சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!

Mars Transit In Leo 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட. தற்போது செவ்வாய் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த செவ்வாய் நவம்பர் 12 ஆம் தேதி கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.

Mars Transit In Leo 2026 These Zodiac Signs Will Get More Benefits

இந்த சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சூரியனும், செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், இந்த செவ்வாய் பெயர்ச்சியானதாக சிறப்பானதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதைக் காண்போம்.

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். நீண்ட காலமாக கைக்கு கிடைக்காமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி பிரச்சனைகள் குறையும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் மற்றும் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கலாஙம். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் நிலை வலுவடையும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்கு ஒரு புதிய பொறுப்பு வரக்கூடும மற்றும் அதை நீங்கள் முழுப் பொறுப்புடனும் நம்பிக்கையுடனும் நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிலம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயம் கிடைக்கும். நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். மேலும் இக்காலத்தில் உங்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில் எடுக்கும் முக்கியமான முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல நன்மைகளைத் தருவதாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்பாடும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, October 16, 2026, 23:45 [IST]
Desktop Bottom Promotion