Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
ஒரே பிரசவத்தில் 5 குழந்தையை பெற்றெடுத்த 23 வயது பெண்... 480 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிற அதிசயம்
ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்து 480 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயத்தை நிகழ்த்திய பெண்ணைப் பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சி பற்றிய தொகுப்பு தான் இது.
ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. உயிர் போய்ட்டு திரும்ப வரும் காரியம் என்று சொல்லுவார்கள். அதிலும் தாயையும் சேயையும் காப்பாற்ற வேண்டும் என்றால் நிறைய கஷ்டங்களை தாண்டி வர வேண்டும்.

இது பெண்ணுக்கு வலி நிறைந்த விஷயமா இருந்தால் கூட தாய்மை சுகமான விஷயமும் கூட. ஒரு பிரசவத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுப்பதே கடினமான விஷயம். ஆனால் இந்த பெண்ணோ ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்து ஆச்சர்யம் அளித்துள்ளார். அதைப் பற்றிய ஒரு சின்ன கட்டுரை

இரட்டை குழந்தையா?
அலெக்ஸாண்டிரா கினோவா என்பவர் 23 வயதை அடைந்த பெண்மணி. இவர் கர்ப்பமாக இருந்து வந்தார். வயிறு பெரியதாக இருப்பதை பார்த்து இரட்டை குழந்தைகள் என்று தான் நினைத்தாராம். ஆனால் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது தான் தெரிந்தது அவர் 4 குழந்தைகளை சுமப்பது தெரிய வந்துள்ளது. இப்படியே தொடர்ந்து செக்கப் செய்து வந்த அவருக்கு அடுத்த மாதமே ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது. ஆமாங்க அவர் இப்பொழுது 5 குழந்தைகளை கருவில் சுமப்பது தெரிய வந்துள்ளது.

31 வது பிரசவம்
கர்ப்ப காலத்தின் 31 வது வாரத்தில் அவருக்கு சிசேரியன் செய்து குழந்தையை எடுத்தனர். இதில் சந்தோஷமான விஷயம் என்னவென்றால் 5 குழந்தைகளும் எந்த வித குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறந்தன. இருப்பினும் தாயையும் குழந்தைகளையும் ஸ்பெஷல் பாதுகாப்புடன் அவசர பிரிவில் வைத்து மருத்துவர்கள் கவனித்து வந்துள்ளனர்.

அப்பா செல்லம்
இந்த 5 குழந்தைகளும் அப்படியே அவருடைய அப்பா ஜாடையில் பிறந்திருப்பது அவரது தந்தைக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ஓரே சமயத்தில் 5 குழந்தைக்கு அப்பான அவரும் சந்தோஷத்தை தள்ளிப் போடாமல் கையோடு குழந்தைகளுக்கு பெயர் சூட்டி விட்டார். டேனியல், மைக்கேல், அலெக்ஸ் மற்றும் மார்ட்டின், கடைசியாக பிறந்த பெண் குழந்தைக்கு டெரிஸ்கா என்றும் தன் செல்லங்களுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாறு படைப்பு
செக் குடியரசு கருத்துப் படி ஒரே சமயத்தில் 5 குழந்தை பிறப்பு என்பது 480 வருடங்கள் கழித்து தற்போது நடந்துள்ளது என்கிறது. கண்டிப்பாக இது ஒரு ஆச்சரியமூட்டும் விஷயமே. கடவுளின் அருளால் அம்மாவும் 5 குழந்தைகளும் நலமாக இருக்கிறார்கள். மக்களும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி தங்களின் சந்தோஷத்தை பகிர்ந்து வருகிறார்கள். என்னங்க நீங்களும் உங்க வாழ்த்துக்களை இந்த தம்பதிக்கு சொல்லலாமே .



Click it and Unblock the Notifications