Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
வாஸ்துப்படி, பாத்ரூம்மில் இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல அது பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும்...
Vastu Tips In Tamil: ஒருவரது வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால் அவர் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருக்க வேண்டும். நாம் குடியிருக்கும் வீட்டில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் சுற்றிக் கொண்டிருக்கும்.
வாஸ்துப்படி கட்டப்பட்டுள்ள வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருப்பதோடு, அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.

அனைவரது வீட்டிலும் கட்டாயம் பாத்ரூம் இருக்கும். வீட்டிலேயே பாத்ரூம்மில் தான் எதிர்மறை ஆற்றல் அதிகம் உருவாகும். இந்த பாத்ரூம் வாஸ்துப்படி இல்லாவிட்டாலோ அல்லது ஒருசில தவறுகளை செய்வதாலோ, அது வீட்டில் பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதோடு, ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும்.
எனவே வாழ்வில் பண பிரச்சனை வரக்கூடாது மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் குளியலறையை வாஸ்துப்படி கட்டுவதோடு, ஒருசில விஷயங்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இப்போது அதுக்குறித்து காண்போம்.
இந்த திசையில் குளியலறை கூடாது
வாஸ்துப்படி, ஒரு வீட்டில் குளியலறையானது வடக்கு அல்லது வடமேற்கு திசையில் தான் இருக்க வேண்டும். தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் குளியலறை இருந்தால், அது அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிப்பதோடு, நிதி நிலைமையை மோசமடையச் செய்துவிடும்.
சமையலறைக்கு அருகில் குளியலறை கூடாது
வாஸ்து சாஸ்திரத்தின் படி, குளியலறையானது சமையலறைக்கு எதிரில் அல்லது அருகில் இருக்கக்கூடாது. ஏனெனில் சமையலறை நெருப்பு ஆற்றலைக் கொண்டிருக்கும். அதே சமயம் குளியலறை நீர் ஆற்றலைக் கொண்டிருக்கும். இவை இரண்டுமே எதிர்மாறானவை. ஆகவே இவை இரண்டும் அருகருகில் இருந்தால், அந்த வீட்டில் முரண்பாடுகள் அதிகரிக்கும் மற்றும் பலவிதமான பிரச்சனைகள் அடிக்கடி எழும். அதேப் போல் கழிவறையில் இருக்கையானது மேற்கு அல்லது வடமேற்கில் இருக்க வேண்டும்.
குளியலறையில் ஜன்னல் அவசியம்
வாஸ்துப்படி குளியலறையில் கட்டாயம் ஒரு ஜன்னல் இருக்க வேண்டும். இதனால் குளியலறையில் உருவாகும் எதிர்மறை ஆற்றல் அந்த ஜன்னல் வழியே வெளியேறக்கூடும். அதுவும் அந்த ஜன்னல் கிழக்கு, வடக்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
பாத்ரூம்மில் நீர் கசியக்கூடாது
பாத்ரூம்மில் உள்ள குழாயில் நீர் எப்போதும் கசிந்தவாறு இருக்கக்கூடாது. ஒருவேளை அப்படி நீர்க்கசிவு ஏற்பட்டால், அதை உடனே சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால், நீர் கசிவதைப் போன்று வீட்டில் சேர்ந்துள்ள பணம் கரைந்து, பணத் தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும்.
வாளியை காலியாக வைக்கக்கூடாது
பலர் குளியலறையில் உள்ள வாளியை காலியாக வைத்திருப்பார்கள். ஆனால் வாஸ்துப்படி, குளியலறையில் இருக்கும் வாளியில் எப்போதும் நீர் இருக்க வேண்டும். வாளியை காலியாக வைத்தால், வீட்டில் பணம் சேராமல், பணம் வைக்கும் பெட்டியும் காலியாக இருக்கும். எனவே எப்போதும் வாளியில் நீரை நிரப்பி வைத்திருங்கள். இதனால் லட்சுமி தேவியின் கருணையால், வீடு மகிழ்ச்சியோடும் செழிப்போடும் இருக்கும்.
பாத்ரூம்மை திறந்து வைக்கக்கூடாது
நிறைய பேர் தங்களின் வீடுகளில் உள்ள பாத்ரூம்மை திறந்தே வைத்திருப்பார்கள். ஆனால் வாஸ்துப்படி பாத்ரூம் கதவை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும். திறந்து வைத்திருந்தால், பாத்ரூம்மில் உருவாகும் எதிர்மறை ஆற்றல் வீட்டினுள் பரவிவிடும். பின் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும் மற்றும் நிதி நிலையும் பலவீனமாகிவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
