கண்ணைப் பறிக்கும் வகையில் நீல நிற அனார்கலியில் பளிச்சென்று வந்த ஐஸ்வர்யா!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் கல்யாண் ஜூவல்லரி தனது மற்றொரு கிளையை அம்ரித்சரில் திறந்தது. இந்த திறப்பு விழாவிற்கு கல்யாண் ஜூவல்லரியின் பிராண்ட் அம்பாஸிடரான நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார். அப்போது அவர் அற்புதமான நீலம் மற்றும் வெள்ளை கலந்த அனார்கலியில் வந்திருந்தார். இந்த அனார்கலியில் ஐஸ்வர்யா ராய் பளிச்சென்று அழகாக காணப்பட்டார்.

சமீப காலமாக ஐஸ்வர்யா ராய் தனது பழைய உடல் அமைப்பைப் பெற்று, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். சரி, இப்போது அம்ரித்சரில் நடந்த கடை திறப்பு விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் மேற்கொண்டு வந்த ஸ்டைலைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா

அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா

ஐஸ்வர்யா அணிந்து வந்த நீலம் மற்றும் வெள்ளை கலந்த அனார்லியானது டிசைனர்களான அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா வடிவமைத்தது.

அழகான எம்பிராய்டரி

அழகான எம்பிராய்டரி

ஐஸ்வர்யா அணிந்து வந்த அனார்கலியின் ஹைலைட்டே நீல நிறத்தில் வெள்ளை நிற எம்பிராய்டரி செய்யப்பட்டிருப்பது தான். அதிலும் இந்த அனார்கலியின் துப்பட்டாவில் வெள்ளை நிற எம்பிராய்டரியுடன் கூட பார்டர் அட்டகாசமாக இருந்தது.

ஐஸ்வர்யாவின் மேக்கப்

ஐஸ்வர்யாவின் மேக்கப்

ஐஸ்வர்யா எப்போதும் போல அளவான மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார். அதில் கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு, கண்களுக்கு அழகாக கண் மை போட்டு வந்திருந்தார்.

ஐஸ்வர்யாவின் ஆபரணங்கள்

ஐஸ்வர்யாவின் ஆபரணங்கள்

ஐஸ்வர்யா இந்த அனார்கலிக்கு கோல்டு மற்றும் சில்வர் கலந்த காதணியையும், கைக்கு தங்க பிரேஸ்லெட்டையும் அணிந்து வந்திருந்தார்.

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்

ஐஸ்வர்யா நீல நிற அனார்கலிக்கு சைடு ஸ்வெப்ட் எடுத்து கர்ல்ஸ் செய்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Aishwarya Rai Looks Electrifying In Abu Sandeep

Aishwarya Rai looked stunning in an electric blue anarkali from designer duo Abu Jani & Sandeep Khosla. Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter