For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2021: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்!

புகையிலையினால் ஏற்படக்கூடிய நோய்தொற்று மற்றும் மரணங்கள் குறித்து உலக அளவில் மக்களிடையே கவனத்தை ஈர்க்கும் விதமாக, 1987 ஆம் ஆண்டு, மே மாதம் 31 ஆம் தேதியை, உலக புகையிலை எதிர்ப்பு நாளாக WHO நிர்ணயித்தது.

|

ஆண்டு தோறும் சுமார் 8 மில்லியன் மக்கள் புகையிலையால் உயிரிழக்க நேரிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. அதில் நேரடியாக புகையிலை உபயோகிப்பர்களின் எண்ணிக்கை தான் அதிகம். மேலும், புகையிலை பிடிப்பவர்களின் அருகில் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.2 மில்லியன் ஆகும். எனவே, புகையிலையினால் ஏற்படக்கூடிய நோய்தொற்று மற்றும் அதனால் நிகழக்கூடிய மரணங்கள் குறித்து உலக அளவில் மக்களிடையே கவனத்தை ஈர்க்கும் விதமாக, 1987 ஆம் ஆண்டு, மே மாதம் 31 ஆம் தேதியை, உலக புகையிலை எதிர்ப்பு நாளாக உலக சுகாதார அமைப்பானது நிர்ணயித்தது.

World No Tobacco Day: Quit Smoking To Avoid These Deadly Diseases

புகையிலை மற்றும் நிக்கோட்டின் தயாரிப்புகள், இளைஞர்களை ஈர்ப்பதற்காக புகையிலை தயாரிப்பு நிறுவனங்கள், பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எனவே, புகையிலையை எதிர்த்து சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் மூலம் புகையிலை கையாளுவதில் இருந்து இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதையே உலக புகையிலை எதிர்ப்பு நாள் 2021 நோக்கமாகக் கொண்டுள்ளது.

புகையிலை பயன்பாட்டின் ஆரோக்கிய விளைவுகள் குறித்த தொடர் கட்டுரைகளை வெளியிடுவதன் மூலம் நாங்கள் புகையிலை எதிர்ப்பு பிரச்சாரத்தில் பங்கேற்கிறோம். இந்த கட்டுரையில், புகையிலை புகைப்பதால் ஏற்படக்கூடிய பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகையிலையால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகள்

புகையிலையால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகள்

உலகிலேயே அதிக அளவில் புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சீனாவில் தான் அதிகம் உள்ளது, அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, உலகம் முழுவதிலும் உள்ள புகைபிடிப்பவர்களில் 12% பேர் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவில் சுமார் 120 மில்லியன் புகைப்பிடிப்பவர்கள் உள்ளனர். மேலும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பழக்கமானது 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொல்கிறது. இது அனைத்து இறப்புகளிலும் 9.5% ஆகும். நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், இந்த கொடிய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து, இப்போதே புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள். அது தான் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் நல்லது.

புற்றுநோய்

புற்றுநோய்

புற்றுநோயால் ஏற்படக்கூடிய இறப்புகளுக்கு முக்கிய காரணமானது நுலையீரல் புற்றுநோய். மேலும் இந்த வகை புற்றுநோய்க்கு காரணமாக புகைபிடிப்பதே முதலிடத்தில் உள்ளது. வாய், குரல்வளை, தொண்டை, உணவுக்குழாய், சிறுநீரகம், கருப்பை வாய், கல்லீரல், சிறுநீர்ப்பை, கணையம், வயிறு, பெருங்குடல் / மலக்குடல் மற்றும் மைலோயிட் லுகேமியா ஆகிய புற்றுநோய்களுக்கும் புகைபிடிப்பது ஒரு காரணமாகிறது.

நுரையீரல் நோய்கள்

நுரையீரல் நோய்கள்

புகைபிடிப்பதால், நுரையீரல் புற்றுநோயைப் போலவே பல நுரையீரல் நோய்களை உண்டாக்கக்கூடும். புகைபிடிப்பவர்களுக்கு சிஓபிடி அல்லது நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் உருவாவதற்கான அபாயம் உள்ளது. இது நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் எம்பிஸிமா இரண்டையும் உள்ளடக்கியது. துரதிர்ஷ்டவசமாக, இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் புகைப்பிடிப்பதை விட்டுவிடுவது அறிகுறிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, சேதம் மோசமடைவதைத் தடுத்திட உதவும். புகைபிடிப்பதால், நிமோனியா மற்றும் ஆஸ்துமாவின் அறிகுறிகளும் மோசமாகக்கூடும்.

இதய நோய்

இதய நோய்

ஒவ்வொரு ஐந்து இதய நோய்களில் ஒருவருக்கு புகைப்பிடிப்பதே காரணமாக உள்ளது. சிகரெட் புகையிலிருந்து வெளிவரும் நிக்கோட்டின் தமனிகள் கடினமாவதற்கு வழிவகுக்கும். அதனால் இதயம் கடினமாக வேலை செய்யத் தொடங்கி, இதயத் துடிப்பை அதிகரிப்பதோடு, இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்திடும். மேலும், இது பக்கவாதத்திற்கு முக்கிய காரணமாகிவிடும். கரோனரி தமனி நோய், புற தமனி நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்திற்கும், புகைபிடித்தலுக்கும் நிறைய தொடர்பு உள்ளது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

புகைப்பிடிக்காதவர்களை விட, புகைபிடிப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் உருவாவதற்கான வாய்ப்பு 30-40% அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், புகைபிடிக்காதவர்களை விட நோயைக் கட்டுப்படுத்துவதில், உங்களுக்கு சிக்கல் அதிகம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். புகைபிடித்தல் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, இன்சுலின் பயன்படுத்தும் உங்கள் உடலின் திறனைக் குறைப்பதே இதற்குக் காரணம்.

காசநோய்

காசநோய்

புகைபிடித்தல் என்பது காசநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று. இது முக்கியமாக மைக்கோபாக்டீரியம் காசநோயால் ஏற்படும் ஒரு தொற்று வான்வழி நோயாகும். காசநோய் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கினரை பாதிக்கிறது. புகையிலை பயன்பாடு நுரையீரலை சேதப்படுத்தும் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும், இதனால் புகைபிடிப்பவர்கள் காசநோய் தொற்றுக்கு ஆளாக நேரிடக்கூடும். புகைப்பிடித்தல் காசநோயைக் குறைக்கும் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அது மீண்டும் மீண்டும் வருவதற்கான ஆபத்தையும் அதிகரிக்க செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World No Tobacco Day: Quit Smoking To Avoid These Deadly Diseases

Today is World No Tobacco Day. Here are some deadly diseases that smoking tobacco can cause. Read on...
Desktop Bottom Promotion