Latest Updates
-
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
உங்க வீட்டு டாய்லெட்டில் சிறுநீர் நாற்றம் அதிகமா வீசுதா? இந்த 4 பொருளை யூஸ் பண்ணி க்ளீன் பண்ணுங்க..
Urine Smell In Toilet In Tamil: பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் உள்ள வீட்டில் இருக்கும் கழிவறையில் சிறுநீர் நாற்றம் எப்போதும் அதிகம் வீசும். உங்கள் வீட்டு கழிவறையிலும் எப்போதும் சிறுநீர் நாற்றம் அதிகமாக வீசுகிறதா?
ஒவ்வொரு முறை கழிவறை செல்லும் போது வாந்தி வரும் அளவில் கடுமையான துர்நாற்றம் அடிக்கிறதா? கழிவறையில் வீசும் சிறுநீர் நாற்றத்தைப் போக்கும் இயற்கை வழிகளை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

பொதுவாக கழிவறையில் துர்நாற்றம் வீசுகிறது என்றால், சரியாக கழிவறையை சுத்தம் செய்வதில்லை என்று அர்த்தம். அதுவும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த டாய்லெட் க்ளீனர்கள் விலை அதிகமாக இருப்பதோடு, அதில் ஆபத்தான கெமிக்கல்கள் அதிகளவில் இருப்பதால், நிறைய பேர் வீட்டில் உள்ள இயற்கை பொருட்களைக் கொண்டு எப்படி கழிவறையை சுத்தம் செய்வது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.
நீங்களும் அப்படி விரும்புகிறீர்களானால், கீழே சிறுநீர் நாற்றத்தை முழுமையாக நீக்க கழிவறையை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
கழிவறையை சுத்தம் செய்ய தேவையான பொருட்கள்:
* பேக்கிங் சோடா
* எலுமிச்சை சாறு
* வெள்ளை வினிகர்
* டூத் பிரஷ்
* டாய்லெட் பிரஷ்
* அளவிடும் கப்
துர்நாற்றத்தைப் போக்கும் பேஸ்ட்டை தயாரித்து பயன்படுத்தும் முறை:
* முதலில் எலுமிச்சையின் சாற்றினை பிழிந்து தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த எலுமிச்சை சாற்றுடன், பேக்கிங் சோடாவை சேர்த்து, அதிக நீராக இல்லாமல், தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து கையில் ஒரு ரப்பர் கையுறையை அணிந்து கொள்ள வேண்டும்.
* பின் தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை கழிவறையின் அனைத்து பகுதிகளிலும் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* உங்கள் வீட்டில் வெஸ்டர்ன் டாய்லெட் என்றால், அந்த டாய்லெட் டேங்க்கின் மூடியைத் திறந்து, அதில் 1/2 கப் வினிகரை ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, டாய்லெட் டேங்க்கில் உள்ள நீரை ப்ளஷ் செய்ய வேண்டும். அதன் பின் 2-3 முறை நீரை ப்ளஷ் செய்த பின்னர், மீண்டும் 1/2 கப் வினிகரை ஊற்றி, ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், டேங்கில் உள்ள அழுக்கினால் வீசும் துர்நாற்றம் முழுமையாக நீங்கும்.
* பின்னர் கழிவறையில் உள்ள பேக்கிங் சோடா பேஸ்ட் நன்கு ஊறியதும், வினிகரை ஊறிய பகுதியின் மேல் ஊற்றி டாய்லெட் பிரஷ் கொண்டு, கழிவறையின் தரையை நன்கு தேய்க்க வேண்டும். வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவர்கள், பேக்கிங் சோடா பேஸ்ட்டை டூத் பிரஷ் பயன்படுத்தி, டாய்லெட் சீட் மற்றும் அதன் இடுக்குகளில் எல்லாம் தடவி தேய்த்து விட்டு பின் அதன் மேல் வினிகரை ஊற்றி, மீண்டும் தேய்த்துவிட்டு, இறுதியில் நீரை ஊற்றி கழுவி விட வேண்டும்.
* அதேப் போல் டாய்லெட் டேங்கில் உள்ள நீரையும் 2-3 முறை ப்ளஷ் செய்ய வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு வாரம் ஒருமுறை கழிவறையை கழுவி வந்தால், கழிவறையில் உள்ள அழுக்குகள் முழுமையாக அகற்றப்படுவதோடு, கழிவறையும் நன்கு சுத்தமாக இருக்கும். கழிவறையை சுத்தம் செய்த பின், நறுமணமிக்க மெழுகுவர்த்திகளை கழிவறையில் வைத்தால், கழிவறை எப்போதும் நல்ல மணத்துடன் இருக்கும்.



Click it and Unblock the Notifications