Latest Updates
-
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க..
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
Dhaba Style Rajma Curry In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் செய்வது போன்று ஒரே சுவையில் சைடு டிஷ் செய்யாமல், வாய்க்கு ருசியாக ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் ராஜ்மா இருந்தால், அதைக் கொண்டு தாபா ஸ்டைல் ராஜ்மா கறியை செய்யுங்கள். இந்த ராஜ்மா கறி சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. அடிக்கடி ராஜ்மாவை செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், ராஜ்மாவை செய்வது அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

உங்களுக்கு தாபா ஸ்டைல் ராஜ்மா கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் ராஜ்மா கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராஜ்மா - 1/4 கிலோ (8 மணிநேரம் ஊற வைத்தது)
* முந்திரி - 12 (சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (அரைத்தது)
* சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 ஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
* வேக வைத்த ராஜ்மா
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த முந்திரி விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* கசூரி மெத்தி - சிறிது
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ராஜ்மாவை நீரில் 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் குக்கரில் ஊற வைத்த ராஜ்மாவை எடுத்துக் கொண்டு, நீரை ஊற்றி,
குக்கரை மூடி அடுப்பில் வைத்து 7 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த முந்திரியை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் மல்லித் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகாய் தூள்
சேர்த்து குறைவான தீயில் வைத்து, பச்சை வாசனை போக வேக வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்த ராஜ்மாவை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கிளறி 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள முந்திரி விழுதை சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது கசூரி மெத்தி, சர்க்கரை மற்றும் நெய்
சேர்த்து கிளறி இறக்கினால், தாபா ஸ்டைல் ராஜ்மா கறி தயார்.



Click it and Unblock the Notifications
