For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா? இதோ இப்படித்தான்...

By Mahibala
|

எவ்வளவு தான் தேய்த்து தேய்த்து சுத்தம் செய்தாலும் ஒரு ஸ்டார் ஹோட்டல் பாத்ரூம் பளபளப்பு கிடைப்பதில்லை. அதைவிட அந்த கறையை நீக்குவதற்குள் நாம் படாதபாடு பட வேண்டியிருக்கும்.

எரிச்சல் அதிகமாகிவிடும். ஆனால் வெறும் பத்து ரூபாய் செலவிலேயே சிரமப்படாமல் பளபளவென மாற்றிவிட முடியும். அப்படி சில குறிப்புகளை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுத்தம் பற்றிய நினைப்பு

சுத்தம் பற்றிய நினைப்பு

சுத்தம் சோறு போடும் என்ற பழமொழி உண்டு. இது உடல் சுத்தத்தை மட்டும் சொல்லவில்லை. நம்மை சுற்றிருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. குறிப்பாக பாத்ரூம், கழிவறைகளை சுத்தமாக வைத்திருப்பது நிறைய நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும். ஏனெனில் கோடிக்கணக்காண கிருமிகள் இங்கு தான் வாழும். எனவே நீங்கள் பாத்ரூமை சரி வர சுத்தம் செய்யா விட்டால் அதனால் நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது.

நம் வீட்டில் பயன்படுத்தும் பாத்ரூம்களை நீங்கள் என்ன தான் தேய்த்து தேய்த்து சுத்தம் செய்தாலும் ஒரு ஸ்டார் ஹோட்டல் பாத்ரூம் பளபளப்பு கிடைப்பதில்லை. இந்த சுத்தப் பராமரிப்பு ரகசியத்தை பற்றி நமது எக்ஸ்பட்ஸ் என்ன என்ன டிப்ஸ்களை உங்களுக்கு கூறியுள்ளார் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

வாஷ் பேஷன்

வாஷ் பேஷன்

நீங்கள் பல் துலக்கும் டூத் பேஸ்ட் அப்படியே வைத்துவிடுவது, வாய் கொப்பளித்தல், அழுக்கு, தலை சீவுகிற போது உதிர்கின்ற தலைமுடி எல்லாம் ஒன்றாக சேர்ந்து உங்கள் வாஷ் பேஷன் சுத்தத்தையும் அழகையும் கெடுத்து விடும். அதைவிட அதிலிருந்து வரும் துர்நாற்றம் சில சமயங்களில் குடலையே புரட்டிப் போட்டு விடும். இதை சரிசெய்ய பெரிதாக மெனக்கெடவும் வேண்டாம்.

லிக்விடு க்ளன்சர் அல்லது பினாயில் எடுத்து சிறிது தண்ணீரில் கலந்து, வோஷ் பேஷனில் ஊற்றி சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு நன்றாக பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இதை திரும்ப திரும்ப செய்து (வாரத்துக்கு இரண்டு முறையாவது) வரும் போது உங்கள் வாஷ் பேசன் பளபளக்கும்.

தேங்காய் நாரை நீங்கள் இயற்கை ஸ்க்ரப்பராகப் பயன்படுத்தலாம். அது இன்னும் கூடுதல் பளபளப்பைத் தரும்.

MOST READ:கர்ப்ப காலத்தில் நார்த்தங்காய் சாப்பிட்டால் குழந்தைக்கு இந்த நோயெல்லாம் வருமாம்... சாப்பிடாதீங்க

 தரை, டைல்ஸ்

தரை, டைல்ஸ்

வீட்டில் முழு பரப்பிலும் இருப்பது தரை. இந்த தரையைச் சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினம். ஏனென்றால் வீட்டில் உள்ள எல்லா அழுக்குகளும் இங்கே தான் தேங்கிப் போய் கிடக்கும். உங்கள் பாத்ரூம் டைல்ஸ்களை சுத்தம் செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. படாதபாடு மட்டும் தேய்த்து தேய்த்து கை வலிக்க கழுவினால் கூட அழுக்கு என்னமோ போகாது. உடனே நீங்கள் என்ன செய்வீர்கள். அதிக கெமிக்கல் நிறைந்த ஒரு பொருளை பயன்படுத்த முற்படுவீர்கள். ஆனால் இந்த கஷ்டமே இனித் தேவையில்லை. நீங்கள் வீட்டிலேயே எளிதாக ஒரு க்ளீன்சர் தயாரிக்கலாம்.

தயாரிக்கும் முறை

தயாரிக்கும் முறை

கொஞ்சம் வினிகர் அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை உங்கள் பாத்ரூம் டைல்ஸ்களில் தெளித்து சில நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு ஒரு துணியை கொண்டு துடைத்து எடுக்கவும். வினிகர் உங்களுக்கு அழுக்கை நீக்குவதோடு பேக்கிங் சோடா கெட்ட துர்நாற்றத்தை நீக்குகிறது. இதில் எந்த கெமிக்கல்களும் இல்லை. எனவே எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. ஆனால் பயன்படுத்துவதற்கு முன் கையுறை அணிந்து கொண்டு பயன்படுத்தவும்.

 டாய்லெட்

டாய்லெட்

நீங்கள் என்ன தான் தேய்த்து தேய்த்து கழுவினாலும் டாய்லெட் பெளலின் மஞ்சள் கறை போகவே போகாது. தண்ணீரின் கடினத் தன்மையால் இந்த கறை படிகிறது. இது பொதுவாக பீங்கானால் ஆக்கப்படுகிறது. எனவே இந்த கறைகளை போக்க ப்ளீச் முறையை பின்பற்றலாம். ஹார்பிக்கில் பல கலர்களும் வகைகளும் வந்து விட்டது. ஆனாலும் கறைகளும் துர்நாற்றமும் போன பாடில்லை என்று கவலைப்படுகிற உங்களுக்குத் தான் இந்த அருமையான டிப்ஸ்.

பயன்படுத்தும் முறை

1/2 கப் உலர்ந்த ப்ளீச் பவுடர் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்(அதுவரை டாய்லெட்டை பயன்படுத்த வேண்டாம்). கறைகள் மாயமாய் மறைந்த உடன் தண்ணீர் ஊற்றி கழுவி விடவும். உங்களுக்கு இயற்கை க்ளீனர் தேவைப்பட்டால் 3 கப் வினிகரை ஊற்றி டாய்லெட் ப்ரஷ் கொண்டு நன்றாக தேய்த்து கழுவவும்.

MOST READ:தினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க... எந்த நோயும் அண்டாது

 துடைக்கும் விதம்

துடைக்கும் விதம்

உங்கள் முகழகை காட்டும் கண்ணாடி மற்றும் தரைப்பகுதியில் தூசி படிந்து அழுக்காக இருந்தால் எப்படி இருக்கும். எனவே உங்கள் பாத்ரூம் கண்ணாடியையும் சுத்தமாக வைப்பது உங்கள் பாத்ரூம் அழகை அழகாக காட்டும். எனவே உடனடியாக கண்ணாடியை சுத்தம் செய்ய உங்கள் கையில் ஒரு துண்டு பேப்பர் இருந்தால் போதும்.

சுத்தம் செய்யும் முறை

1/3 கப் அமோனியாவை 1 கலன் வெந்நீரில் கலந்து கண்ணாடியில் தெளிக்க வேண்டும். பேப்பர் துண்டு அல்லது காட்டன் துணியை கொண்டு துடைக்க வேண்டும். அமோனியாவிற்கு பதிலாக நீங்கள் ஒயிட் வினிகரை கூட பயன்படுத்தி கொள்ளலாம். ஒயிட் வினிகரை நேரடியாக கண்ணாடியில் அப்ளே செய்து நியூஸ் பேப்பர் கொண்டு துடைக்கவும். பிறகு ஒரு சுத்தமான துணியை கொண்டு துடைத்தாலே போதும் உங்கள் கண்ணாடி பளபளக்கும். சிலர் ஹைட்ரஜன் பெராக்சைடும் பயன்படுத்துவார்கள். அதுவும் நல்ல பலனைத் தரும்

கண்ணாடியின் இடது மூலையில் தொடங்கி அப்படியே வலது மூலை வரை ஷிக் ஜாக் முறையில் தான் துடைக்க வேண்டும். அப்படித் துடைப்பது உங்களுக்கு திட்டு திட்டாக தெரியாமல் நல்ல பளிச் லுக்கைக் கொடுக்கும்.

குறிப்பு: உங்கள் பாத்ரூமில் எங்கேயும் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் கிருமிகளின் எண்ணிக்கையைப் பெருக்கும். துர்நாற்றத்தை உண்டாக்கும். தண்ணீர் தேங்குவது தான் கறைகள் ஏற்படுவதற்கான அடிப்படை காரணமாக இருக்கிறது. எனவே தூய்மை செய்து உலர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.

MOST READ:ஒரே பிரசவத்தில் 5 குழந்தையை பெற்றெடுத்த 23 வயது பெண்... 480 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிற அதிசயம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to make your dirty Bathroom to new

Housekeeping personnel in the hotel or service industry usually have closely guarded cleaning secrets which help them clean a bathroom with minimal time and effort. We bring you four of these expert bathroom cleaning tips. Warm water clean, vinegar uses, bleaching tips and so on.
Story first published: Tuesday, March 19, 2019, 18:30 [IST]
Desktop Bottom Promotion