For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளியில் வீட்டின் இந்த பகுதியை மறக்காம சுத்தம் செய்யுங்க.. இல்ல லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க..

|

Diwali 2023: தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவாக ஒரு பண்டிகை வரவிருக்கிறது என்றால், வீட்டை நன்கு சுத்தம் செய்து அலங்கரிப்போம். அதுவும் தீப ஒளித்திருநாளான தீபாவளி பண்டிகையன்று வீட்டில் தீபங்களை ஏற்றுவோம்.

அதோடு தீபாவளி நாளில் லட்சுமி பூஜையை செய்து லட்சுமி தேவியின் அருளைப் பெற வழிபாடுகளை செய்வது வழக்கம். இப்படிப்பட்ட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒருவர் வாஸ்துப்படி வீட்டை சுத்தம் செய்து அலங்கரிப்பது மிகவும் நல்லது.

Diwali 2023: Vastu Based Tips To Decorate Your Home This Deepavali In Tamil

இதனால் லட்சுமி தேவியின் பரிபூர்ண அருள் கிடைப்பதோடு, குடும்பச் சூழல் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்து அமைதியாக இருக்கும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது நவம்பர் 12 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இப்போது வாஸ்துப்படி தீபாவளிக்கு வீட்டை எப்படி சுத்தம் செய்து அலங்கரிக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடைந்த பொருட்களை அகற்றவும்

உடைந்த பொருட்களை அகற்றவும்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உடைந்த பொருட்கள் மற்றும் பயன்படுத்தாத பொருட்கள் இருந்தால், அவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்த பொருட்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை உருவாக்குவதோடு, குடும்பத்தில் பிரச்சனைகளை அதிகரித்துவிடும். எனவே தீபாவளி அன்று செய்யும் லட்சுமி பூஜையின் முழு பலனைப் பெற நினைத்தால், முதலில் இந்த வகையான பொருட்களை வீட்டில் இருந்து அகற்றிவிடுங்கள்.

பழுதடைந்த பொருட்களை சரிசெய்யவும்

பழுதடைந்த பொருட்களை சரிசெய்யவும்

உங்கள் வீட்டின் கதவுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை தீபாவளிக்கு முன்னரே சரிசெய்துவிடுங்கள். மேலும் ஓடாத கடிகாரங்கள் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்துங்கள். ஏனெனில் இவையெல்லாம் ஒருவரது வாழ்வின் முன்னேற்றத்திற்கும், வெற்றிக்கும் பல தடைகளை ஏற்படுத்தும்.

பயன்படுத்தாத எலக்ட்ரானிக் பொருட்களை அப்புறப்படுத்தவும்

பயன்படுத்தாத எலக்ட்ரானிக் பொருட்களை அப்புறப்படுத்தவும்

தற்போது அனைவரது வீட்டிலும் பல வகையான எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளன. இந்த எலக்ட்ரானிக் பொருட்களின் ஒன்று உடைந்திருந்தாலும் அல்லது வேலை செய்யாவிட்டாலும், உடனே அவற்றை தீபாவளிக்கு முன்னரே சரிசெய்துவிடுங்கள். ஒருவேளை நீண்ட நாட்களாக வேலை செய்யாமல் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்துங்கள்.

விளக்கு, பூக்களால் அலங்கரிக்கவும்

விளக்கு, பூக்களால் அலங்கரிக்கவும்

தீபாவளி பண்டிகைக்கு வீட்டை லைட்டுகள், விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரியுங்கள். இது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, நேர்மறையான சூழ்நிலையையும் உருவாக்க உதவி புரியும். ஒருவரது வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருந்தால், அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

 பிரதான நுழைவாயிலை அழகாக வைத்துக் கொள்ளவும்

பிரதான நுழைவாயிலை அழகாக வைத்துக் கொள்ளவும்

ஒரு வீட்டில் பிரதான நுழைவாயில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது தான் நேர்மறை ஆற்றல், செல்வம், செழிப்பு ஆகியவற்றை ஈர்க்கிறது. எனவே எந்த ஒரு பண்டிகை வந்தாலும், முதலில் வீட்டின் பிரதான நுழைவாயிலை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.

வடக்கு பகுதியை சுத்தமாக வைத்திருக்கவும்

வடக்கு பகுதியை சுத்தமாக வைத்திருக்கவும்

ஒரு வீட்டின் வடக்கு, வடகிழக்கு மற்றும் பிரம்மஸ்தான பகுதிக்கு மிகவும் சிறப்பான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் வடக்கு பகுதியானது குபேர மண்டலம். மேலும் பிரம்மஸ்தான பகுதி எந்த பொருட்களுமின்றி சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் வீட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

கல் உப்பு கலந்த நீரால் துடைக்கவும்

கல் உப்பு கலந்த நீரால் துடைக்கவும்

தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்யும் போது, குறிப்பாக வீட்டைத் துடைக்கும் போது நீரில் சிறிது கல் உப்பை சேர்த்து துடையுங்கள். ஏனெனில் கல் உப்பு வீட்டின் எதிர்மறை ஆற்றலை உறிஞ்சி, வீட்டை தூய்மையாக்க உதவுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்க சிறந்த வழி இது தான்.

ஸ்வஸ்திகா சின்னம்

ஸ்வஸ்திகா சின்னம்

ஸ்வஸ்திகா சின்னம் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த சின்னத்தை வீட்டின் நுழைவாயிலில் வரைந்தால், அது அதிர்ஷ்டத்தை ஈர்க்கும். குறிப்பாக பிரதான நுழைவாயிலின் இரு பக்கமும் ஸ்வஸ்திகா சின்னத்தை வரைய வேண்டும். இது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற உதவுவதோடு, வீட்டின் செல்வத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diwali 2023: Vastu Based Tips To Decorate Your Home This Deepavali In Tamil

Diwali 2023: Here are some vastu tips that one should follow to decorate your home this Deepavali. Read on to know more...
Desktop Bottom Promotion