அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?

நவகிரகங்களில் சுக்கிரன் பெரும்பாலும் நேர்மறையான் பலன்களைக் கொடுக்கும் சக்திவாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறார். ஜோதிடத்தில், சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், அன்பு மற்றும் உறவுகளுடன் தொடர்புடையவர். அக்டோபர் 28, 2026 அன்று சுக்கிரன் துலாம் ராசியில் உதயமாகிறார். ஜோதிட கணிப்புகளின் படி, இந்த கிரக நிகழ்வு நிதி நிலை, உறவுகள் மற்றும் தொழில் வாய்ப்புகளில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும்.

Venus Rise on October 28 Bring Career Growth To These Zodiac Signs

சுக்கிரனின் இந்த உதயமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் பெரும் அதிர்ஷ்டத்தையும், நன்மைகளையும் அனுபவிக்கப் போகிறார்கள். இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிலும் நேர்மறையான் மாற்றங்களை ஏற்படுத்தும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் உதயம் தொழில் வாழ்க்கையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைக் வழங்கக்கூடும். சுக்கிரனின் இந்த உதயத்தால் அவர்களின் நிதிநிலை முன்னேற்றமடையப் போகிறது. அவர்களின் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். அவர்களுக்கு வியாபாரத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த கிரக மாற்றம் அவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவும் உதவும்.

தற்போது வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சிறப்பான நன்மைகளை அடைய முடியும். வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுக்கிரன் உதயமாகும் நேரத்திலிருந்து அவர்கள் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கும். அவர்களின் குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த சிக்கல்கள் இப்போது முடிவுக்கு வரும்.

துலாம்

சுக்கிரன் துலாம் ராசியின் அதிபதியாக இருப்பதால், இந்த ராசியைப் பொறுத்தவரை சுக்கிரனின் உதயம் அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நிறைய சம்பாதிக்கலாம், மேலும் அவர்களின் நீண்டகால நிலுவையில் உள்ள பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம். அவர்கள் முதலீடுகளைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், அதிலிருந்து பலன்களைப் பெற இதுவே சிறந்த காலம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமையாக மாறலாம்.அவர்களின் திட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியைத் தரும், மேலும் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலம் அவர்கள் சிறப்பான நன்மைகளை அடையலாம். அவர்களின் உடல்நலம் அவர்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இந்த சுக்கிரனின் உதயத்தால் எதிர்பாராத நன்மைகளை அடையப்போகிறார்கள். ஏதேனும் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கவோ அல்லது தற்போதுள்ள தொழிலை விரிவுபடுத்தவோ இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். அவர்கள் பல்வேறு முதலீடுகளிலிருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளைப் பெறலாம், மேலும் இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை பெரிதும் மேம்படும். வேலை தொடர்பாக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

வேலையில் இருப்பவர்கள் அவர்களின் கடின உழைப்புக்காக மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமண வாழ்க்கையில் இருந்து வந்த அவர்களின் பிரச்சினைகள் இப்போது சுமூகமாக முடிக்கப்படும், மேலும் அவர்கள் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடலாம். ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, October 16, 2026, 23:31 [IST]
Desktop Bottom Promotion