Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வீட்டில் பணப்பிரச்சனை வரக்கூடாதா? அப்ப வாஸ்துப்படி பாத்ரூம்மை இந்த மாதிரி வெச்சுக்கோங்க..
Vastu Tips For Bathroom In Tamil: குடியிருக்கும் வீடு வாஸ்து சாஸ்திரத்தின் படி கட்டப்பட்டிருந்தால், அந்த வீட்டில் நல்ல செல்வம் சேர்வதோடு, அந்த வீட்டில் உள்ளோர் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும். வீட்டின் ஒவ்வொரு பகுதியும் வாஸ்துப்படி இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் உள்ள குளியலறை, கழிவறை வாஸ்துப்படி இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
வீட்டிலேயே கழிவறை, குளியலறையில் தான் எதிர்மறை ஆற்றல் அதிகம் உருவாகும். இந்த பகுதியில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அது வாழ்வில் பல தடைகளை உருவாக்குவதோடு, பல பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும். வாஸ்து சாஸ்திரத்தில் குளியலறை, கழிவறை தொடர்பான சில விதிமுறைகள் உள்ளன.

அவற்றை கருத்தில் கொண்டு பின்பற்ற முயற்சிக்க வேண்டும். இதனால் வீட்டில் சந்தோஷமும், செல்வமும் பெருகும். இப்போது கழிவறை, குளியலறை தொடர்பான சில வாஸ்து விதிகளைக் காண்போம்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள குளியலறையானது வடக்கு அல்லது வட மேற்கு திசையில் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் குளியலறை வீட்டில் தெற்கு, தென்கிழக்கு அல்லது தென் மேற்கு பகுதியில் இருக்கக் கூடாது.
* வாஸ்துப்படி, குளியலறை சமையலறைக்கு முன் அல்லது அதை ஒட்டி இருக்கக்கூடாது. அதேப்போல் கழிவறையின் இருக்கை மேற்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்க வேண்டும்.
* குளியலறையில் உள்ள தண்ணீர் பக்கெட்/வாளி எப்போதும் நிரம்பியிருக்க வேண்டும். ஒருவேளை வாளியில் நீர் இல்லாவிட்டால், அந்த வாளியை குப்புற கவிழ்த்து வைக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வம் சீராக பராமரிக்கப்படும்.
* வாஸ்துப்படி, கழிவறையில் நீல நிறத்தைப் பயன்படுத்த வேண்டும். அதாவது, கழிவறையில் பயன்படுத்தும் வாளி, கப் போன்றவை நீல நிறத்தில் இருக்க வேண்டும். ஏனெனில் நீல நிறமானது சந்தோஷத்தைக் குறிக்கிறது. எனவே நீல நிறத்தைப் பயன்படுத்தும் போது, அந்த வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
* வீட்டில் உள்ள கண்ணாடியானது குளியலறையின் கதவைப் பார்த்தவாறு இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால், அது அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
* குளியலறையில் கண்ணாடி வைப்பதாக இருந்தால், அதை வடக்கு அல்லது கிழக்கு சுவற்றில் தொங்க விட வேண்டும் மற்றும் கண்ணாடியானது சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருக்க வேண்டும். வாஸ்துப்படி, வட்டம் அல்லது நீள்வட்ட கண்ணாடிகள் நல்லதாக கருதப்படவில்லை.
* குளியலறையைப் பயன்படுத்திய பின், அதன் கதவை எப்போதும் மூடி வைக்க வேண்டும். திறந்து வைத்திருந்தால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் பரவுவதோடு, வீட்டில் உள்ளோரின் தொழிலில் பல தடைகளை சந்திக்க நேரிடும்.
* குளியலறையில் உள்ள குழாய்கள் எப்போதும் சரியாக இருக்க வேண்டும். நீர் ஒழுகிக் கொண்டிருந்தால், உடனே அதை சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால், பணமானது நீர்க்கசிவைப் போலே கரையும். குளியலறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அசிங்கமாக இருந்தால், அது வீட்டின் நிதி நிலையை பாதிக்கும்.
* வாஸ்துப்படி, வீட்டின் குளியலறையில் உள்ள டைல்ஸ் நிறம் மற்றும் சுவற்றின் நிறம் எப்போதும் அடர் நிறத்தில் இருக்கக்கூடாது. வெளிரிய நிறத்தில் இருக்க வேண்டும்.
* முக்கியமாக குளியலறையில் ஜன்னல் கட்டாயம் இருக்க வேண்டும். இது குளியலறையில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற உதவி புரியும். அதோடு, ஜன்னலானது கிழக்கு, வடக்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications