Latest Updates
-
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்!
Festive Skincare: பண்டிகை காலம் வந்துவிட்டாலே அழகான புதிய ஆடைகளை வாங்குவதில் அதிக கவனம் செலுத்தும் நாம், சரும பராமரிப்பிலும் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். பண்டிகை காலத்தில் நல்ல அழகான ஆடைகளை அணிந்து, முகம் மட்டும் பொலிவிழந்து இருந்தால் நன்றாக இருக்குமா என்ன? அதுவும் மேக்கப் போட்டு முகத்தை பொலிவாக காட்டுவதை விட, பண்டிகைக்கு முன்னரே சரும பொலிவை மேம்படுத்தும் ஒருசில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை வீட்டில் தயாரித்து பயன்படுத்தலாம்.

அதுவும் வீட்டில் உள்ள காபித் தூள் கொண்டு ஃபேஸ் பேக் மற்றும் ஃபேஸ் ஸ்க்ரப் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். அதுவும் இந்த காபித் தூளுடன் தேன், தயிர், கற்றாழை ஜெல் போன்ற பொருட்களைச் சேர்த்துப் பயன்படுத்தும் போது முகம் பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இப்போது பண்டிகைக் காலத்தில் சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக் மற்றும் ஃபேஸ் ஸ்க்ரப் குறித்து காண்போம்.
1. காபி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் முகத்தைக் கழுவி உலர்த்தி, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. காபி மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. காபி மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அமன் பின் குளிர்ந்த நீரைக் பயன்படுத்தி, முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
4. காபி மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
* இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு முகத்தைக் கழுவிவிட்டு, தயாரித்து வைத்துள்ளதை முகத்தில் தடவி கைகளால் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.
5. காபி மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
