்களுடன் தான் நாங்கள் இணைந்து வாழ்கிறோம். குடும்பங்கள் பிக் பாஸ் தொழிற்சாலை போல இருக்காது என்பதையும் திரையில் காண்பியுங்கள்.

சோதனை :

சோதனை :

புறம் பேசுவதை தவிர,வஞ்சனையைத் தவிர வேற என்ன குணங்களை காண்பித்திருக்கிறீர்கள் பிக் பாஸ்? காதலை தொட்டீர்கள் அதிலும் கேவலமான யுத்தியை கையாண்டு கொச்சைப்படுத்தி திசை திருப்பிவிட்டீர்கள்.

குடும்பம் என்பது ஏதோ கூட்டு சதி செய்யும் கூடாரமாய் காட்சிப்படுத்தும் நீங்கள் எங்கள் வீடுகளுக்கு நிச்சயம் வருகை தர வேண்டும்.

பாலும் விஷமும் :

பாலும் விஷமும் :

முழுக்க முழுக்க சம்பாதிக்கும் இடமாக ஓர் வணிகத்தைச் சுற்றித்தான் இந்த தொழிற்சாலை இயங்குகிறது. மேலே பொழுது போக்கு என்ற சாயம் மட்டும் பூசப்பட்டிருக்கிறது. அதற்காக தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவுகளை எல்லாம் உட்கொள்ளாதீர்கள்.

கிண்ணத்தில் பாலும் விஷமும் கலந்து வைத்திருப்போம். அதில் விஷத்தை ஒதுக்கிவிட்டு பாலை மட்டும் குடியுங்கள் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானதோ அதைத் தான் இந்த பிக் பாஸ் செய்து கொண்டிருக்கிறார்.

திட்டமிடப்படா திட்டங்கள் :

திட்டமிடப்படா திட்டங்கள் :

இரண்டு நாட்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தாலே பைத்தியபிடித்தது போலாகிடும். சுமார் மூன்று மாதங்கள் யாரென்றே தெரியாத நபர்களுடன் இருப்பவர்களுக்கும் உளவியல் ரீதியாக பல சிக்கல்கள் உண்டாகும்.

தொழிற்சாலையில் கலப்படம் இல்லை என்பதை நிரூபிக்கவும், விளம்பரத்திற்காகவும் சில நேரங்களில் சோதனைகள் நடத்தப்படும் தானே அது போலத்தான் பரணியின் தப்பித்து ஓடும் ஆட்டமும், ஜூலியின் வயிற்று வலியும்.

சொல்ற பொய்ல கொஞ்சம் உண்மையும் கலந்திருக்கணும் என்பதில் பிக் பாஸ் உறுதியாக இருக்கிறார். தனிமையில் இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான உளவியல் சிக்கல்கள் ஏற்படுமோ அவற்றால் உடல் நலம் எப்படி பாதிக்கப்படுமோ அவற்றையெல்லாம் தேடியெடுத்து காட்சிப்படுத்தப்படுகிறது.

அடுத்ததாக யாருக்காவது தற்கொலை எண்ணம் எழலாம், கைகலப்பு ஏற்படலாம். ரசிகர்கள் எமோஷனலாகிடும் வகையில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான நபரோ அல்லது பிடிக்காத நபரோ இதில் முக்கிய வேடம் தரிக்கலாம்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

மன அழுத்தத்தில் ஊறி கிடப்பவரக்ளுக்கு இவர்கள் காட்டுகின்ற சிக்கல்கள் ஏற்படலாம். சிரித்து பேசி, விளையாடி மகிழ்ந்து அவ்வப்போது அழுதிடுபவர்களுக்கு உளவியல் ரீதியிலான மிகத் தீவிரமான பிரச்சனைகள் எப்படி ஏற்படும் என்பது ஒரு சின்ன சந்தேகம். தேதி குறைவாக இருப்பதாலோ என்னவோ?

அமைதி கொள் மனமே :

அமைதி கொள் மனமே :

தினமும் பிக் பாஸ் பார்கிறேன். விமர்சிக்கிறேன். கருத்துக்களை பகிர்கிறேன். ஆனால், ஓவியா போல மாற வேண்டும் என்றோ காயத்ரி போல ஒருவரை வாழ்நாளில் சந்திடக்கூடாது என்றோ ஜூலி போன்றவர்கள் கனவுகளிலும் வரக்கூடாது என்றோ நினைப்பதில்லை. மிக முக்கியமாக குடும்ப அமைப்பை விட்டு விலகி ஓடிட வேண்டும் என்று துளியும் யோசிப்பதில்லை.

ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே இதை எழுதி முடித்த நேரத்தில் காதில் கேட்ட வரிகள்

‘குளம் காட்டும் வெண்ணிலவாய் அழகான நம் குடும்பம்

கல் ஒன்று விழுவதால் கலையலாமா?

கல் ஒன்று விழுவதினால் தண்ணீரில் நெளி நெளியாய்

அலைபோடும் ஓவியத்தை ரசிக்கலாமே'

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Physiological Affects Of Reality Show

How reality shows impacts affect our Real Life?