ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும்

Posted By:

Andhra Capsicum Tomato Rice Recipe in Tamil: தினமும் சாம்பார், புளிக்குழம்பு என்று சமைத்து போரடித்துவிட்டதா? சட்டென்று சமையலை முடிக்க வேண்டுமா? அதே சமயம் வாய்க்கு ருசியாகவும் ஒரு சமையலை செய்ய வேண்டுமா? அப்படியானால் உங்கள் வீட்டில் தக்காளியும், குடைமிளகாயும் இருந்தால், அதை வைத்து ஆந்திரா ஸ்டைலில் ஒரு அட்டகாசமான வெரைட்டி ரைஸ் செய்யுங்கள்.

Andhra Capsicum Tomato Rice Recipe How to Make at Home in Tamil

இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி, குடைமிளகாய் சாதம் இதுவரை நீங்கள் சாப்பிடாத சுவையில் வித்தியாசமாக இருக்கும். ஒரே மாதிரியான தக்காளி சாதம் சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த குடைமிளகாய் தக்காளி சாதம் புது சுவையைக் கொடுக்கும். குறிப்பாக, இதை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையில் இருக்கும், எனவே இதை அவர்களின் லன்ச் பாக்ஸ்க்கு செய்து கொடுக்கலாம்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்பெஷல் குடைமிளகாய் தக்காளி சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 3 ஸ்பூன் நெய் அல்லது பட்டர்
- 1 பிரியாணி இலை
- 1 இன்ச் பட்டை
- 2 கிராம்பு
- 1 ஸ்பூன் சீரகம்
- 3 கீறிய பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
- 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 3 நறுக்கிய தக்காளி
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- ¼ கப் பச்சை பட்டாணி
- 1 தோல் நீக்கி, சதுரங்களாக வெட்டப்பட்ட உருளைக்கிழங்கு
- 1 சதுரங்களாக வெட்டப்பட்ட பச்சை குடைமிளகாய்
- 1 கப் பாஸ்மதி அரிசி 1 கப் - 250மிலி
- 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- 1 கப் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு

செய்முறை:

- பாசுமதி அரிசியை தண்ணீரில் நன்றாக அலசி, 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கித் தனியே எடுத்து வைக்கவும்.

- உருளைக்கிழங்கைக் கழுவி, அதன் தோலை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

- ஒரு குக்கரைச் சூடாக்கி, அதில் வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும். வெண்ணெய் சூடானதும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- அதன்பின் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு, நறுக்கிய இஞ்சியைச் சேர்த்து ஒரு நொடி வதக்கவும்.

- பின்னர் ​​நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய தக்காளியை மஞ்சள் தூளுடன் சேர்த்து பிரஷர் குக்கரில் போடவும். நன்றாகக் கலந்துவிடவும்.

- பிரஷர் குக்கரில் பச்சை பட்டாணி மற்றும் நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- தக்காளி பாதி வெந்த நிலையில், நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயைச் சேர்த்து நன்கு கிளறவும்.

- பாசுமதி அரிசியிலிருந்து நீரை வடித்துவிட்டு, அதை குக்கரில் சேர்க்கவும். அதிகத் தீயில் அரிசியை மெதுவாக 1 நிமிடம் கிளறவும்.

- பின்னர் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை குக்கரில் சேர்க்கவும்.

- இறுதியாக 1 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். 1.5 டீஸ்பூன் உப்பு சேர்த்து ஒருமுறை கிளறவும்.

- பிரஷர் குக்கரை மூடி, விசில் போட்டு, குறைந்த தீயில் 20 நிமிடங்கள் வேகவைக்கவும்.

- குக்கரில் உள்ள அழுத்தம் முழுமையாக அடங்கியதும், மூடியைத் திறக்கவும். அவ்வளவுதான் தக்காளி-குடைமிளகாய் சாதம் தயார்.

- சாதத்தைக் கிளறுவதற்கு முன்பு, 5-10 நிமிடங்கள் ஆறவிடவும்.

[ of 5 - Users]
Story first published: Friday, October 16, 2026, 22:44 [IST]
Desktop Bottom Promotion